Sunday 4 October 2015

விமர்சனங்களையும் மீறி வசூலைக்குவிக்கும் புலி

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திர காலத் திரைப்படமாக வெளிவந்துள்ள படம் ‘புலி’. படம் வெளிவந்த நாள் முதல் இப்படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தது.



இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த மூன்று நாட்களாக படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் தெரிவிக்கிறார்கள்.

சினிமா பார்க்க வருபவர்களிள் குறைந்த சதவிகிதத்தினரே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தியேட்டர்களுக்கு அதிகமாக வந்து படம் பார்ப்பவர்கள் சாதாரண ரசிகர்களே என பிரபல வினியோகஸ்தர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய விஜய் படங்கள் அளவிற்கு இந்தப்படம் ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் கடந்த மூன்று நாட்களில் சராசரியாக சுமார் 30 கோடி முதல் 35 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாடு தவிர கர்நாடகா, கேரளாவில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட கொஞ்சம் குறைவாக வசூலானாலும் மோசமான வசூல் இல்லை என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

விமர்சனங்களையும் மீறி படம் வசூலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்ற பேச்சு தான் கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது. தெலுங்கில் ஒரு நாள் தள்ளி வெளியானதால் வசூல் குறைவாக உள்ளதாம். இருந்தாலும் ‘விஷுவல் ட்ரீட்’டாக இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்ற பாராட்டு எழுந்துள்ளது.

இருந்தாலும் படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இன்னும் பிரமாதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் மீது தான் பலரின் விமர்சனம் உள்ளது. இன்றுடன் படம் எப்படியும் 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாகவே திரையுல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment