Monday, 17 October 2016

சூப்பர்ஸ்டாரின் பேவரைட் நடிகை இவர் தானாம்!

ரஜினிகாந்த் நடித்த படங்களை பற்றி நிறைய கேள்விப் பற்றிருப்பீர்கள். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்தமான ஒன்று.
பிரபலங்கள் என்றால் நிறையபேர் ஆடம்பரமாக வாழ்பவர்கள் என்று தான் நிறைய பேர் நினைக்கின்றனர். இதிலும் சிலர் வீட்டிற்குள்ளே எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சூப்பர்ஸ்டாரை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கு இது தான் பிடிக்குமா?
 • பக்தியில் ஈர்த்தது குரு பக்தி. குருவாய் நினைத்து வழிபட்டது சச்சித்தானந்த சுவாமிஜி.
 • மனதார இவர் நித்தமும் வணங்கும் தெய்வம் ஸ்ரீ ராகவேந்திரர்.
 • இவர் மனம் விரும்பும் வண்ணம் கருமை.
 • பிறந்த இடம் பெங்களூராக இருந்தாலும் பிடித்த இடம் என்னவோ சென்னை தான்.
 • அதிகமாக விரும்பி குடிப்பது பழச்சாறு தானாம்.
 • உணவே மருந்தானாலும் இவர் முன்பு விரும்பி சாப்பிட்டது கோழி, ஆட்டுக்கறி உணவுகள்.
 • கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் தனிமையில் இனிமை காண்பவர்.
 • இவ்வளவு ஏன் மண்டபம் போன்ற வீட்டில் சிறிய பூஜை அறை மட்டும் தான் இவருக்கு இஷ்டம்.
 • இளமை பருவங்களிலும் சரி இப்போதும் சரி தனியாக பயணம் செய்வதே இவருக்கு பிடித்தது.
 • மனதை மயக்கிய சுற்றுலா தளம் இமயமலை தானாம். பாபாஜி அருள் பெற்றவராச்சே.
 • இவருடன் நடிக்க நிறைய நடிகைகள் ஆசை பட்டாலும் இவருக்கு பிடித்த நடிகை ரேகா.
 • பல நடிகர் சினிமாவில் இருந்தாலும் இவரை கவர்ந்த நடிகர் கமல் ஹாசன்.
 • பல பாடல்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தவர் மிகவும் ரசிப்பது சந்திரபாபுவின் பாடல்கள்.
 • அமைதியை விரும்புபவர் அநேகமாக கேட்டு மகிழ்ந்தது இளையராஜாவின் இசையைத்தான்.
 • பலவசனங்கள் பேசியவர் பலநேரம் பார்த்தது கண்ணதாசனின் பாடல் வரிகளையாம்.
 • புத்தகங்கள் நிறைய படிக்கும் இவரை மிகவும் மகிழ்வித்தது பொன்னியின் செல்வன்.
 • படங்களில் பல காட்சிகள் உண்டு, இவர் விரும்பியது டூயட் காட்சிகளைத்தான்.
 • உலகமே பாராட்டும் இவருக்கு ஹாலிவுட்டில் பிடித்தது சில்வர்ஸ்டார் ஸ்டாலோன்.

Thursday, 1 September 2016

ரஜினி, தனுஷ் புதிய படத்தின் அதிர்ச்சி பின்னணி

2.0 திரைப்படம் முடிந்ததும் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவலை நடிகர் தனுஷ் தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
 
 


 
 
இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. நடிகை அமலா பால் விவகாரத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினியிடம் கொண்டு சென்றதாக தகவல்கள் வந்தன. அந்த சமையத்தில் தான் இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பும் வந்தது.
 
இதனையடுத்து ரஜினிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க போகிறார் என்ற கூடுதல் தகவலும் உலா வந்தது. இந்நிலையில் ரஜினி, தனுஷிடம் அமலா பால் விவகாரம் குறித்து கடிந்து கொண்டதாகவும், பல சமரச பேச்சுக்களுக்கு பின்னர் தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக்கொடுக்க ரஜினி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
 
அமலா பாலை கழட்டி விடவே ரஜினி இந்த படத்துக்கு சம்மதித்ததாகவும் பேசப்படுகிறது. அவருடன் எந்த தொடர்பும் கூடாது, எந்த படத்திலும் அவருடன் நடிக்க கூடாது போன்ற கண்டிஷன்களுடனேயே இந்த புதிய படத்துக்கு ரஜினி சம்மதித்ததாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

Monday, 11 July 2016

2016 அரையாண்டு தமிழ் சினிமா : அசத்தலா? அச்சமா?


2016ம் ஆண்டின் அரையாண்டு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிக சிக்கல்கள் எதுவுமில்லாமல் வெற்றிகரமாக கடந்து போயுள்ளது.

pongal-2016-release.jpg

2014, 2015ம் ஆண்டுகளில் 200க்கும் அதிகமான படங்கள் வெளிவந்தன. அதே போல இந்த 2016ம் ஆண்டிலும் அந்த எண்ணிக்கை தொடரும் என எதிர்பார்க்கலாம்.


ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் முடிய 107 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 107 படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை 7ஐக் கூடத் தாண்டவில்லை என்பது எவ்வளவு பெரிய உண்மை.

மெகா ஹிட் 3 : மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் 'ரஜினி முருகன், பிச்சைக்காரன், தெறி' ஆகிய மூன்று படங்களை மட்டுமே சொல்ல முடியும். இந்தப் படங்கள் அனைத்து விதமான ஏரியாக்களிலும் மிகப் பெரும் வசூலுடன் படத்தை வாங்கி வினியோகம் செய்தகவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும், தியேட்டரில் கேன்டீன் நடத்தியவர்களுக்கும், பைக், கார் டோக்கன் போட்டவர்களுக்கும் வரை லாபத்தை அள்ளிக் கொடுத்த படங்களாக அமைந்தன.


'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி மூலம் சிவகார்த்திகேயன் அனைத்து ஏரியாக்களிலும் விரும்பப்படும் ஒரு நாயகனாக உயர்ந்துள்ளார். விஜய், அஜித் படங்களுக்குரிய வசூலையும், லாபத்தையும் அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. விஜய் ஆண்டனி நடிகரான பின் அவருக்கு மிகப் பெரும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்த படம் இது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இப்படம் சுமார் 20 கோடி வரை லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள்.

'தெறி' படத்தின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்த ஒரு வெற்றிதான். விஜய், மீண்டும் தன்னை பாக்ஸ்-ஆபீஸ் நாயகனாக நிரூபித்த படம். அவருடைய முந்தைய படங்களின் வரலாற்றை இந்தப் படம் முறியடித்தது. 100 கோடிக்கும் மேல் வசூல் பெற்று இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் முதலிடத்தைப் பிடித்த படம் இது.

ஹிட் படங்கள் : மாபெரும் வெற்றியை அடுத்து வெற்றி பெற்ற படங்கள் என்ற பட்டியலில் சில படங்கள் இடம் பிடித்துள்ளன. அதில், “இறுதிச் சுற்று, அரண்மனை 2, விசாரணை, சேதுபதி, தோழா, 24, மருது, மனிதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

பெண் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கிய 'இறுதிச் சுற்று' படத்தின் வெற்றி எதிர்பாராத வெற்றி. மாதவனுக்கு தமிழில் மீண்டும் ஒரு சுற்று வர இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

'அரண்மனை' படத்தின் வெற்றி போலவே இல்லையென்றாலும் 'அரண்மனை 2' படத்தின் வெற்றி ஓரளவிற்கு அமைந்தது. பி அன்ட் சி சென்டர்களில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைத் தந்ததாகச் சொல்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படம் பார்த்தவர்களையும் மிரள வைத்த படமாக இருந்தது. அந்த அளவிற்கு இப்படியெல்லாமா விசாரணை செய்வார்கள் என சாமானியனுக்கும் இந்தப் படம் புரிய வைத்தது. 'ஏ' சென்டர்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமாக இருந்தது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த 'சேதுபதி' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மிதமான வெற்றியைப் பெற்றது. இன்னும் கொஞ்சம் அதிகமாக விளம்பரப்படுத்தியிருந்தால் இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

நாகார்ஜுனா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் தோழா. ஒரு அழகான நட்பைச் சொல்லிய படம், கார்த்திக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.


'24' படத்தின் பட்ஜெட்டை இன்னமும் குறைத்திருந்தால் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். வெளிநாடுகளில் பெரும் வசூலைப் பெற்ற இந்தப் படம் உள்ளூரில் குறைவான வசூலைத்தான் பெற்றது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் வெற்றியைப் பெறாமல் இருந்த விஷ்ணு விஷாலுக்கு 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஏமாற்றிய படங்கள் : எதிர்பார்த்து ஏமாற்றிய படங்களில் நிறைய படங்கள் உள்ளன. “தாரை தப்பட்டை, கெத்து, கதகளி, பெங்களூர் நாட்கள், மிருதன், காதலும் கடந்து போகும், மனிதன், கோ 2, இது நம்ம ஆளு, இறைவி” ஆகிய படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தன.

அதிலும் குறிப்பாக இளையராஜாவின் 1000மாவது படமாக வந்த பாலாவின் 'தாரை தப்பட்டை', மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'பெங்களூர் நாட்கள்', முதல் பாகம் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 'கோ 2', விஷாலுக்குத் திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கப்பட்ட 'கதகளி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'இறைவி' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிராகரித்த படங்களாக இருந்தன. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றியை எதிர்பார்த்த 'கெத்து' படம் அவருக்கு ஏமாற்றத்தையே தந்தன. சிம்பு, நயன்தாரா ஜோடியால் பேசப்பட்ட 'இது நம்ம ஆளு' படமும் பெரிதாக சோபிக்கவில்லை.

Friday, 24 June 2016

பாகுபலி கதாசிரியர் கைவண்ணத்தில் முதல்வன் 2

இந்தியில் முதல்வன் படம் ஷங்கர் இயக்கத்தில் 'நாயக்' என்ற பெயரில் வெளியானது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதல்வன் 2 என்ற பெயரில் பாகுபலி கதாசிரியர் எழுத்தில் உருவாக இருக்கிறது.


 

 
ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படம் 1999ஆம் ஆண்டு அர்ஜூன், ரகுவரன், ஆகியோர் நடிப்பில் வெளியானது. இப்படத்தை பாலிவுட்டிலும் அனில் கபூர் நடிக்க 'நாயக்' என்ற பெயரில் ஷங்கரே இயக்கினார். 
 
இந்நிலையில் தற்போது 'முதல்வன்' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார். ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களுக்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வன் இரண்டாம் பாகத்தின் கதையை இன்னும் 3 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.
 
இவர் கதையில் அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வன் இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.
 

Thursday, 19 May 2016

காஜல் அகர்வாலை வைத்து நடத்தப்படும் முத்த வியாபாரம்

காஜல் அகர்வால் இந்தியில் ஒரு படம் நடித்துள்ளார். படத்தின் பெயர், Do Lafzon Ki Kahani. ரன்தீப் ஹுடா நாயகன்.

 


இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு பிரஸ் ரிலீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போது காஜல் அகர்வால், ரன்தீப் ஹுடாவின் லிப் லாக் காட்சியை படமாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தி சினிமாவில் லிப் லாக் காட்சிகள் சாதாரணம்.

எனில் காஜலின் முத்தத்திற்கு மட்டும் ஏனிந்த ஸ்பெஷல்...?
 
காஜல் அகர்வால் இதுவரை முத்தக் காட்சியில் நடித்ததில்லை. அது என்னவென்றே அவருக்கு தெரியாது. மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போதும், படத்தில் முத்தக் காட்சி இருப்பது அவருக்குத் தெரியாது. ரன்தீப் ஹுடா காஜலை திடீரென்று அணைத்து உதட்டில் முத்தமிட்ட போது காஜல் அகர்வால் அதிர்ந்து போனார் என்று பூகம்பம் அளவுக்கு பிரஸ் ரிலீஸில் விலாவரியாக விவரித்துள்ளனர். அவர்கள் லிப் லாக் காட்சியை பிரதானப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், அவர்கள் படத்தை விளம்பரப்படுத்த இந்த முத்தக் காட்சியை துருப்புச்சீட்டாக பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. 
 
ஆனால், உண்மை என்ன?
 
காஜல் அகர்வால் இதற்கு முன் பல படங்களில், பல நடிகர்களுடன் முத்தக் காட்சியில் நடித்துள்ளார். தெலுங்கின் இரண்டாம் வரிசை நாயகனாக இருக்கும் சந்தீப்புடன் ஒரு முத்தக் காட்சியில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். படம் சந்தமாமா. செம ரொமான்டிக்கான முத்தக் காட்சி அது.
 
அதேபோல் அல்லு அர்ஜுனுடன் ஒருமுறை தனது உதட்டை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஈர சம்பவம் நடந்தது ஆரியா 2 படத்தில். இரண்டு பேரும் உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டனர். காதலும், அதிர்ச்சியும் சமவிகிதத்தில் கலந்த க்யூட் லிப் லாக் இந்த முத்தம். 
 
பிசினஸ்மேன் படத்தில் தனது பங்குக்கு காஜலின் உதட்டை கறைபடுத்தினார் ஆந்திராவின் பிரின்ஸ், மகேஷ் பாபு. சந்தீப் அளித்த முத்தத்திற்கு இணையான ரொமான்டிக் முத்தம் இது. 
 
மாற்றான் படத்தில் சூர்யாவும் காஜல் அகர்வாலை முத்தமிட்டுள்ளார். ஏறக்குறைய இரண்டு லாரிகள் மோதிக் கொள்வதைப் போன்றது இந்த முத்தக் காட்சி. ரொமான்ஸைவிட அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிறைந்தது இந்த முத்தக் காட்சி.
 
நமக்கு தெரிந்து இத்தனை. தெரியாமல் எத்தனையோ.
 
தென்னிந்திய சினிமாவில் முத்தத்தில் நவரசங்கள் காட்டிய காஜல் அகர்வாலை, முதல் முதலில் முத்தமிட்டது ரன்தீப் ஹுடா, அவர் முத்தமிட்டதும் காஜல் அகர்வால் அதிர்ந்தார், அதிசயித்தார் என்றெல்லாம் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது இந்திப்பட நிறுவனம்.
 
ஜுனில் காஜல் நடித்த இந்திப் படம் வெளியாக உள்ளது. அதற்குள் இன்னும் எத்தனை மூட்டைகளை அவிழ்த்துவிடுவார்களோ.

Sunday, 17 April 2016

நம்மையெல்லாம் அருமையா ஏமாற்றிய அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது

திரைப்படக்காட்சி ஒன்றில்.. ஒரு நபர் கூர்மையான கத்தியால் குத்தப்பட்டாலோ.. அல்லது ஒரு உயரமான மலையில் இருந்து கீழே விழுந்தாலோ.. அல்லது மிகவும் கொடுமையான விஷப்பாம்பு ஒன்றிடம் கடி வாங்கினாலோ... அடுத்தது என்ன நடக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் - மரணம் தான்..!

சினிமாவில் ஏற்படும் மரணம் என்றாலே அது போலி தான் பொய் தான் அதுக்காக அறிவியலின் கீழ் சாத்தியமே இல்லாத ஒன்றை சாத்தியம் தான் என்பது போல் திரைப்படக் காட்சி அமைப்பது எவ்வளவு பெரிய ஏமாத்து வேலை..!? அப்படியாக, நம்மையெல்லாம் 'ரொம்ப அருமையா' அறிவியலுக்கு எதிரான சினிமா மரணங்கள் பற்றிய தொகுப்பே இது..!


ஏமாத்து வேலை நம்பர் #5 :

கொதிக்கும் எரிமலை குழம்பிற்குள் மூழ்கி சாவது..!

அறிவியல் உண்மை :

எரிமலை குழம்பு மரணம் தர வல்லமை யானது தான் அதில் சந்தேகமில்லை. அதற்காக நீச்சல் குளத்திற்குள் மூழ்குவது போல எரிமலை குழம்பிற்க்குள் எதுவும் மூழ்கிடாது என்பது தான் அறிவியல்..!

முதல் வேலை :

1,295 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து 2,282 டிகிரி வரை கொதிக்கும் எரிமலை லாவாவின் மேற்பரப்பானது எந்த விதமான மேற்ப்பரப்பையும் உடைக்கும் வெப்பநிலை கொண்டது. அதன் முதல் வேலை கொலை தான்..!

நடக்காத காரியம் :

எரிமலைக்குழம்பு குறைந்தது 100,000 மடங்கு பிசுபிசுப்புள்ள, தண்ணீரை விட மூன்று மடங்கு கனமானதாக மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். ஆகையால் அதுனுள் மனிதர் ஒருவர் மூழ்கி சாவது என்பது நடக்காத காரியம் ஆகும்.!

8jB6Bye.jpg

ஏமாத்து வேலை நம்பர் #4 :

மூச்சுதிணறவைத்து கொலை செய்யும் முறை..!

அறிவியல் உண்மை :

ஒரு நபரை மூச்சுதிணறவைக்கும் முறையானது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆகும். திரைப்பட காட்சிகளில் வருவது போல தலையணை ஒன்றை வைத்து-அழுத்தி ஒருவரை கொலை செய்து விட இயலாது.

எதிர்வினை :

அறிவியலின்கீழ் மூச்சடைக்கப்பட்ட பின்பு மனித உடல் ஆனது ஒரு எதிர்வினை போல தானாகவே நிர்பந்தமாக சுவாசிக்க தொடங்கும்.

மூளை :

இரத்தத்தில் ஆக்சிஜனை பயன்படுத்த மனித உடல் ஆனது 15 நொடிகள் எடுத்துக்கொள்ளும், பின்பு ஒரு நிமிடம் சுவாசம் தடை செய்யப்பட்டால் மூளை செல்கள் பாதிப்படையும், பின்பு மூளை மிகவும் மோசமாக பாதிப்படைய 3 நிமிடங்கள் தேவைப்படும்..!

அரிய நிகழ்வுகள் :

சுவாசம் இல்லாது 40 முதல் 60 நிமிடங்களுக்கு பின்பு கூட உயிர் பிழைத்த அரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.

dvYE2dX.jpg

ஏமாத்து வேலை நம்பர் #3 :

சுறா ஒரு மனித வேட்டையாடி, சுறா மனிதர்களை தேடித்தேடி கடித்து கொல்லும்..!

அறிவியல் உண்மை :

நம்பினால் நம்புங்கள், உண்மையில் சுறாக்கள் மிகவும் கூச்சப் பிராணிகள் ஆகும். சொல்லப்போனால் மனிதர்களை சுறாக்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கி கடித்துக் கொல்லும் பிராணிகள் அல்ல..!

தொடர்பு :

பெரும்பாலான சுறா தாக்குதல் எல்லாம் சுறாக்கள் மக்களால் தூண்டப்படுவதாலேயே நிகழ்ந்துள்ளன. பிற பிராணிகளை போலவே தான் சுறாக்களும் மனிதர்களோடு தொடர்பு கொள்ள விழைகிறது என்ற கருத்தும் உண்டு..!

Tj7RXLF.jpg

ஏமாத்து வேலை நம்பர் #2 :

கிரேனடுகள் அதாவது கையெறி குண்டுகள் உடனடி மரணத்தை ஏற்படுத்தும்..!

அறிவியல் உண்மை :

கையெறி குண்டுகள் அதன் கில்லிங் ரேடியஸ் (Kiling Radius) என்ற எல்லைக்குள் இல்லாத வரையிலாக அது ஒன்றும் உங்களை உடனடியாக துண்டு துண்டாக சிதற வைத்து கொன்று விடாது. நூற்றுக்கணக்கான கிரேனட் வகைகளும் ஒவ்வொன்றிக்கும் தனிப்பட்ட கில்லிங் ரேடியஸ் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

scopXS5.jpg

ஏமாத்து வேலை நம்பர் #1 :

புதை மணல் ஆனது மனிதர்களை உள்ளே இழுத்து கொள்ளும்.!

அறிவியல் உண்மை :

நீச்சல் குளத்திற்குள் குதிப்பது போல நேராக தலையை முதலில் திணிக்காத பட்சத்தில் புதை மணலில் உங்களால் மூழ்கவே முடியாது.

அடர்த்தி :

எரிமைலை குழம்பை போலவே புதை மணலும் மனித உடலை விட மிகவும் அடர்த்தியாக இருப்பதால் மிஞ்சி மிஞ்சிப்போனால் அது உங்கள் இடுப்பு வரை உள்ளே இழுக்கும் அவ்வளவு தான்..!

Monday, 28 March 2016

5 வது முறை தேசிய விருது வென்றார் இளையராஜா... தாரை தப்பட்டைக்காக விருது!

இசைஞானி இளையராஜா 5வது முறையாக தேசிய விருதினைப் பெருகிறார். தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக அவருக்கு இந்த முறை தேசியவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 
தாரை தப்பட்டை படம் வணிக ரீதியில் எப்படி ஓடியிருந்தாலும் அந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தது இளையராஜாவின் இசைதான். பின்னணி இசையும் பாடல்களும் மெய்சிலிர்க்க வைத்தன. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் இசையில் ருத்ர தாண்டவத்தை கண்முன் காட்டும் ராஜாவின் இசை. இந்த இசைக்குத்தான் இந்த முறை சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நான்கு முறை தேசிய விருதுகளை வென்றவர் இளையராஜா. 
 
 சலங்கை ஒலி, சிந்து பைரவி, ருத்ர வீணை படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை அவர் பெற்றார். பழஸிராஜா படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார். இப்போது 5வது முறையாக தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.

Sunday, 27 March 2016

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

சீரியல் பார்ப்பதில், நம்மூர் பெண்கள் மட்டும்தான் புலிகளா? உலகமே அப்படித்தான்! அதிலும், ஹாலிவுட் தரத்திற்கு சீரியல்களை உருவாக்குவதில் அமெரிக்கா கில்லி. அமெரிக்கர்களின் சீரியல் மோகத்திற்கு ''கேம் ஆஃப் த்ரோன்ஸ் - Game of Thrones (சிம்மாசனத்திற்கான விளையாட்டு)'' எனும் சீரியல் சிறந்த உதாரணம். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஜி.ஓ.டி (Games Of Thrones - GOT) என்கிற செல்லப் பெயரும் இருக்கிறது.

சீரியல் தீம் :

இந்த சீரியல்  அழுகாச்சி சீரியல் அல்ல என்பது தான் நமக்கும், அவர்களுக்குமான பெரிய வித்தியாசம். ஒரு சாம்ராஜ்யத்தை பிடிக்க நடக்கும் அரசியல் விளையாட்டுகள் மற்றும் போராட்டம் போன்றவை தாம் இந்த சீரியலின் கதைக்களம். நடந்த வரலாற்றைச் சீரியல் ஆக்கியிருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஒரு கற்பனைக் கதை! இந்த சீரியல் தொடர்கள் 'எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'எ க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்', 'எ ஸ்டோர்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ்' போன்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்படுகிறது. 


சீசனாக சீறிப்பாயும் ஜீ.ஓ.டி :

ஏப்ரல், 2011-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியல்கள், சீசன் 1, 2, 3, 4, 5 என்று இதுவரை ஐந்து சீசன்கள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டிருக்கிறது. (ஒரு சீசனுக்கு 10 எபிசோட்கள் மட்டுமே, ஒரு எபிசோட் 50 - 65 நிமிடங்கள் வரை இருக்கிறது). அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 25, 2016 அன்று இந்த சீரியலின் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதன் டிரைலரை மட்டுமே 2.5 கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்

3Uf2TyL.jpg

இயக்குநர்கள் :

இந்த சீரியலை எடுத்தவர்கள் ஒருவரோ, இருவரோ, மூவரோ அல்ல 14 இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக அலெக்ஸ் க்ரேவ்ஸ், டேவிட் நட்டர், அலென் டெய்லர் போன்றவர்கள் இதுவரை ஒவ்வொருவரும் 6 எபிசோட்களை இயக்கி முன்னிலை வகிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து டேனியல் மினாஹன் 5 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். மிசெல்லி மெக்லாரன், மார் மைலார்ட், ஜெரிமி பொடெஸ்வா, அலிக் சகரோவ் மற்றும் மிக்வில் சபோச்நிக் ஆகியவர்கள் 4 எபிசோட்களை இயக்கி இருக்கிறார்கள். பிரைன் கிரிக் 3 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். நீல் மார்ஷல் 2 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். ஜாக் பென்டர், டேவிட் பெட்ரகா, டேனியல் சக்ஹீம், மைக்கெல் ஸ்லோவிஸ் ஆகியவர்கள் 1 எபிசோடையும் இயக்கி இருக்கிறார்கள். ஒரே எபிசோடில் இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்களும் சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

y0dyoqK.jpg

நடிகர்கள் :

இயக்குநர்கள் தான் இவ்வளவு பேர் என்றால், இதில் நடிப்பவர்களின் பட்டியலும் கல்யாண விருந்துக்கு வாங்க வேண்டிய மளிகை சாமான் லிஸ்டை விட பெரிதாக இருக்கிறது. பீட்டர் டிங்க்லேஜ், லெனா ஹெடே, எமிலியா க்ளார்க், கிட் ஹாரிங்டன், ஷோஃபி டர்னர், மைசி வில்லியம்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஊர் மகாபாரதம் தான். அவ்வளவு கதாபாத்திரங்கள். போர்க் காட்சிகளை எல்லாம் படமாக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் வேண்டும் என்பதை பாகுபலி படத்தின் போர்க்காட்சிகளை நினைவு கூர்ந்தால் தெரியும். கஷ்டம் என்ன என்பது புரியும். அவைகளையும் இயக்குநர்கள் அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

tEEu6xu.jpg


உலகின் காஸ்ட்லியான சீரியல் :

எப்படி, இப்படி ஒரு தெறி ஹிட் என்று பார்த்தால், அதன் பட்ஜெட்டில் இருக்கிறது முதல் சர்ப்ரைஸ். சுமாராக ஒரு மணிநேரத்திற்கு (ஒரு எபிசோடிற்கு) 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) செலவழித்து தயாரிக்கப்படுகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்படும் சீரியல்களில் ஃப்ரண்ட்ஸஸென்னும் சீரியல் ஒரு எபிசோடிற்கு - 10 மில்லியன் டாலர் செலவழித்து தயாரித்தது. அதே போல் ரோம் சீரியலின் ஒரு எபிசோடிற்கு - 9 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் கேம் ஆஃப் த்ரோன்ஸ். மேற்கூறிய இரண்டு தொடர்களும் முடிந்துவிட்டன. ஆக மொத்தத்தில், தற்போதைக்கு உலகில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் டிவி சீரியல்களில் இது தான் நம்பர் 1.

ஒளிபரப்பு :

இந்த சீரியல் முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு பின் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஏகப்பட்ட சென்சார் வெட்டுகள் நடந்த பின் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

S8Gg2hj.jpg

நேரடி பார்வையாளர்கள் 69 லட்சம் :

கேம் ஆஃப் த்ரோன்ஸின் சீசன் 5-ன் ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 69 லட்சம் பேர் தொலைக்காட்சி மூலமாக பார்த்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பப்பட இருக்கும் சீசன் 6 ஐ இன்னும் அதிகமான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு கணித்திருக்கிறது.

tekNdoQ.jpg

டிவிடியில் சீரியல் :

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன்கள் முழுமையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பின், டிவிடிக்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன முதல் சீசன் டிவிடிக்கள் மற்றும் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்வதிலும் முத்திரை பதித்திருக்கிறது.
முதல் சீசனின் டிவிடி ஒரு வார காலத்தில் 3,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இது ஹெச்பிஓ வெளியிட்ட சீரியல்களில் நிகழ்த்தப்பட்ட பெரிய சாதனை என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியது.
இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸில் எடுக்கப்பட்ட சீசன் 5 வரையான அனைத்து எபிசோட்களையும் டிவிடியிலும் ப்ளூரே பார்மெட்டில் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியிட்டிருக்கிறது ஜி.ஓ.டி குழு. நம்மூரில் சீரியலை பார்ப்பதற்கு டிவிடி இருக்கிறது என்றால் வீட்டில் இருக்கும் இளசுகள் பிரச்னை இல்லாமல் டிவி பார்க்கலாம். அதையும் மீறி வீட்டில் இருக்கும் சீரியல் பிரியர்கள் கேட்டால் டிவிடி வரும் பாத்துக்கலாம் என்று சமாளித்துவிடலாம்.

ஆன்லைனில் சீரியல் விலை :

'கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் ஒரு எபிசோடை சப்ஸ்கிரைப் செய்து பார்க்க அமெரிக்காவில் 15 - 25 டாலர், இங்கிலாந்தில் சுமாராக 26 பவுன்ட் ஸ்டர்லிங், ஆஸ்திரேலியாவில் 52 ஆஸ்திரேலிய டாலர் செலவழிக்க வேண்டுமாம். மேற்கூறிய பணத்தை எல்லாம் இந்திய பணத்தில் மதிப்பிட்டு பாருங்கள்!...அதிர்ந்து...! போவீர்கள்.

பைரஸி பிரச்னை :

வழக்கம் போல டொரன்ட் இந்த சீரியலுக்கும் வில்லனாகத் தான் இருக்கிறது. டொரன்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் டிவி சீரியல்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்குதான் முதல் இடம். அதில், ஒரு எபிசோட் மட்டும் 42,80,000 முறை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்! குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸின் பைரசி காப்பிகள் அதிகமாக இருக்கிறதாம். 2015-ல் அதிகம் திருடப்பட்ட தொலைகாட்சித் தொடராக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அதோடு இதுவரை ஹெச்.பி.ஓ நிறுவனம் தயாரித்த டிவி சீரியல்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த சீரியலாக தன் முத்திரையை பதித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்!'.


விருதுகள் பட்டியல் :

ஃபிரைம் டைம் எம்மி' விருதுகளின் ''சிறந்த தொலைக்காட்சி சீரியல்" விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் 26 ஃபிரைம் டைம் எம்மி விருதுகளை வென்றிருக்கிறது. சீரியல்களுக்கு வழங்கப்படும் பிற விருதுகளில் இதுவரை 190-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியல். இந்த 190 விருதுகளில் கோல்டன் குளோப் விருதுகள், ஹூகோ அவார்ட் ஃபார் பெஸ்ட் டிராமாட்டிக் பிரசன்டேஷன், பீபாடி அவார்ட் போன்றவையும் அடக்கம்.

எக்கச்சக்க 'ஏ'டாகூட காட்சிகள் :

இந்த சீரியலில் ஆபாசக் காட்சிகள் கொஞ்சம் அதிகம் தான். எனவே குடும்ப சமேதமாக உட்கார்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டே பார்க்க முடியாது.

மக்கள் மதிப்பெண் :

இந்த டிவி சீரியலுக்கு ஐ.எம்.டி.பி 9.5/10 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது. அதே போல் டிவி.காம் 9/10 மதிப்பெண்களையும், ராட்டன் டொமேட்டோஸ் 94% மதிப்பையும் வழங்கி இருக்கிறது.

இந்தியாவில்...?

இந்தியாவில் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிபரப்பானது. அதுவும் முழுமையான சென்சார்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலோட ஒரு எபிசோட் காசு இருந்தா நம்ம ஊர்க்காரர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள்....

Sunday, 13 March 2016

'தெறி' படத்தின் தெரியாத தகவல்

இளையதளபதி விஜய் பாடிய 'தெறி' படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலின் நான்கு வரிகளை சமீபத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தற்போது மேலும் ஒரு பாடலின் ஒருசில வரிகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

'தெறி' படத்தில் அருண்விஜய்குமார் எழுதிய பாடிய ராப் பாடல் ஒன்று உள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த பாடல்,"தோட்டா தெறிக்க தெறிக்க, வேட்ட வெடிக்க வெடிக்க, வர்றான் தெறி.. என்ற வரிகளுடன் ஆரம்பமாவதாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விழா நடைபெறும் இடம் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

Sunday, 28 February 2016

தனுஷ்சின் – The Fakir 2017 ஒரு பார்வை

தனுஷ்சின் – The Fakir 2017 ஒரு பார்வை


MARJANE-SATRAPI-DHANUSH.jpgஆஸ்கார் நாயகன் என்று நம்மூரு கமல்ஹாசனை கூப்பிட்டுவந்த, அவரது ரசிகர்கள் களைத்துப்போய் உலக நாயகனுக்கு மாறிவிட்டார்கள். இப்போது அந்த இடத்தை தனுஷ்க்கு தருவதற்கு முடிவெடுத்திருக்கிறார் மார்ஜான் சட்ராப்பி (Marjane Satrapi).

MV5BMTY1NjU1OTgyMl5BMl5BanBnXkFtZTgwMjgz

ஈரானில் பிறந்து பிரான்ஸில் எழுத்தாளராக, ஓவியராக, இயக்குனராக இருக்கும் மார்ஜான், இந்தியாவிலேயே பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரே நடிகர் தனுஷ். அதனால்தான் தனுஷை த எக்ஸ்ட்ராடினர்ரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்துக்கு நாயகனாக்கி இருக்கிறேன் என்கிறார்.இந்தப் படத்தின் கதை The Extraordinary Journey Of A Fakir Who Got Trapped In An Ikea Wardrobe என்ற பெயரில் வெளியான பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த நாவல் கிட்டத்தட்ட 35 மொழியில் வெளியாகி சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.


Alexandra Daddario in The Extraordinary Journey of the Fakir
அலெக்சாண்ரா
MV5BMTM4MTU0Nzg1N15BMl5BanBnXkFtZTcwODI2

ராஜஸ்தானில் ஒரு பரதேசி சாமியாராக திரியும் தனுஷ், பாரீஸ் போய் ஆணிப்படுக்கை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ராஜஸ்தானில் இருந்து பாரீஸ் போகும் தனுஷ், பாஸ்போர்ட் சிக்கலில் மாட்டிக்கொண்டு ஆப்பிரிக்கர்களுடன் சேர்ந்து நாடு கடந்துசெல்லும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நேரத்தில்தான் பாழாய்போன காதலில் சிக்கிக்கொள்கிறார். அதுக்கடுத்து என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்க்கலாம்.


Gemma Arterton in The Extraordinary Journey of the Fakir
ஜெம்மா
MV5BOTAwNTMwMzE5OF5BMl5BanBnXkFtZTgwMjYwதனுஷுடன் மூத்த முத்த நாயகி உமா தர்மன் (Uma Thurman) நடிக்க, ஜோடியாக அழகுப் பதுமைகள் அலெக்சாண்ட்ரா டடாட்ரியோ (Alexandra Daddario), ஜெம்மா அர்டர்டன் (Gemma Arterton) இருவரும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் நம்மூரு சீமா பிஸ்வாஸும் முக்கிய வேடத்தில் நடக்கிறார்.

MV5BMjMxNzk1MTQyMl5BMl5BanBnXkFtZTgwMDIz

2017ம் ஆண்டு வெளிவர இருக்கும் படத்தின் மூலம் தமிழ் நடிகருக்கு ஆஸ்கார் நிச்சயம் என்று இப்போதே காத்திருப்போம்.

வருகிறார்கள் காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் -'ஜஸ்டிஸ் லீக்ஸ்' (Justice League)

சுமார் 10 முதல் 15 வருடங்களிற்கு மேலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போது பூர்த்தி செய்திருக்கிறார் சாக் ஸ்நைடர்(Zack snyder).

பேட்மேன்-சூப்பர்மேன் படத்தை இயக்கிவரும் சாக் ஸ்நைடர்(Zack snyder)   பெப்ருவரி 23 தேதி  மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் .

அதுதான்  2000s-2005களில் நம்மை சூப்பர் பவர்கள் மூலம் கட்டிப்போட்ட  காமிக்ஸ் கதாநாயகர்கள்  -'ஜெஸ்டிஸ் லீக்ஸ்  படத்தின் அறிவிப்பு பற்றிய தகவல்! வெளியானதுதான் தாமதம் அதற்குள்ளேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக ட்ரெண்டாகதொடங்கியது..

அந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஆரம்பகாலங்களில் 'ஜெஸ்டிஸ் லீக்ஸ் மிகுந்த  வரவேற்பை பெற்றிருந்தது..
வரலாறு

250px-Justiceleague_v2_01.jpg

DC காமிக்ஸ் வகையை சேர்ந்த இந்த ஜஸ்டிஸ் லீக்ஸ் 1960 களில் GARDNER FOX என்பவரால் உருவாக்கப்பட்டது.

DC காமிக்ஸ்இன் ஏழு பிரபலமான சூப்பர் ஹீரோகளை ஒன்றிணைத்த ஒரு குழு அமைப்புதான் இந்த  Justice League . அதாவது தற்போதைய avengers குழு போன்ற , ஆனால் avengersன்  தோற்றத்திற்கு முன்பே ஜஸ்டிஸ் லீக்ஸ்  தோன்றியமை குறிப்பிடத்தக்கது.முதன் முதலாக ஜெஸ்டிஸ் லீக்ஸ்   The Brave and Bold காமிக்ஸ் புத்தகத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.

ஆரம்ப காலங்களில் Justice League அமேரிக்காவை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவந்தது,படிப்படியாக 1986 களில் இருந்து ஐரோப்பா மற்றும் உலகம் முழவதும் வெளியாக தொடங்கியது..


phil-cho-jla.jpeg

The seven original members of the Justice League from left to right: Martian Manhunter,Wonder Woman ,AquamanSuperman, Green Lantern ,Batman and The Flash


ஜெஸ்டிஸ் லீக்ஸ் 2000s களில் அனிமேஷன் தொடராக வலம்வரதொடங்கியது


JLU.jpg

ஆரம்ப காலங்களில்  பேட்மேன்,சூப்பர்மேன்,பிளாஷ்  அனிமேஷன்  தொடர்களே மிகவும் பிரபலமாக காணப்பட்டது. இது நாள்வரை காமிக்ஸ் புத்தகத்தில் மட்டுமே வலம்வந்துகொண்டிருந்த  ஜெஸ்டிஸ் லீக்ஸ்  (2001-2004) முதல் வார்னேர் ப்ரொதெர்ஸ்ன் தயாரிப்பில் 23 நிமிடங்கள் ஓடக்கூடிய வண்ண அனிமேஷனாக Cartoon Network ல் ஒளிபரப்பானது. தொடர்ந்து (2004 – 2006) Justice League Unlimited  என மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது..


ஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலம்

justice-league-unlimited-149795.jpg


Cartoon Network  அலைவரிசை  இந்தியாவில் பிரபலமானத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட ஆரம்ப தொடர்களில் ஜஸ்டிஸ் லீக்ஸ்கும் தொடரும் ஒன்று இதுவே ஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலமடைய முக்கியகாரணமாகஇருந்துவந்தது...இதை தொடர்ந்து Teen Titansம்  மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது...


ஏன் இந்த எதிர்பார்ப்பு


1ao5QhL.png

2000sகளில் இருந்து இதுநாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியான ஜஸ்டிஸ் லீக்ஸ்

காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் என ரசிகர்களால்  அழைக்கப்பட்ட 'ஜெஸ்டிஸ் லீக்ஸ்' இது நாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியாகி சக்கைபோடுபோட்டு வந்தது ,இப்போது முதன் முறையாக ஜெஸ்டிஸ் லீக்ஸ் முழ நீள சூப்பர் ஹீரோஸ்\ திரைப்படகனவு சாக் ஸ்நைடர்(Zack snyder)மூலம் நினைவாகியுள்ளது.

காரணம்பல தடவைகள் இந்த  ஜெஸ்டிஸ் லீக்ஸ் \ திரைப்படமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டு மீண்டும்  நிறுத்தப்பட்டது.

ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல முதல் பாகத்திற்கான வேலைகள் ஏப்ரல் 11 முதல் ஆரம்பமாகவுள்ளதையும் உறுதி படுத்தியும் உள்ளார் மேன் ஓப் ஸ்டீல்,300 (பருத்தி வீரர்கள்) புகழ் சாக் ஸ்நைடர்(Zack snyder)..

phon4oY.jpg

அதுமட்டும் இன்றி இதுநாள்வரை காலமும் பேட்மேன்,சூப்பர் மேன்னை வைத்து மட்டுமே  அதிகமான படங்கள் வெளியாகிஇருந்தன ,
ஆனால் இப்போது புது முயற்சியாக  5th August 2016: Suicide Squad, wonder women ( June 2017),  March 2018: The Flash, July 2018: Aquaman,  April 2019: Shazam!  , April 2020: Cyborg, June 2020: Green Lantern Corps ஏனைய சூப்பர் ஹீரோகளையும் வெளிகொண்டுவரும் வார்னெர் ப்ரோதேர்ஸ் இந்த முயற்சி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

batman-v-superman-dawn-of-justice-e14532

இவ்வருடத்தின் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான பேட்மேன் வஸ் சூப்பர் மேன் அடுத்த மாதம் 25தேதி வெளியாக உள்ள  நிலையில் இச் செய்தி காமிக்ஸ் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

Sunday, 7 February 2016

இந்தியாவிற்குப் பெருமை, கெத்து காட்டும் பிரியங்காசோப்ரா!

சென்ற வருடம் தனது "குவண்டிகோ" சீரியல் மூலம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரியங்காவிற்கு , 2016 வருடம், மக்கள் சாய்ஸ் விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுத் தந்து அவரது வெற்றிப் பயணத்தைத் துவக்கி வைத்தது. தற்போது ஆஸ்கார் விருதும் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது
priyanka.jpg

கலிபோர்னியாவில், பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ள, 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், பிரியங்கா ஆஸ்கார் விருதினை வழங்க உள்ளார். ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் ஸ்டீவ் கேரல், குயின்சி ஜோன்ஸ், பியுங் -ஹுன் லீ, ஜேர்ட் லிட்டோ, ஜூலியன் மூர், ஒலிவியா முன், மார்கட் ரோப்பி, ஜாசன் சீகல், ஆண்டி செர்கிஸ், JK சைமன்ஸ், கெர்ரி வாஷிங்டன், ரீஸ்விதர்ஸ்பூன் போன்றோரின் பெயரோடு பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அதில் பிரியங்கா சோப்ராவின் பெயர் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளதுடன் அவர் குறித்த விபரங்கள் மற்றும் குவண்டிகோ சீரியல்களின் தொகுப்புகளும் இணைந்து ஒரு தனிப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
தனது நடிப்புத் திறமையின் மூலம் உலகளவில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைத் தந்த நடிகர்களிலிருந்து, குறிப்பிட்ட சிலரை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என ஆஸ்கார் தயாரிப்பாளர்கள் டேவிட் ஹில் மற்றும் ரெஜினால்ட் ஹட்லின் ஆகியோர் கூறியுள்ளனர். ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில், இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட "கோர்ட்" அந்த வாய்ப்பினை இழந்தது குறிப்பிடத்தக்கது.
priyankaoscar.jpg
எனினும் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நபர் பிரியங்கா என்பதில் நிச்சயம் பெருமையே.
பாலிவுட்டின் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமிருந்தும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரியங்காவும் தான் ஆஸ்கார் விருதுகளில் கலந்து கொள்ளப் போவதைக் குறித்து  ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆஸ்கார் விருதுள் வழங்கும் விழாவினை பிரபல நடிகர் கிரிஸ் ராக் தொகுத்துவழங்க உள்ளார்.

விசாரணை - பிரபலங்களின் வாழ்த்தும் சாமானியர்களின் எதிர்வினையும்

வெற்றிமாறனின் விசாரணை நேற்று திரைக்கு வந்தது. படம் வெளியாகும் முன்பு, படத்தைப் பார்த்த பிரபலங்கள், இதுபோன்று ஒரு படத்தை தமிழில் பார்த்ததில்லை என்று புகழந்தனர்.

 இயக்குனர் மிஷ்கின் தமிழின் முன்னணி இயக்குனர்களை ஒன்று சேர்த்து வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா ஒன்றை நடத்தினார்.
 
இயக்குனர் ராம், விசாரணை படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்து படத்தை வாழ்த்தியுள்ளார்.
 
"நீங்களும் நானும் வாழும் இந்த நாடு, இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது...
 
திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்...
 
விசாரணை அடையும் வெற்றி
தமிழ் சினிமாவின் வெற்றி..." - என ராம் குறிப்பிட்டுள்ளார். 
 
படத்தைப் பார்த்த பிரபலங்களின் விமர்சனம் பெரும்பாலும் பாராட்டாகவும், வியப்பாகவுமே உள்ளது.
 
"அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமாரை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலமாக வெற்றிமாறன் தன்னை ஒரு பண்பட்ட, நாகரிகமான கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார். விசாரணை தவற விடக்கூடாத அனுபவம்" என இயக்குனர் மீரா கதிரவன் வெற்றிமாறனை பாராட்டியுள்ளார்.
 
நேற்று வெளியான விசாரணையை சாமானிய ரசிகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? "பிரபலங்களின் விமர்சனம் எதிர்பார்த்ததுதான். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி படம் வெளியாகும் அன்றுதான் தெரியும்" என வெற்றிமாறன் குறிப்பிட்டார். பொது ரசிகர்கள் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அவருக்கு முக்கியமாக உள்ளது.
 
சென்னை போரூரில் உள்ள திரையரங்கில் நேற்றைய இரவுக்காட்சிக்கு அரங்கு நிறைந்த கூட்டம். படம் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை அது உள்வாங்கிக் கொண்டது. இடைவேளைக்குப் பின், 'பின் ட்ராப்' சைலண்ட். படம் முழுமையாக ரசிகர்களை ஆகர்ஷித்திருந்தது. படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய அபூர்வ நிகழ்வை நேற்று காண முடிந்தது. அந்த கரவொலி விசாரணை படத்தின் வெற்றியை அறிவித்தது.
 
மலினமான காதல் காட்சிகள், உணர்ச்சியை தூண்டும் மேலோட்டமான சமூக அக்கறை, வலிந்து திணித்த சண்டைக் காட்சிகள், காட்சிக்கு தேவையற்ற வெற்று ஆடம்பரம் எதுவுமில்லாமல் விசாரணை சாமானிய ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. இதுவே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி. 

விசாரணையின் வெற்றியை நமது ரசனையின் வெற்றியாக கொண்டாடலாம்.

Thursday, 21 January 2016

தெறியைத் தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. மொத்தம் 185 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இவற்றில் எண்பத்தைந்துநாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தியதாகச் சொல்கிறார் இயக்குநர் அட்லி.Theri-Movie-High-Quality-First-Look-Postஇந்தப்படத்தில் இவருடைய கடும்உழைப்பிற்கான பலன் உடனே கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இயக்குநர் அட்லியின் உழைப்பு மற்றும் படைப்பாற்றலை முழுமையாகத் தெரிந்துகொண்ட விஜய், அடுத்தும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். தெறி படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.Theri-Movie-High-Quality-First-Look-Postஅந்தப்படத்திற்கு அடுத்து மீண்டும் அட்லி படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் அட்லி. தெறி படத்தின் முடிவுதான் அடுத்தபடத்தைத் தீர்மானிக்கும் என்பது பொதுவான கணக்கு. தெறி வெற்றி என்றால் இருவரும் மீண்டும் சேர்ந்து படம் எடுப்பார்கள் இல்லையென்றால் இல்லை என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.


Theri04.jpg


ஆனாலும் விஜய்யைப் பொறுத்தவரை, இயக்குநரின் வேலை மற்றும் அவர் சொல்லும் கதை ஆகிய இரண்டும் பிடித்திருந்தால் முந்தைய படத்தின் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படமாட்டார் என்பதால் மீண்டும் அவர்கள் இணைவது உறுதியாக நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.