Sunday 9 July 2023

அபிநயசரஸ்வதி சரோஜா தேவி

 பேசும் முறையில் ஏற்ற இறக்கம் காட்டி தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொள்வது அனைத்து கலைஞர்களின்வாடிக்கை. அதுபோல கொஞ்சி கொஞ்சி பேசுவதை பாணியாக கொண்டவர் சரோஜாதேவி.




கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில வருடம் வரை நடித்துக்கொண்டும் உள்ளார்.
அதுமட்டுமல்ல நடிக்க ஆரம்பித்த வருடம் தொடங்கி இருபத்தி ஒன்பது வருடம் (1954 – 1983) நாயகியாகவே நடித்துள்ளார். (முதல் இருபடம் நீங்கலாக) மொத்தம் 161 படங்கள் அந்த வரிசையில் வரும்.
இவருடைய திரைப்பயணத்தை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று பிரித்து கொள்ளலாம். காரணம் அதுவரை காதல்படங்களில் அதிகம் நடித்த அவர் பின் குடும்ப பாங்கான அதே சமயம் நாயகியாய் நடிக்க துவங்கினார்.
ஜெயலலிதா வரும் வரை இவர்தான் எம்ஜிஆருக்கு இணை இருவரும் மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதே போல சிவாஜியுடன் பதினைந்து படங்கள் செய்துள்ளார்.
தென்னக்கத்து சூப்பர் ஸ்டார்கள் எம்ஜி ஆர் , சிவாஜி, என் டி ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் ஆகியோருடனும், இந்தியில் திலீப் குமார் , ராஜ் குமார், சுனில் தத் ,ஷம்மி கபூர் ஆகியோருடனும் நடித்துள்ளார்
இரண்டாம் நிலையில் ஜெமினி கணேசன், கல்யாண் குமார் ,முத்துராமன், ரவிச்சந்திரன் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்
இவரது சிறந்த படங்கள் என,நாடோடி மன்னன், கல்யாண பரிசு, பாகப்பிரிவினை, திருடாதே , பாலும் பழமும், வாழ்க்கை வாழ்வதற்கே ஆலயமணி , பெரிய இடத்து பெண், புதிய பறவை, பணக்கார குடும்பம் , எங்க வீட்டு பிள்ளை ,அன்பேவா ஆகியவற்றை குறிப்பிடலாம்
தமிழ்நாட்டில் இவரை கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடினார்கள். அதேபோல சதுர்பாஷா தாரே ( நான்கு மொழிகளின் நட்சத்திரம் ) என்று அழைக்கப்பட்டார்
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதை எதையும் வீணாக்காமல் தொழில் துறையில் முதலீடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
இவரது குடும்பம் இவருக்கு மிக்க உறுதுணையாக இருந்திருக்கிறது இவரது தந்தை நாட்டியம் பயிற்றுவித்து திரை உலகில் இடம் பிடிக்கும் வரை இவரை ஆதரித்து இருக்கிறார். தனது தாய் சொன்ன ஆடை கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இருக்கிறார்.
பெற்றோர் சொன்னவரைதான்( ஸ்ரீ ஹரி, பாரத் எலெக்ட்ரானிக் பொறியாளார் ) மணம் முடித்து இறுதிவரை அவருடனே தொடர்ந்தது.
மேலும் திருமணத்திற்கு பின்னும் அவரை ஊக்கபடுத்தி இருக்கிறார். மனமொத்த ஜோடிகளாகவே இருந்திருகின்றனர். இதுபோல பிற நடிகைகளுக்கு அமைவது அபூர்வம்.
இவரது புகழ் மற்றும் உண்டு . இவர்படத்தில் அணியும் நகைகள், புடவைகள், ஜாக்கெட் எல்லாம் இவர் நடித்த படத்தின் பெயரோடு சந்தையில் மிக பிரபலமாக விற்றதுண்டு.
இன்றளவில் தொழில் துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்
இவர் தனது கணவர் மற்றும் தாயின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் ஏரளமான உதவிகள் செய்து வருகிறார்.
பத்மஸ்ரீ ,பதம பூசன், உட்பட பல விருதுகள் பெற்ற இவர் இருமுறை தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவராக பணியாற்றி இருக்கிறார் .
திருப்தி தேவஸ்தான ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருக்கிறார்.
இதுபோன்று ஒரே சமயத்தில் திரையிலும் பொது வாழ்விலும், சர்ச்சைகளில் சிக்காமல் நல்ல பெயர் எடுப்பவர்கள் அபூர்வம் அது இவருக்கு வாய்த்திருக்கிறது
தொடரட்டும்.
பல்லாண்டு வாழட்டும்

No comments:

Post a Comment