Sunday 9 July 2023

சொர்ணலதா

 1991 ல் வெளிவந்த ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில்




🌹 “நீ எங்கே ….என் அன்பே…” என்ற பாடலில் சொர்ணலதா அவர்கள் குரலில் இருக்கும் தேடல் காற்றில் கலந்து நம் மனதை முகம்தெரியாத ஒரு காதலை நிச்சயம் தேட வைத்துவிடும். ....வள்ளி
2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே ‘ திரைப்படத்தில் ”

🌹எவனோ ஒருவன் வாசிக்கிறான் …..” பாடல் நம் மனம் வாழ்க்கையில் தொலைத்த யாரையோ தேடவைத்து விடுகிறது. இசைக்கருவிகளில் புல்லாங்குழலுக்கு என்று ஒரு இனிமை உண்டு. அதையும் மிஞ்சிவிடக் கூடிய இனிமை சொர்ணலதா அவர்களின் குரலிற்கு உண்டு என்பது இசைப் பிரியர்களுக்கு தெரிந்த உண்மை.
விருப்பமான சொர்ணலதாவின் பாடல்களை

🌹நட்புகள் தொடரலாம்...
பொதுவாக இசை என்பது செவி வழி நமக்குள் செல்லக்கூடிய ஒன்று. ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் மட்டும் ஒரு கூர்மையான அம்பு போல நேரடியாக நம் இதயத்திற்குள் செல்லக்கூடிய வல்லமை பெற்றது.
ஜானகி அம்மா, S.P.B போன்றவர்களின் குரலை நம்மால் எந்தப் பாடலிலும் எளிதாய் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் ஒவ்வொரு பாடல்களிலும் தனித்துவமாய் அமைந்து இருக்கும்.

🌹 ஏக்கப்பாடல், காதல் பாடல், ரொமான்ஸ் பாடல், கிராமியப் பாடல், துள்ளல் பாடல்கள் என்று எந்தமாதிரியான பாடல்களிலும் சொர்ணலதா அவர்களின் குரல் தனித்து ஒலிக்கும். மேலும் இசையமைப்பாளர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் நிச்சயம் ஹிட் கொடுத்து விடக் கூடிய மந்திரக் குரல் அது......
80 மற்றும் 90 களில் பெண்களுக்கு தாங்கள் நினைப்பதை எல்லாம் சொல்ல இப்போது போல.

🌹facebook , twitter , whatsapp என்று எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்வின் அத்தனை ரகசியமும் அவர்கள் மனதைத் தாண்டி அதிக பட்சம் அவர்கள் டைரிகளுக்குள்தான் ரகசியமாய் மறைந்து இருக்கும்.
பல பெண்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களின் வரிகளை தங்கள் டைரியில் எழுதி வைத்து இருப்பர்.
இன்றும் அந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதில் சொர்ணலதாவின் குரலும் சேர்ந்தே ஒலிக்கும். சொர்ணலதா அவர்களின் குரல் பலருடைய உணர்வுகளின் உச்சம் என்றே சொல்லலாம்.

🌹அந்த அரபிக் கடலோரம்……
🌹திருமண மலர்கள் தருவாயா….. போன்ற பாடல்கள் சொர்ணலதா குரலில் இன்றும் கேட்கையில் கல்லூரியின் இனிப்பான நினைவுகள் மனதிற்குள் தேனைப் போல ஊறுகிறது.....

இன்றும் ‘வள்ளி’ படத்தில் வரும்.

🌹“என்னுள்ளே… என்னுள்ளே…” பாடலை பலர் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் போதும், சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளில் வளரும் இளம் பாடகர்கள் அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதைப் பார்க்கும் போதும்...

சத்ரியன் திரைப்படத்தில்
🌹மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
பலருடைய பேருந்துப் பயணங்களின் தனிமையில் ஒரு தாயாய், காதலியாய், சினேகிதியாய் சொர்ணலதா தன் குரல்களால் நம்மோடு பயணித்து இருக்கிறார்.
இன்றும் சில பாடல்களில் சொர்ணலதா குரலைக் கேட்கும் போது படத்தின் காட்சி அமைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதை விட அவரது குரலிற்குள் நாம் பொதித்து வைத்த அந்த நினைவுகள்தான் நமக்குள் மெல்ல அசைவாடும்.

இதுவே சொர்ணலதாவை
“அவருக்கு முன்பும், அவருக்குப் பின்னும் யாரும் அவர் போல இல்லை”
என்ற தனித்துவ அடையாளத்துடன் அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா தேவதையாக அவரை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.
சொர்ணலதா அவர்கள் குரலில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை எடுத்து அதில் மென்சோகம் என்று வகைப்படுத்தி அப்பாடல்களை வரிசையாகக் கேட்டால் உங்கள் மனம் அந்தக் குரலுக்கு அடிமையாகி அந்த சோகத்தை சுமக்க ஆயத்தமாகிவிடும்.

தொடர்ந்து அவரது துள்ளல் பாடல்கள் தொகுப்பைக் கேட்டால் அவர் குரலுடன் நம் மனதும் ஆட்டம் போடத் தொடங்கிவிடும்.
அவரது காதல் குரல் நமக்கொரு காதல் இல்லையே என்று ஏங்க வைத்து விடும். இப்படி நான் மட்டும் அல்ல, இந்தியா முழுக்க ஏன், உலகளவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு.
இந்திய மொழிகள் பலவற்றிலும் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்
🌹சொர்ணலதா உயிரை உலகில் இருந்து எடுத்துச் சென்ற எமனால் ஒருநாளும் சொர்ணலதாவின் குரலை நம்மைவிட்டு, இந்த உலகை விட்டு எடுத்துச் செல்லவே முடியாது எனத் தோன்றும்.....வள்ளி

🌹சொர்ணலதா அவர்கள் என்றும் என்றென்றும் நம்மோடு சதாகாலங்களிலும் தம்முடைய குரலால் உயிரோடே இருக்கிறார், இருப்பார்.

No comments:

Post a Comment