Sunday, 1 July 2012

கோலிவுட்டைக் கலக்கும் சூடான வதந்தி!கோலிவுட்டில் ஒரு செய்திதான் படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது வதந்தியாகத்தான் இப்போது பரபரப்பாகிக் கிடக்கிறது என்றாலும் உண்மையானதாகவும் கூறப்படுகிறது.

நல்ல கருப்பு நிறமுடைய உயரமான நடிகர் அவர். தற்போதைய இளம் ஹீரோக்களில் நல்ல டிமாண்ட் உடையவர். அதிரடி படங்களிலும், அட்டகாசமான கெட்டப் சேஞ்சிலுமாக கலக்கியவர். முத்திரை இயக்குநரின் 'டபுள் ஹீரோ' படத்தில் வித்தியாசமான 'கெட்டப்பில்' கலக்கலாக நடித்தவர்.

இவருக்கும், முக்கியமான சீனியர் நடிகரின் முதல் மனைவியின் மகளுக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டிருக்கிறதாம். இதுதான் கோலிவுட்டில் இப்போது படு ஹாட்டாக பேசப்படுகிறது.

இந்த செய்தியால் அந்த சீனியர் நடிகர் படு கோபமாக இருக்கிறாராம். அவரே ஒரு 'பஞ்சாயத்து'ப் பேசும் நடிகர், அவரது வீட்டுக்கே பஞ்சாயத்து வந்து விட்டதே என்று சீனியர் நடிகரின் சுற்றத்தார் டென்ஷனாகிக் கிடக்கிறார்களாம்.

இளம் நடிகரைப் பாய்ந்து கடித்துக் குதறி விடுவது என்று கோபத்தில் கொந்தளித்த நடிகரை, அவரது 2வது மனைவிதான் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி வைத்துள்ளாராம்.

மகளையும் கண்டிக்க முடியாமல், அந்த நடிகரையும் கண்டிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகர், விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள முயற்சித்து வருவதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த இளம் நடிகரின் குடும்பத்தார் மீது படத் தயாரிப்பு தொடர்பாக சீனியர் நடிகரின் 2வது மனைவி பஞ்சாயத்துக் கிளப்பியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே, இளம் நடிகர், சீனியர் நடிகரின் மகளுடன் நட்பு பாராட்டுவது பழி வாங்கும் படலமா என்ற சந்தேகப் பார்வையும் கோலிவுட்டில் எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைப் பற்றி இளம் நடிகர் கவலையேபடவில்லையாம். அதேபோல சீனியர் நடிகரின் மகளும் கவலைப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து இப்போது ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட்டாகும்.

கண்ணதாசன் ஸ்டைலில் நா.முத்துக்குமார்8 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருப்பவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
நினைத்து நினைத்து பார்த்தேன், அக்கம் பக்கம் யாருமில்லா, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என அவருடய பல நூற்றுக்கணக்கான பாடல்கள் அவரது தனித்தன்மையை உறுதி செய்துகொண்டு, இசையுலகில் பிரபலமாக திகழ்பவை.

நான் கவிஞர் கண்ணதாசன் போல இசையமைப்பாளர் முன்னிலையில் உட்கார்ந்து, மெட்டு போட்டவுடன் பாடல் எழுதுவதையே விரும்புகிறேன். அதுதான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் எனும் நா.முத்துக்குமாரிடம், அவருடைய கவிப்பயணம் குறித்து கேட்ட போது,

ஒருபாடல் எழுத அரைமணியிலிருந்து, 2 மணி நேரத்துக்குள் ஆகும். ஒரு படத்துக்கு 5 இலிருந்து 6 பாடல்கள் தேவைப் பட்டாலும் அதை ஒரே நாளிலேயே எழுதி முடித்து விடுவேன். மிக எளிமையான நடையில், ஆழமான கருத்துக்களை இனிமையாகவும் கொடுத்து விடுவதாக இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சொல்கிறார்கள். நானும் அப்படிக் கொடுப்பதைத்தான் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதோடு நான் எழுதும் பாடல் வரிகள் காட்சிப்பூர்வமாக இருப்பதாகவும், கதையை விளக்கி சொல்ல வசதியாகவும் இருப்பதாக இயக்குனர்கள் சொல்கிறார்கள்.

நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்றாலும், உணர்ச்சிப் பூர்வமாக பாடல் வரிகளை விரைவில் கொண்டுவருவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் பாடல் வரிகளே காட்சியை விவரிக்கும் படி என்பாடல்கள் அமைந்து விடுகிறது. தோனி திரைப்படத்தில் வரும் வாங்கும் பணத்துக்கும் பாக்குற வேலைக்கும் சம்மந்தமில்லை என்கிற பாடல் இளைஞர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தது.

நிறைய இளைஞர்கள் என்னைப் பாராட்டினார்கள். தோனி படத்தில் அனைத்துப் பாடல்களும் நான்தான் எழுதினேன். இப்போது கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 8 பாடல்களும் நான்தான் எழுதியிருக்கேன். மும்பையில் எழுதி பதிவு செய்தோம். அதன்பிறகு சிம்பொனி இசைக்காக கவுதம் மேனனும், இசைஞானியும் லண்டன் சென்றார்கள்.

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் அத்தனைப் பாடல்களும் மிக நன்றாக வந்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள இசைஞானியின் ரசிகர்களுக்கு இது நல்ல விருந்தாக இருக்கும் என்கிறார்.

இவரின் கைவண்ணத்தில் 60 க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட திரைப்படங்கள் வெளிவரத் தயார்நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 11 May 2012

நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

Wednesday, 9 May 2012

'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.

தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.

பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.

மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம்.

போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது!

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...

Monday, 9 April 2012

சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!இயக்குநர் ஹரி, நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை இயக்குநர் ஹரி படத்தில் விஜய் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பின்னர் விஜய்யை, ஹரி சந்தித்ததாகவும் அப்போது ஒரு லைன் ஸ்க்ரிப்ட் ஒன்றை விஜய்யிடம் சொல்லி உடனே ஓகே வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ‘துப்பாக்கி’யில் விஜய்யும், ‘சிங்கம் 2′ல் ஹரியும் பிஸியாக இருப்பதால், முறையே தங்களது புராஜெக்டுகளை முடித்துக் கொண்டு புதிய படத்திற்காக இருவரும் இணைவார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையான் - புயல் வேக ரஹ்மான்ரஹ்மானிடம் டியூன் வாங்குவது புயலுக்கு நடுவில் பூ பறிக்கிறதுக்கு சமம். திண்டாடிவிடுவார்கள். இந்திப் படவுலகின் ஜம்பவான்கள் டியூன் கிடைக்க ரஹ்மான் ஸ்டுடியோவில் தவம் இருப்பதுண்டு. ஆனால் இருவருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார் இசைப்புயல். ஒருவர் மணிரத்னம். இன்னொருவர் ர‌ஜினி.

கோச்சடையானின் முதல் ஷெட்யூல் லண்டனில் முடிந்திருக்கிறது. இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் விரைவில் தொடங்க உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என ர‌ஜினியே உத்தரவாதமளித்திருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் ஒரு படம் இத்தனை வேகத்தில் தயாராவதஅதிசயம்.

ர‌ஜினியின் படம் என்பதால் முதல் ஷெட்யூல் முடிவதற்குள் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களில் நான்குப் பாடல்களை கம்போஸ் செய்து சிலவற்றின் ஒலிப்பதிவையும் முடித்திருக்கிறார் ரஹ்மான்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ர‌ஜினியுடன் சரத்குமார், ஜாக்கிஷெராப், நாசர், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 8 April 2012

அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!ராமனின் மனைவி சீதையாக நடித்து கலக்கிய நயனதாரா அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயனதாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணம்.

இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்டிஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயனதாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத்தான் செம வரவேற்பு.

இதனால் புளகாங்கிதமடைந்து போன பாலகிருஷ்ணாவை மறுபடியும் நயனதாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயனதாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா.

தற்போது நயனதாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயனதாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயனதாரா தலையை ஆட்டியவுடன், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு என்ன கேரக்டர் என்று தெரியவில்லை. ஒரு வேளை திரவுபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ணராக நடிப்பாரா அல்லது தர்மன் வேடத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

'பெப்சி' விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்பெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் எனது போக்கு பிடிக்காத காரணத்தால், தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து என்னை நீக்கி என்னை பயமுறுத்தப் பார்க்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிடுவார், நமக்கு சாதகமாக செயல்படுவார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்தது. இருப்பினும் ஜெயலலிதா இதைக் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நலத்துறை வசம் இப்பிரச்சினையை அது ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை தரப்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால் தொழிலாளர் நலத்துறையினர் தங்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்துவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போது பெப்சிக்குப் போட்டியாக தயாரிப்பாளர்கள் ஒரு சங்கத்தை ஆரம்பித்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அமீருக்கும் இடையிலான மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாது, அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதையும் மீறி தனது அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் நாயகனாக அமீரை புக் செய்தார் பாரதிராஜா.அப்போதே பலருக்கும் சந்தேகம், இது ஒத்துவருமா, நடக்குமா என்று.

இப்போது பெப்சி விவகாரத்தை வைத்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். பெப்சிக்கு படு தீவிர ஆதரவு கொடுத்து வரும் அமீரை வைத்து படம் எடுப்பதா என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் பாரதிராஜாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கேள்வி. பாரதிராஜாவுக்குமே கூட அமீர் பெப்சிக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதில் எரிச்சல்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அன்னக்கொடி படத்திலிருந்து அமீ்ரை தூக்கி விட்டார் பாரதிராஜா.

இதுகுறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் நான் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறேன். இது பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்று கருதி என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்றால் தொடர்ந்து அந்த தவறைச் செய்வேன். தனது படத்திலிருந்து தூக்கி என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா. ஆனால் நான் அவருக்கு பயப்படமாட்டேன். தொடர்ந்து தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்.

பெப்சி விவகாரத்தில் தற்போது தமிழக அரசு தலையிட்டுள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது சுமூக முடிவு காணப்படும் என்றார்.

பிரியாமணியின் கவர்ச்சி மலையாளத்தில் பிசு பிசுப்பு: அண்மைய படம் படுதோல்வி!பிரியாமணியின் ஆரம்ப கால தமிழ் படங்கள் பெரிதாய் போகவில்லை. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்தவர். ”பருத்தி வீரன்” படத்தில் முத்தழகு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையானார்.
அதன் பின்னர் அவரது போதாத காலம், தமிழில் அடுத்து வந்த படங்கள் தோல்வியை தழுவியதால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் தலைகாட்ட தொடங்கியவர், அங்கு படு கவர்ச்சியாக, முகம் சுழிக்க வைக்கும் பாத்திரங்களில் துணிந்து நடித்து வந்தார்.
அவரது அத்து மீறிய கவர்ச்சி மலையாள ரசிகர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாலோ என்னவோ அவரது அண்மைய மலையாள படமான ”பிரஞ்சியத்தன்” படுதோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரியாமணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் ”தப்பன்னா” படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரியாமணி, அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இச் செய்தியை பிரியாமணி மறுத்துள்ளார். யாரும் ”தப்பன்னா” படத்தில் நடிக்க தன்னை அணுகவில்லை என தெரிவித்துள்ளார்.

Saturday, 7 April 2012

சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்... - சொல்கிறார் அசின்சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின்.

சல்மான் - அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன.

அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின்.

இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் கச்சிதமாக வரக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் தந்துள்ளார்.

அசின் கூறுகையில், "நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு.

அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது," என்றார்.

நெருக்கம், நல்ல புரிதல், ஜோடிப் பொருத்தம்... எல்லாமே நட்புதானா? என்னமோ போங்க..!

Friday, 6 April 2012

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்!ஹாரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை படம் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு 16 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை ஆகி இருக்கும் படம் 3தான். இத்தனைக்கும் சென்னையின் விநியோக உரிமையை தனது சம்பளமாக தனது மாமனாரிடம் வாங்கிக் கொண்டாராம்.

ஆனால் 37 கோடி ரூபாயை 3 வசூல் செய்யுமா என்றால் 15 கோடி ரூபாயை எம்.ஜி அடிப்படையில் வாங்கியிருக்கும் விநியோககஸ்தர்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள்.

இத்தனைக்கும் 20 கோடியை மல்லுக்கட்டி இழுக்கவே இன்னும் பத்து நாட்களாவது தியேட்டரில் படம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதற்கிடையில் 3 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து ஓய்ந்து விட்ட சூழ்நிலையில்,
படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை நீக்கி வீட்டுக் கொடுங்கள், உலக திரைப்பட விழாக்களில் சிறந்த ஆசிய இயக்குனருக்கான விருதுகள் கூட கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஐஸ்வர்யா தனுசுக்கு போன் போட்டு உற்சாகப் படுத்துகிறார்களாம் பெஸ்டிவல் புரோக்கர்கள்.

இந்த செய்திகளுக்கு நடுவே தற்போது சூடு பிடித்திருக்கும் முக்கியச் செய்தி, கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் இருவரும் இணைய இருக்கிறார்கள் என்பதுதான்! இது ஆடுகளம் படத்தை பார்த்து விட்டு கௌதம் விடுத்த அழைப்பாம்.

இருவருமே ரகசியம் காத்த அந்த கூட்டணியின் ரகசியம் தற்போது கசிந்து விட்டது. இந்தப் படத்துக்கு அனிரூத் இசை என்பதை தற்போது முடிவு செய்திருகிறார்களாம் கௌதமும் தனுஷும்.

தனுஷ் ஹிந்தியில் ராஞ்சான, பிறகு பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் நடிக்கும் படம் ஆகியவற்றை முடித்து விட்டு கௌதம் படத்துக்கு வருகிறாராம். கலக்குங்க மக்கா!

விபச்சாரி வேடத்தில் துணிந்து நடித்த அனுஷ்கா, டார்ட்டி பிக்‌ஷரில் நடிக்க மறுப்பது ஏன்?இந்தி படமான ”டார்ட்டி பிக்‌ஷர்” தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
தென் இந்திய புகழ்பெற்ற நடிகையான அனுஷ்காவை தயாரிப்பாளர் குழு அணுகியபோது, அப் படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துள்ளார்.

தற்பொழுது அனுஷ்கா செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ”இரண்டாம் உலகம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா கார்த்தி க்கு ஜோடியாக அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலும், விக்ரமுக்கு ஜோடியாக தாண்டவம் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் தேசிய விருது பெற்ற திரைப்படம் டார்ட்டி பிக்‌ஷர், வானம் படத்தில் கவர்ச்சியாக விபச்சாரி வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அனுஷ்கா, இப் படத்தை நிராகரித்தமைக்கான காரணம் சரிவர தெரியவரவில்லை!

கொலவெறி பாடல் தடை செய்யப்படுமா? கொலவெறிக்கு வந்த கொலவெறி நிலைமை!உலக பிரசித்தி பெற்றுள்ள, 3 திரைப்பட பாடலான ”வொய் திஸ் கொலவெறி” பாடலுக்கு எதிராக அப் பாடலை தடை செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் ”கொலவெறி” பாடல் இளைஞர்களின் மனதை தீயவழிப்படுத்துவதாக கூறியே மேற்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தபால் உதவியாளராக பணிபுரியும், எம். மாடஸ்வாமி என்பவராலேயே ”கொலைவெறி” பாடலுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் பாடல் வரிகள் வன்முறையை தூண்டுவதாகவும், இது இளைஞர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக அமெரிக்காவின் லோவா ஸ்டேட் பல்கலைகழகம், வன்முறை பாடல்கள் தொடர்பில் வெளியிட்ட ஆராட்சி முடிவையும் சமர்ப்பித்துள்ளார் மனுதாரர்.

Thursday, 5 April 2012

'சிம்புவுடன் நடிக்க நான் ரெடி... ஆனா மூணு கண்டிஷன்' - நயன்தாராஎன் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்னு நியூஸ் போடாதீங்க என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் இன்னொரு பக்கம், தன் அடுத்த பட நாயகியாக நடிக்க விருப்பமா என நயனுக்கு தூது விட்டு வருகிறாராம்.

இதனை நயன்தாராவே இப்போது அம்பலமாக்கிவிட்டார்.

இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதானாம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று கூறியுள்ள நயன்தாரா, அதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளாராம்.

தனக்கு சம்பளமாக தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும்.

நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக் கூடாது.

முக்கியமாக எனது கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகள் என்கிறார்கள் (கவனிக்க- நெருக்கமான காதல் காட்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை!).

இதுக்கு பேசாம நடிக்கமாட்டேன்னே சொல்லிடலாமே, என்று கமெண்ட் அடித்தாராம் பணத்தைக் கொட்டவிருக்கும் தயாரிப்பாளர்!

த்ரிஷா, குஷ்புவுடன் பிரபுதேவா விடிய விடிய விருந்து!காதல் தோல்வியால் துவண்டுபோய் ஓரமாக உட்கார்ந்துவிட்டிருப்பார் பிரபு தேவா என யாராவது நினைத்துக்கொண்டிருந்தால், அதை 'சரக்கு ஊற்றி' அழித்துவிடுங்கள்!

மனிதர் உற்சாகமாகவே இருக்கிறார். நேற்று முன்தினம் அவருக்குப் பிறந்த நாள். அன்றுதான் ஐபிஎல் துவக்கவிழா வேறு. மாலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை ஐபிஎல் போட்டியில் ஆடித் தீர்த்த பிரபு தேவா, நேராக தன் வீட்டுக்குப் போனார்.

அங்கே அவரது திரையுலக நண்பர்கள் பலர் காத்திருந்தனர். இயக்குநர் ஷங்கர், விஜய், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, அவர் மனைவி ஆர்த்தி, குஷ்பு, அவர் கணவர் சுந்தர், த்ரிஷா, ஹாரிஸ்ஜெயராஜ், விஜய் ஆண்டனி என பலரும் கூட, குஷியாக ஆரம்பித்தது பிறந்த நாள் பார்ட்டி.

ஸ்பெஷல் அயிட்டங்களுடன் உற்சாக வெள்ளம் கரைபுரள, விடிய விடிய கொண்டாடித் தீர்த்தனர்.

தனது நண்பர்கள் விஜய், விஷால், ஜெயம் ரவி மற்றும் பிரபு தேவாவுடன் சந்தோஷமாக ஆடி மகிழ்ந்தாராம் த்ரிஷா!

சில இடங்களில் மட்டும்தான் நாம் நாமாக சந்தோஷமாக இருக்க முடியும். பிரபு தேவா வீட்டில் நடந்த விருந்து அப்படிப்பட்ட ஒன்றுதான். ரொம்ப நாளைக்குப் பிறகு எல்லோரும் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம்," என்றார்.

Wednesday, 4 April 2012

யுவன் தயாரிக்க, அஜீத் நடிக்க... புதிய படம்!யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.

சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.

பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக வைத்திருந்தார்.

இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.

அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.

Tuesday, 3 April 2012

நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் 'வாலு' - ஹீரோ சிம்பு!!நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்துக்கு வாலு என்று பெயர் சூட்டியுள்ளனர் ('தலைப்பு தானா அமையுதா.. இல்ல வேணும்னே வச்சிக்கிறீங்களா சிம்பு?')

ஏற்கனவே நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.ய அதற்கு முன் சிம்பு நடித்த காளை படத்தை தயாரித்ததும் நிக் ஆர்ட்ஸ்தான்.

வாலு படத்தை புதிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். சிந்தனை செய் இயக்குநரிடம் உதவி இயக்குநரான பணியாற்றியவர்தான விஜய் (மன்மதன் பட இயக்குநர் நிலைமை வராமலிருக்க கடவது!).

தமன் இசையமைக்கிறார்.

சிம்புவிற்கு பொருித்தமான ஜோடியை வலைவீசித் தேடி வருகிறார்கள். விரைவில் ரிசல்ட் தெரிந்துவிடுமாம்.

வேட்டை மன்னன் முடிந்ததும் இந்தப் புதிய படம் ஆரம்பிக்குமாம். ஏற்கெனவே போடா போடி, வட சென்னை படங்களிலும் சிம்பு நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் போடா போடி தொடங்கி இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது!

அதிரடி வேகத்தில் ”தல” அஜித்!பில்லா-2 படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்டது. இந்த படத்திற்காக சற்றே எடை அதிகரித்திருந்த அஜீத், அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஷ்ணுவர்த்தன் படத்திற்காக எடை குறைய வேண்டுமாம்.

இந்த ஏப்ரலில் இப்படத்தின் போட்டோ ஷூட்டிங் பணியை முடித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கிற வகையில் தனது எடையையும் குறைத்துக் கொண்டிருக்கிறாராம் அஜீத்.

இந்த படத்தையும் வேக வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம் இருவரும்.

அதன்பின் அதே வேகத்தில் சிறுத்தை சிவா இயக்கப் போகும் படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் அஜித்.

Monday, 2 April 2012

3 சூப்பர் ஓபனிங்... மூன்றே நாட்களில் ரூ 1,16,87240!கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள '3'.

முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240.

படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. இன்று திங்கள்கிழமையும் கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்!

மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், "மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்,' என்றார்.

ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, "கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்... 3 சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், "விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?," என்றார்.

சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்," என்றார்.

Sunday, 1 April 2012

குண்டாக இருந்ததால் யாரும் சைட் அடிக்கல
சிறுவயதில் குண்டாக இருந்த என்னை யாரும் திரும்பி பார்க்கவில்லை. தாமதமாகத்தான் ஆண்கள் என்னை சைட் அடித்தார்கள் என சமீரா ரெட்டி கூறினார். வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

அவர் கூறியதாவது:

எனக்கு 19 வயது இருந்தபோது உடல் எடை 105 கிலோ. குண்டாக உடல் பெருத்து பார்ப்பதற்கே ஒரு ஷேப் இல்லாமல் இருந்தேன். என்னை கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இதனால் வெளியில் செல்வதே எனக்கு சோதனையாக இருக்கும். என் தங்கை மேக்னா ஒல்லியாக, அழகாக இருப்பாள். அவளிடம் பேசுபவர்கள் என்னிடம் பேச மாட்டார்கள். அவளது இடுப்பளவு 22 இன்ச். எனக்கு டவுள் சைஸ். கல்லூரி நாட்களில் இந்த வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறேன்.

போராட்டமே எனது வாழ்க்கையாகி விட்டது. இந்த போராட்டத்தை நடிகைகள் மட்டுமல்ல, குடும்ப பெண்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகள்போல் அவர்களும் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களது கணவன்மார்கள் விரும்புகிறார்கள்.

அப்போதெல்லாம் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு இட்லிதான் சாப்பிடுவேன். இதனால் மயக்கம் அடைந்து விழுந்ததுதான் மிச்சம். இதைப்பார்த்து கோபம் அடைந்த அம்மா, ‘இந்த முட்டாள் தனத்தை கைவிடாவிட்டால் வீட்டிலேயே பூட்டி வைத்துவிடுவேன் என்றார்.
பிறகுதான் உணவு என்பது உடல் எடைக்கு எதிரி அல்ல என்பதை புரிந்துகொண்டேன். முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டேன்.

யோகாசனம், உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தேன். நடிகையானபிறகு எனது பள்ளி, கல்லூரி தோழிகள் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ‘நீ புதுபிறவி எடுத்ததுபோல் இருக்கிறது’ என்றார்கள். என்னை கண்டாலே கிண்டல் செய்த ஆண்களும் காலதாமதமாகவே என்னை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

ஐரோப்பா செல்லும் முகமூடி டீம்சூப்பர் ஹீரோ கதையான முகமூடியின் கிளைமாக்ஸை காரைக்காலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் படத்தின் பாடல் காட்சிக்கு தமிழ் சினிமா மரபு மாறாமல் வெளிநாடு செல்கிறார்கள். அனேகமாக ஐரோப்பா.

யு டிவி தயா‌ரிக்கும் இந்த சூப்பர் ஹீரோ சினிமாவின் டாக்கி போர்ஷன் முடிவுக்கு வந்துள்ளதாகவும், கிளைமாக்ஸும் பாடல் காட்சியும் மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும் எனவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட், கதையுடன் ஒப்பிட்டால் இது அதிவேகம்.

பொதுவாக பாடல் காட்சியில் அக்கறை காட்டாதவர் மிஷ்கின். ஹீரோ, ஹீரோயின், இரண்டு சைக்கிள், ஒரு டஜன் கலர் பலூன்கள், அரை டஜன் குழந்தைகளுடன் பாடல் காட்சியை முடித்துக் கொள்கிறவர். குத்துப் பாடல் என்றால் மஞ்சள் சேலை கட்டிய டான்சர், பத்து பீர் பாட்டில்கள், டாஸ்மாக் பே‌க்ரவுண்ட்... பாடல் முடிந்தது.

பெ‌ரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் முறையாக வெளிநாடு செல்கிறார். வழக்கம் போல தெருமுனையில் ஹீரோவையும், ஹீரோயினையும் ஆடவிட மாட்டார் என்று நம்புவோம்.

நான் விசுவாசமாத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லையே... நயனதாரா!பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயனதாரா ஒரு பேட்டியில்.

இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,

காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.

பொதுவாக காதலிலும் சரி, திருமணத்திலும் சரி ஒருவரையொருவர் முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பது இருக்கத் தான் செய்யும். அதனால் பிரச்சனை ஏற்படத் தான் செய்யும். இது ஒரு அளவோடு நிற்க வேண்டும். எல்லை மீறும் போது காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றது. என் விஷயத்திலும் அப்படித் தான் நடந்திருக்கிறது.

சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை என்று கூறலாம். உலகில் நிலையானது என்று எதுவும் இல்லை. மக்கள் மாறுகின்றனர், சூழ்நிலைகள் மாறுகின்றன, செயல்பாடுகள் மாறுகின்றன. அது போன்ற ஒரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.

நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என் சொந்த விஷயம். அது பற்றி இனியும் பேச விரும்பவில்லை. என் சொந்த விஷயத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

என்னைப் பற்றி பத்திரிக்கைகள் ஏதேதோ எழுதி வதந்திகளைப் பரப்பின. ஆனால் நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். தற்போது நிலைமை மாறிவிட்டது. காதல் முறிந்துவிட்டது. ஒரு உறவு சரியில்லை என்றால், அப்போது எல்லாமே மாறுவது இயற்கை தானே?

உறவு முறிவுக்கு 100 காரணங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் அதற்கு மதிப்பில்லை என்கிற போது உறவை முறி்ததுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பிரபுதேவாவுடனான காதல் இப்படி பாதியிலேயே முறிந்துவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இது உறுதிபடுத்தியுள்ளது. காதலோ, திருமணமோ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அது வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் என்றார்.

விக்ரமை எனக்கு ரொம்போ பிடிக்கும்: எமி ஜாக்சன்மதராசபட்டணம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து இந்தி , தெலுங்கு திரைப்படங்களில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

இந்தியில் கௌதம் மேனன் இயக்கத்தில் எக் தீவானா திரைப்படத்தில் நடித்துள்ள இவர், இயக்குனர் விஜய் இயக்கும் தாண்டவம் திரைப்படத்தில் விக்ரம் உடன் நடிக்கிறார்.

தாண்டவம் திரைப்படத்தில் நடிக்கும் அனுபவம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,
தாண்டவம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் கதையை சிறப்பாக வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், விக்ரம் ஐ தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் அண்மையில் நடித்த திரைப்படங்களில் அவரது திறமைகளை ரசித்ததாக தெரிவித்த அவர், தாண்டவம் திரைப்படத்தில் விக்ரம் தனக்கு மொழி தொடர்பில் நிறைய உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை சிறப்பாக கற்று, மொழி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விருப்பப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

Saturday, 31 March 2012

‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா?இயக்குனர் எம் ராஜேஷ், நகைச்சுவையான படங்களை தேர்வு செய்து இயக்குபவர். ”சிவா மனசுல சக்தி”, ”பாஸ் என்கிற பஸ்கரன்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்பொழுது உதயநிதி ஸ்ராலின் ஐ வைத்து ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை இயக்குகிறர்.

இவரது அடுத்த திரைப்படம் ”ஆல் இன் அல் அழகு ராஜா”. இதில் முன்னனி நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.

இதற்கிடையில், ”பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தை பார்த்த அஜித், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படத்துக்கான கதையை தான் நடிப்பதற்காக தயார் செய்யுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டாராம். அதற்காக தயார் செய்யப்பட்ட கதை தான் ‘ஆல் இன் அல் அழகு ராஜா”. அஜித் பில்லா II இல் பிசியாக இருப்பதால் அக் கதைக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் என இயக்குனர் எம் ராஜேஷ் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக செய்தி கசிந்துள்ளது.

பில்லா II முடிந்ததும், இன்னோர் கதையுடன் தல யை எம் ராஜேஷ் அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றானில் வில்லனாக சூர்யா!தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கான தமிழ் மசாலா சினிமா ஃபார்முலாவில் குறைந்தது அரைடஜன் வில்லன்களை
வைத்து கதை பின்னுவதை வழக்கமாக்கி விட்டார்கள். கோச்சடையன் 3டி அனிமேஷன் படமும் இதற்கு விதிவிலக்கு கிடையாதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு மொத்தம் ஆறு வில்லன்கள்.

அதேபோல விஜய் நடித்து வரும் துப்பாக்கியில் பிரதான வில்லனை அடையும் முன்பு, மூன்று கொடூரமான தாதா வில்லன்களை, மிக புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி போட்டு தள்ளும் விஜய் இறுதியில் போட்டுத்தள்ளும் வில்லனை சோட்டா சகில் போல சித்தரித்திருக்கிறாராம் ஏ.ஆர் முருகதாஸ்.

இது ஒருபுறம் இருக்க தற்போது கோடம்பாக்கத்தின் மிகப்பரிய எதிர்பார்பாக இருந்து வரும் ‘ மாற்றான்’ படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வில்லை என்று மறுத்திருக்கும் இயகுனர் கே.வி.ஆனந்த அந்தப் படத்தில் சூர்யாவும் ஒரு வில்லன் என்பதை மட்டும் மறைத்து விட்டார் என்கிறார்கள் சூர்யா வட்டாத்தில்!

மாற்றானில் கௌதம் வாசுதேவ் மேனன் அறிமுகப்படுத்திய மூன்றுபேர் வில்லனாக நடிக்கிறார்கள். ஒருவர் நடுநிசிநாய்கள் படத்தில் அறிமுகமான வீரா, மற்றொருவர் பச்சைக்கிளி முத்துச்சரம் மிலிந் சோமன், முன்றாமவர் காக்க காக்க டேனியல் பாலாஜி! இவர்களோடு நான்காவதாக சூர்யாவும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது திரைக்கதையின்படி இந்தப் படத்தில் சூர்யா ஏற்றிருப்பது வில்லன் கதாபாத்திரம்தானாம்!

Friday, 30 March 2012

பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா!தெலுங்கு படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக நடிக்க இருக்கிறார் ஸ்ரேயா. சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற வெற்றிப்படங்கலில் நடித்திருக்கும் ஸ்ரேயா, இத் திரைப்படத்தின் கதை பிடித்திருந்ததால் இத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைஉலகின் பிரபல இயக்குனர் ஷன்டு, குறித்த பாலியல் தொழிலாளி பாத்திரத்துக்கு ஸ்ரேயா தான் பொருத்தமானவர் என்று ஸ்ரேயாவை அணுகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் திரைப்படம், ஸ்ரேயாவின் திறமைக்கு சவாலாக அமையும் என இயக்குனர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் பாலியல் தொழிலாளி, பாடகர், எழுட்தாளர் என்பவர்களுக்கிடையில் உள்ள உறவை மையமாக வைத்து படமாக்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தை தமிழ் நடிகைகள் புறக்கணித்து வந்த நிலையில், ‘வானம்” திரைப்படம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 29 March 2012

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!
பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.

முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.

ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.

11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

Wednesday, 28 March 2012

விஜய்யுடன் சேரும் விஜய்!ஆக்ஷன், அதிரடி கலந்த மசாலா படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார் விஜய்.நடுவில் ‘காவலன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களின் வரவேற்பை தொடர்ந்து  நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன் என்று நிரூபித்தார்.
‘காவலன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் படங்களை பார்த்தால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை விட தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜய்யின் ஆக்ஷன், ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகிய இரண்டையும் கலந்து விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது ‘துப்பாக்கி’.
அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ யோஹன் ‘ படத்தில் விஜய்யை ஸ்டைலிஷான ஆக்ஷன் கதையின் நாயகனாக ஆக்கி இருக்கிறார் கெளதம்.

இயக்குனர் விஜய்யுடன் விஜய் சேரும் படமும் ஆக்ஷன் கதை தான்.

Tuesday, 27 March 2012

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா?- ஸ்ரீதேவிக்கு கண்டனம்முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.

"நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை," என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Monday, 26 March 2012

சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்! ஆனால் நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழிகளில் தயாராக இருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘வடசென்னை’. ஆனால் இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, வெற்றிமாறன் புதிதாக தொடங்கியிருக்கும் ‘க்ராஸ் ரூட் புரடெக்ஷன்’ என்ற தனது சொந்த பட நிறுவனத்தின் மூலம் சித்தார்த்- புதுமுகம் அர்ஜிதா ஜோடியை வைத்து ‘தேசிய நெடுஞ்சாலை 45′ என்ற படத்தை துரை.தயாநிதியுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது உதவியாளர் மணிகண்டனுக்கு கொடுத்திருக்கும் வெற்றிமாறன், இன்னொரு பக்கம் ‘வடசென்னை’ படத்துக்கு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் நம்பகமான வெற்றிமாறன் வட்டாரம் நமக்குத்தரும் தகவல். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார்.

தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில்  தன்னம்பிக்கையொடு தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தும் நயன்தாரா, சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சம்பளம் இரண்டு மடங்காக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதாவது நயன் தமிழ், தெலுங்கு இரண்டுக்குமாக 1.50 கோடி கேட்கிறாராம். இந்த சம்பள விவகாரத்தை தற்போது டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பதாக தகவல் தருகிறார்கள். இந்த ஜோடி மீண்டும் சேர்ந்தால் படத்துக்கு வேறு விளம்பரமே தேவையில்லை என்பதால், இந்த சம்பளத்தை நயனுக்கு கொடுத்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத்தேவையில்லை.

சந்தடிச்சாக்கில் தனது ‘லவ் ஆந்தத்தில் தலைகாட்ட முடியுமா என்று கேட்க.. அதற்கெல்லாம் நேரமில்லை’ என்று கறாராக சொல்லி விட்டாராம் நயன்! என்னங்க நடக்குது… கலி முத்திப்போச்சானு அப்ப அப்ப கிள்ளி பார்த்துக்க வேண்டியதுதான்!

Sunday, 25 March 2012

பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் ககானிவித்யாபாலன் நடித்த Kahaani பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் எதிர்பாராத சர்ப்ரைஸ். இந்த க்ரைம் த்‌ரில்லர் படம் இரண்டாவது வார இறுதியில் 43.05 கோடிகளை வசூலித்துள்ளது.

கதையையும், ஸ்கி‌ரிப்டையும் நம்பினால் பெ‌ரிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை என்பது சமீபத்திய தமிழ் உதாரணம் மௌனகுரு. இந்தியில் ககானி. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருக்கும் இந்தப் படம் அவ‌ரின் இமேஜை அதிக‌ரித்திருக்கிறது. இவ‌ரின் டர்ட்டி பிக்சர்ஸ், ககானி இரண்டும் சூப்பர்ஹிட். அதுவும் அடுத்தடுத்து. இரண்டுமே ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட்.

க‌‌ரீனா, கத்‌ரினாவை மறந்து விதயாபாலன் என்று முணுமுணுக்கிறது ரசிகப் பட்டாளம். முக்கியமாக அமீர்கானை இப்படத்தின் வெற்றி பாதித்திருக்கிறது. இவ‌ரின் அடுத்தப் படம் தல்லாஸும் இதேபோலொரு க்ரைம் த்‌ரில்லர். அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த தனது படத்தை நவம்பருக்கு அமீர் தள்ளி வைத்துள்ளார்.

அமீரையே பயப்பட வைத்த வித்யாபாலன் இந்தியில் அறிமுகமாவதற்கு முன் நடிக்கத் தெ‌ரியவில்லை என்று ஒருமுறையும், ரொம்ப சுமார் அழகி என இன்னொருமுறையும் தமிழ்‌த் திரையுலகால் நிராக‌ரிக்கப்பட்டவர்.

நமிதாக்கள் கோலோச்சும் ஊ‌ரில் நடிக்கத் தெ‌ரிந்தவருக்கு என்ன வேலை.

Saturday, 24 March 2012

படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க... - மனமிரங்கிய ஸ்ரேயாமியாவ் மியாவ் பூனை, குறுக்க நடந்த பூனை என்று விவேகாவை விட்டே மறுபடியும் பாட்டெழுதுகிற அளவுக்கு ஒரு டப்பிங் படத்திற்கு சகுனத்தடை ஏற்படுத்தினார் ஸ்ரேயா. வாங்கிய சம்பளத்திற்கு நடித்தோமா, நடையை கட்டினோமா என்றில்லாமல் தான் நடித்த படத்தை டப்பிங் செய்து வேறு லாங்குவேஜில் வெளியிடக்கூடாது என்று சட்டம் பேசுவதெல்லாம் சரியா? ஆனால் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரேயா.

இவர் மலையாளத்தில் நடித்த ராஜா போக்கிரி ராஜா படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி வெளிவரப் போகிறது. இதையறிந்த ஸ்ரேயா, இப்படத்தை வாங்கி வெளியிடும் மலேசியா பாண்டியன் என்வரை எதிர்த்து கோர்ட் வரைக்கும் போவேன் என்று மிரட்டியதோடு பிலிம் சேம்பரிலும் புகார் கொடுத்து விட்டார். (ஒரிஜனல் தயாரிப்பாளர் தாமஸ்) அதோடு விட்டாரா? நடிகர் சங்கத்திலும் ஒரு புகாரை தட்டிவிட்டார். அதன்பின் படத்தை வெளியிடுகிற வேலையை விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு அலைவதே பெரிய வேலையாக இருந்தது மலேசியாக்காரருக்கு.

இந்த நிலையில்தான் சாமியேறிய ஆத்தா சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறது. சாட்சிக்காரர்கள் காலில் விழுவதைவிட ஸ்ரேயாவிடமே பேசிவிடலாம் என்று நினைத்தாராம் மலேசியா பாண்டியன். அதுதான் வொர்க்கவுட் ஆனது இறுதியில். பாண்டியனின் உருக்கமான பேச்சுக்கு செவிமடுத்த ஸ்ரேயா, நோ அப்ஜெக்ஷன் சொல்லிவிட்டார் இப்போது.

இவர் மீது கொடுத்திருந்த புகாரையும் வாபஸ் வாங்கிவிட்டார். என்னோட அடுத்த படத்தில் ஸ்ரேயாதான் ஹீரோயின் என்று சொக்காயெல்லாம் ஈரமாகிற அளவுக்கு நெக்குருகி பேசுகிறார் மலேசியா பாண்டியன்.

பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணிபொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.

பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்களில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ… புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டாம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் ப்ரியா மணி.

இதுகுறித்துக் கேட்டபோது, ” பாலிவுட்டில் நுழைவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்,” என்றார்.

Thursday, 22 March 2012

ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.

வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.

Wednesday, 21 March 2012

ஆர்யாவின் 'ரகசிய' வீட்டில் நயன்தாரா!நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா.

பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார்.

ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்?

இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம் ஆர்யா.

விருப்பத்தை நயனிடம் சொன்னதும், அதுக்கென்ன வந்துட்டா போச்சி என அடுத்த நாளே வீட்டுக்கு வந்துவிட்டாராம் 'சேச்சி'!

இன்னும் சில நெருங்கிய நண்பர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் ஆர்யா. அனைவர் முன்னிலையிலும் நயன் குத்துவிளக்கேற்ற, குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா.

நயன், குத்துவிளக்கு, குடித்தனம் என்ற வார்த்தைகளை நீங்களாக முடிச்சுப் போட்டு புது அர்த்தம் கற்பித்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!!

Tuesday, 20 March 2012

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் நயன்தாரா!கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.
ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல்தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஹீரோயின¢ ஆனார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது. அவர் கால்ஷீட் ஒதுக்கி தர இருந்தார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு படம் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்ததால் ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு புதுமுகங்களை அழைத்து தேர்வும் நடந்தது. ஆனால் பொருத்தமான ஹீரோயின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் இருந்து தூது வரவே இயக்குனர் அவரிடம் பேசினார். ஏற்கனவே ‘பிசினஸ்மேன்Õ என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்திருந்ததால் இதிலும் அவர் ஜோடி சேர மகேஷ் பாபு சம்மதித்தார். உடனடியாக கால்ஷீட் வழங்கினார் காஜல். இதையடுத்து ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமன்னா வாய்ப்பை காஜல் பறித்திருப்பதால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!போக்கிரி திரைப்படத்தில் விஜய் பொலீசாக இருந்த போதும், அவர் சீருடையுடன் நடிக்கவில்லை. பொதுவாக விஜய் திரைப்படங்களில் சீருடை அணிவதை தவிர்த்து வருபவர் அதாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் துப்பாக்கியில் சீருடையுடன் நடிக்கிறார் இளைய தளபதி. இப் படத்தில் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படியென்றால்: ஒரு சீனில் காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சியிலும் கூட இராணுவ சீருடையுடன்தான் நடித்திருக்கிறாராம் விஜய்.

Monday, 19 March 2012

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனைஅடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.

Sunday, 18 March 2012

ஜீரோ சைஸ் அசின்
நம்பினால் நம்புங்க. நம்ம ஊரு அசின்தான் இது. ஊசிமரக்காட்டில் பாசி விற்க போனவர் மாதிரி இதென்ன 'துக்கடா' கோலம் என்று மாரிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அவரது ரசிகர்களுக்கு... இதுதான் இப்போது ஃபேஷன் சாமிகளா! இதுக்கு பேரு ஜீரோ சைஸ்சாம். (ஒரு பூச்செண்டு பீரோவை இப்படி ஜீரோவாக்கி பார்ப்பதில் அப்படி என்னங்கடா சுகத்தை கண்டீங்க?)

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்த அசினை யாரோ வயிற்றுப் பசிக்கு ஓசி சோறு தின்ன வந்த பெண்ணாக இருக்கும் என்கிற ரேஞ்சிலேயே கிராஸ் பண்ணியதாம் மொத்த கூட்டமும். யாரோ ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அசினுடோய்.... என்று குரல் கொடுத்த பின்புதான் ஆட்டோகிராப், போட்டோக்கள் என்று அமர்க்களப்பட்டதாம் அந்த இடம்.

ரொம்ப கஷ்டப்பட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். அதுக்குள்ளே ஊசி மூலம் கொழுப்பை குறைச்சிட்டேன்னு எழுதிராதீங்க. அவ்வளவும் வொர்க் அவுட் பண்ணி இளைச்சது தெரியுமா என்று அந்த இடத்திலேயே கண்ணுக்கு தெரியாத தன் குருவி முட்டை சைஸ் முண்டாவை தட்டிக் காட்டினாராம் அசின்.
என்னத்தை செய்ய? சிலருக்கு எலும்புக்கறிதானே பிடிக்குது!

ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...!காதலர்களாக வலம் வந்து பின்னர் பிரிந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன் ஜோடி இப்போது, ஹன்சிகா துணையோடு மீண்டும் திரையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓ மை ப்ரண்ட். வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் இப்போது தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது ஸ்ருதி மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கும் தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இப்படி மூவருக்குமே நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். படத்தில் சித்தார்த்தும், ஹன்சிகாவும் தான் காதலர்கள், ஸ்ருதிஹாசன் சித்தார்த்தின் நண்பராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி
கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.

படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்.