Wednesday, 31 December 2014

ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம்

ஐ படத்தின் கதையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்திடம் சொன்னதாகவும், அவர் நடிக்க மறுத்ததால்தான் இப்போது விக்ரம் நடித்ததாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். 
 
 
ஐ படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் பற்றிக் கூறுகையில், இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் என்றார். "பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். அப்போது முதலில் ரஜினிக்குத்தான் இந்தக் கதையைச் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது நடிக்கமுடியவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை எடுத்துள்ளேன். 
 
ஐ ட்ரைலர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடித்திருந்ததை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ட்வீட் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை," என்றார். 
 
தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்தான் என்று ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

Friday, 26 December 2014

கமலுடன் கடைசியாக பணிபுரிந்த இரு மேதைகள்

மிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலக திரைப்பட கலைஞர்களே வியந்து பார்க்கும் அளவுக்கு கோலிவுட்டில் ஒரு திரைப்பட கலைஞர் உண்டு என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அவர் திரையுலகில் வியந்து பார்த்தது இரண்டெ இரண்டு பேர்தான். ஒருவர் நாகேஷ், மற்றொருவர் கே.பாலசந்தர். இவர்கள் இருவரையுமே கமல் எப்போதும் தனது மானசீக குருவாகத்தான் கருதி வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் நாகேஷ், கே.பாலசந்தர் ஆகிய இருவரும் நடித்த கடைசி திரைப்படம் கமல்ஹாசன் படம்தான் என்பது ஒரு அபூர்வ ஒற்றுமையாக அமைந்துள்ளது. நாகேஷ் நடித்த கடைசி படம் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த 'தசாவதாரம். அதேபோல் ஒருசில படங்களில் மட்டுமே திரையில் தோன்றிய பாலசந்தர் நடித்த கடைசி படம் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் 'உத்தம வில்லன்'. நாகேஷ், பாலசந்தர் ஆகிய இரு மேதைகளும் கடைசியாக கமல்ஹாசனுடன் பணிபுரிந்துவிட்டுத்தான் இப்பூவுலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளனர் என்பதை நினைக்கும்போதே சிலிர்ப்பாக உள்ளது.
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf
காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார். 12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது. அவர் கூறியது:சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன். இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது. மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது. இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14801&id1=3#sthash.ih0Y8bay.dpuf

Tuesday, 23 December 2014

100 படங்களை இயக்கிய இயக்குநர் கே. பாலசந்தர் காலமானார்!!

100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று காலமானார். 
 
'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின. 
 
 
 
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று பாலசந்தர் காலமானர். 
 
பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு:
 
 1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 
 
 
1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார். அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். 
 
அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். 
 
அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். 
 
அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. 
 
 மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 
 
 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். 
 
மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்.

லிங்கா சாதனையும் சர்ச்சையும்

லிங்கா படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிலரும், இல்லை படம் வெற்றி என தயாரிப்பாளர் தரப்பும் கூறி வருகிறது. இதில் எது எண்மை?
 
 
ரஜினி படம் மற்ற அனைத்து நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம் வசூல் செய்யும் என்பதை 12 -ஆம் தேதி வெளியான லிங்கா மீண்டும் நிரூபித்தது. உள்ளூர், வெளிநாடு என அனைத்து இடங்களிலும் படம் முதல் மூன்று தினங்களில் சரித்திர சாதனை வசூலை பெற்றது. 
இந்த வருடம் சூப்பர்ஹிட்டான விஜய்யின் கத்தி சென்னையில் முதல் வார இறுதியில் 1.7 கோடிகள் வசூலித்தது. லிங்காவின் முதல் வார இறுதி வசூல் 2.6 கோடிகள். தயாரிப்பாளர் தரப்பு கூறுவது போல லிங்கா மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உண்மை.
 
அதேநேரம் நான்காவது நாளிலிருந்து படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகம் சரிய ஆரம்பித்தது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 2.6 கோடிகள் வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் அதில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை. 1.13 கோடிகளை மட்டுமே வசூலித்தது. முதல் பத்து தினங்களில் லிங்காவின் சென்னை மாநகர வசூல் 5.35 கோடிகள். நிச்சயமாக வேறு எந்த நடிகரின் படத்தையும்விட அதிகம். அதேநேரம் மூன்று தினங்களில் 2.6 கோடி வசூலித்த படம் அடுத்த ஏழு தினங்களில் 2.75 கோடிகளையே வசூலித்தது. ரஜினியின் சிவாஜி, எந்திரன், சந்திரமுகி போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த சரிவு சதவீதம் அதிகம்.
 
மாணவர்களுக்கு அரையாண்டு பரீட்சை நேரத்தில் படத்தை வெளியிட்டதால் வசூலில் சரிவு ஏற்பட்டது. ஆனால் பரீட்சை முடிந்து அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் மீண்டும் கூட்டம் அதிகரித்துள்ளது என வேந்தர் மூவிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது உண்மையா?
 
சென்னை மற்றும் புறநகரில் லிங்கா திரையிடப்பட்டுள்ள 30 திரையரங்குகளுக்கு, டிக்கெட்நௌ டாட் காமின் மூலம் முன்பதிவு செய்யலாம். இன்று இந்த முப்பது திரையரங்குகளிலும் டிக்கெட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதுதான் தமிழகம் முழுவதிலுமுள்ள நிலைமை.
 
 
 
எந்திரன், சந்திரமுகி போன்ற திரைப்படங்களுக்கு முதல்வாரத்தை கடந்தும் திரையரங்குகள் பார்வையாளர்களால் நிரம்பின. அதற்கு காரணம் படம் ஜனங்களை கவர்ந்திருந்தது. லிங்காவால் அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை. இதை வைத்து ரஜினின் சந்தை மதிப்பு குறைந்துவிட்டதாக கூற முடியாது.
பத்து கோடியில் தயாராகும் மற்ற ஹீரோக்களின் படங்கள் பதினைந்து கோடிகள் வசூல் செய்தால் ரஜினியின் படம் 25 கோடிகள் சாதாரணமாக வசூலிக்கின்றன. லிங்காவும் அப்படியே. இருந்தும் நஷ்டம் என்று ஏன் குரல்கள் கேட்கின்றன?
 
பத்து கோடியில் தயாராகும் படத்தை இருபது கோடிக்கு விற்றால் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். அதே பத்து கோடி படத்தை முப்பது கோடிக்கு விற்றால்...? லிங்காவில் நடந்தது அதுதான். மிக அதிக விலைக்கு படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் வாங்கின. அதனை படம் வசூல் செய்யுமா என்ற பதட்டம் அவர்களுக்கு. 
 
அதேநேரம், படம் வெளியான முதல் வாரமே நஷ்டம் என்று கூறுவது சரியா?
 
ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும்முறை வந்த பிறகு படத்தின் ஒட்டு மொத்த வசூலில் எண்பது சதவீதம், முதல் பத்து தினங்களில்தான் வருகிறது. ஹேப்பி நியூ இயர் படம் முதல் 3 தினங்களில் 100 கோடியை தாண்டி வசூலித்தது. அப்படியானால் பத்து தினங்களில் எத்தனை கோடிகளை அது வசூலித்திருக்க வேண்டும்? ஆனால் அதன் ஒட்டு மொத்த வசூலே 202 கோடிகள்தான்.

மொத்த வசூலில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகம் முதல் மூன்று தினங்களில் கிடைத்தது. இதுதான் தமிழ் சினிமாக்களின் நிலையும். கத்தியின் இதுவரையான சென்னை வசூலான 7.8 கோடிகளில் 90 சதவீதம் இரண்டே வாரங்களில் கிடைத்தது. அதனால்தான் லிங்கா வெளியான ஐந்தாவது நாளே படத்தால் நஷ்டம் ஏற்படுமோ என்று விநியோகஸ்தர்கள் பதறிப் போயினர்.
 
தமிழில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த பட்டியலில் ரஜினியின் படங்களே முதல் மூன்று இடங்களில் உள்ளன. கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட எந்த நடிகரின் படமும் லிங்கா அளவுக்கு வசூலிக்கவில்லை. அப்படியிருந்தும் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நஷ்டம் ஏற்படுமோ என்ற பதட்டம் ஏற்படுமாயின் அது நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம்.

ரஜினியின் புகழுக்கு இது சிறப்பு சேர்ப்பதாக இராது. தயாரிப்பாளரும், ஒட்டு மொத்த விநியோகஸ்தரும் மட்டும் லாபத்தை பங்கிட்டால் போதாது, சிறு விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் படத்தின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்தும் அதிகாரமும், கடமையும் ரஜினிக்கு மட்டுமே உள்ளது.
 
 

Friday, 19 December 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்?

ஜினியின் அறிவிக்கப்படாத அடுத்த வாரிசாக அமர்க்களப்படுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து வெற்றி களைக் குவித்துவரும் இவருக்கு ரசிகர்களின் வட்டம், மாவட்டமாய் வளர்ந்து, மாநிலங்கள் தாண்டி விரிந்து கொண்டிருக்கிறது.
படம் வெளியாகும்போது தியேட்டர்களில் பேனர் கட்டி புகழ்பாடவேண்டாம், கட்-அவுட் வைத்து பால்குளியல் நடத்த வேண்டாம், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டபிறகும், ‘அதச்சொல்றதுக்கு நீ யாருய்யா? நாங்க அப்பிடித்தான் செய்வோம்’ என்று பாசக்காரப்புள்ளைகளாக அஜித்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டம். ஜீன்ஸ் மாறாத டீன்ஸ் ரசிகர்கள் கூட, ‘வீரம்’ படம் வந்த பிறகு வேட்டி- சட்டைக்கு மாறுவதை ஃபேஷனாகக் கொண்டார்கள்.

‘உயிரினும் மேலான ரசிகர்களே! புகை, மது இரண்டுமே தீங்கானது. திரைப் படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு, நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க... வாழ்த்துக்களுடன் அஜித்குமார்’ என்று ரசிகர்களுக்கு ‘தல’ எழுதிய கடிதம், அவர்களது குடும்பத்தையும் கவர்ந்தது. அப்புறமென்ன, அவர்களும் ரசிகர்களானார்கள்.

இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் அஜித் ஏற்கும் கதாபாத்திரங்களை பொது ரசிகர்களும் ஏற்றுக்கொள்வதே இவரது வெற்றிக்கு உத்தரவாதத்தை எந்த வாதம், விவாதமும் இல்லாமல் தருகிறது. மவுனப்படம் எடுத்தாலும், அதைப் பேசவைத்துவிடும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ‘தல’ கைகோர்த் திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம், பூஜைபோட்ட நாளிலிருந்தே பண்டிகைக் கோலம் கண்டுவருகிறது. யூடியூபில் தூண்டல் காட்சி வெளியானபோது முதல் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் 5 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது இதுவரை இல்லாத திரைச் சாதனை.

தன்னை நல்லவராக மட்டுமே காட்டிக்கொண்டு, ரசிகர்களுக்கு வஞ்சக வலை வீசாமல், கெட்டவனாகவும் வருவேன் என்று நெஞ்சக வலை விரிப்பதால் உஷார் பேர்வழிகளும் இவரிடம் சுலபமாக சிக்கிக் கொள்கிறார்கள். இவரது வெளிப்படையான பேச்சுக்கு, எழுந்து நின்று கைதட்டும் ரஜினிகாந்தின் அடுத்த வாரிசாகவே ‘தல’யை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் பொது ரசிகர்கள்.  பக்குவ முதிர்ச்சியும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரமும் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கும் என்பதே மனச்சாட்சியோடு பேசும் கோடம்பாக்க சினிமாக்காரர்களின் கருத்து.

Thursday, 18 December 2014

இயங்க மறுக்கிறதா இயக்குனர் சிகரம்?

புதிய துறை ஒன்று ஒரு இனத்துள் உருவாகும் போது அதன் தோற்றுவாய் வேறு துறையினரால் தொடங்கப்பட வாய்ப்புண்டு. திரைப்படத்துறை தமிழில் ஆரம்பிக்கப்பட்ட போது பாடி நாடகம் நடித்தவர்கள் ”ஹமராவிற்கு” முன் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் ஆரம்பத்தில் இசை தமிழ்ப் படங்களில் நடித்திருக்க வேண்டும்.தியாகராஜபாகவதரும் சின்னப்பாதேவரும் கதாநாயகர்களான கதை இதுவாகத்தானிருக்கும். இசையைத் தொடர்ந்து வாள் வீச்சும் கம்படியும் சண்டைக்காட்சிகளும் குதிரைகளில் பாய்ந்து பாய்ந்து நடித்தன.

   நடிப்பிற்கென தோன்றிய அபூர்வப் பிறவி சிவாஜி கணேசன் நடிக்க ”சான்ஸ்” கேட்டு வந்த போது இவன் என்ன வித்தியாசமாக பேசுகிறான்…. வேறு மாதிரி நடிக்கிறான் ….. பாகவதர்கள் போல இல்லையே என வாய்ப்பு மறுக்கப்பட்டு …. அவர் விரட்டப்பட்டார். தான் அழுத கண்ணீரில் ”ஏ வி எம்” ஸ்ரூடியோவில் வளர்ந்த மரங்கள் பல என ஒரு தடவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளம் அழகான பாகவதர்களையே தேடினர். அழகிற்காக நடிகனாக தெரிவு செய்யப்பட்ட ஜெமினி கணேசன் முன் சிவாஜி கணேசன் நடிப்பு வாய்ப்பிற்காக நேர் முகப் பரீட்சைக்காக வந்து நின்றதும் வரலாறு தான்.

நடிப்புச் சக்தியாக சிவாஜி கணேசன் நுழைந்த பின்னரும் முகத்தை தன் கையால் மறைக்காது அழத் தெரியாத எம் ஜீ அர் அவரிற்கு பெரிய சவாலாக விளங்கினார். நடிப்பைத் தவிர இதர சினிமா அம்சங்களை எல்லாம் எம் ஜீ அர் இழுத்து வந்து தனது படங்களை சிவாஜியின் இமாலய நடிப்பு படங்களுடன் போட்டியிட வைத்து வெற்றியும் கண்டார். ஆனாலும் நடிப்புத் தான் இன்று வரை நடிகர்களால் தேடப்படுகிறது போற்றப்படுகிறது. ஆம், படங்கள் எம் ஜீ ஆரின் சண்டைக் காட்சிகளிற்கும் , விறுவிறுப்பான கதைகளிற்காகவும் பாடல்களிற்காகவும் அழகான இளம் கதாநாயகிகளிற்காகவும் ஓடி வசுல் சாதனைகளை நிகழ்த்தி வந்தது மறு புறத்தில் சிவாஜியின் படங்களும் நடிப்புச் சாதனைகளை நிகழ்த்தியவாறு திரையில் ஓடின. மூன்றாவது நிலையில் ஜெமினி கணேசனின் படங்களும் ஓடின. இந்த நிலையில் இயக்குனரிற்காக படம் ஓடியதென்றால் அது பாலச்சந்தரிற்காகத் தான்.

அந்நாட்களில் முக்கோணக்காதல் கதைகளிற்கு ஸ்ரீதரும் இன்னுமாக கோபாலகிருஸ்னன் போன்ற பல சிறந்த இயக்குனர்கள் இல்லாமில்லை. இருந்தாலும் அன்றைய தமிழ்ச் சினிமா வழமைகளைத் தளுவாது , மாறுபட்ட விதத்தில் தனக்கென ஒரு புதியபாணியில் படங்களை இயக்கத் தொடங்கியவரே திரு பே பாலச்சந்தர் ஆவார். இவரது ”ஐடியாக்கள்” கூட வேறு எவரையும் தளுவியதாக இல்லாமல் அவருடைய சொந்த் தயாரிப்பாகவே இருந்தன. இவரது கதைகளில் ”ஹீரோயிசத்திற்கு” முதன்மை அளிக்கப்படவில்லை.

சமூக வழமைகளிற்கு முரனான சிக்கல் நிறைந்த தொடரும் மானசீக உறவுகளை அடிப்படையாக வைத்து அவரால் எழுதப்பட்ட கதைகளிற்காக படங்கள் ஓடி வெற்றி பெற்றன. இதற்கு உதாரணங்களாக நாணல், இருகோடுகள் , எதிரொலி, நான் அவனில்லை, மூன்று முடிச்சு அபூர்வ ராகங்கள் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இவரது ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பரிசோதனை என கவிஞர் வைரமுத்து ஒரு தடவை ஒப்பிட்டது குறிப்பிடத் தக்கது.

திருமாணமாகி மனைவியுள்ள போது கதையின் நாயகனிற்கு தோன்றும் காதற்கதையே இரு கோடுகளாகும். திருமணமான, வயதிலும் மூத்த பாடகியை காதலிக்கும் மிருதங்க இளைஞனின் காதற்கதையாக அபூர்வ ராகங்கள், தான் விரும்பியவளை அடைய தன் நண்பனை நீரில் மூழ்கி மரணமடையும் போது உதவ மறுத்து பின் தான் விரும்பியவளையே தாயாக காணும் தொடர் கதையாக மூன்று முடிச்சு ( வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் பாடல் -  ) அவள் ஒரு தொடர் கதையென இவரது கதைகள் யாவும் மரபிற்கு முரனான ஆனால் ஏற்ற வேண்டிய காதலை அல்லது மணோவியல் உறவுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான கதைகளாகும்.

எதையும் ஒப்பிட்டு சித்தரித்கும் காட்சிகள் வாயிலாக , பாத்திரங்களின் சிக்கலான நினைப்புக்களைக் கூட , வசனங்கள் இல்லாமலே பாமர ரசிகர்களும் ஊகித்து புரியும் வண்ணம் அமைக்கும் இந்த சிந்தனைச் சிற்பி ஒரு தனித்துவமான பிறவியாகும். இரு கோடுகள் படத்தில் ”ஒரு ஆண்(கணவன்) …. இரு பெண்கள் என்ற நிலையில் ஒரு சங்கீதக்கதிரைப் போட்டி காட்சியை அமைத்து இரு பெண்களையும் ஒரு கதிரைக்காக (ஒரு அணிற்காக) சுற்றிச் சுற்றி ஓட வைத்து ……… ஒரு பாடற் காட்சியை ( பாடல் - நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாஸ்சா ரி எம் எஸ்- நாகேஸ் ) அமைத்து பாத்திரங்களின் போக்கை சித்தரித்த அற்புதம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. இதே போன்ற ஒரு கதிரைக்கான 3 பெண்களின் ஓட்டத்தை சொல்லத்தான் நினைக்கிறேன் பாடலிலும் காணலாம். இதே போன்ற போட்டியை ”புன்னகை மன்னன் கோயிலிற் கண்ணன்…….. என்ற பாடல் மூலமும் கண்னன் …ராதைக்காகவா? ருக்மணிக்காகவா? என்று ஆரம்பித்து இருவரிற்கும் என முடிப்பது இரை மீட்பிற்குரியது.

இதே இரு கோடுகளில் ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சின்னக் கோடாக்குவது என்ற கேள்வியை எழுப்பி ஒரு தத்துவத்தையே முத்தாக்கி முடிவுமாக்கிய திரை இலக்கியம் இரு கோடுகள். திரு கே பாலச்சந்தர் ஒரு பிராமணர் என்பதால் வயதான ஒரு கணவரிற்கு மூன்று முடிச்சில் ஒரு இளம் பெண்ணான ஸ்ரீதேவியை வாழக்கைப்பட வைத்தமை தொடர்பில் ஒரு சாரார் அரசியற் தனமாகவும் மறுசாரார் சமூகவியற் காரணமாகவும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன் வைத்த போதும் , திரையில் கதை வசனம் டைரக்ஜன் கே பாலச்சந்தர் என பின்னணியில் எதுவித ஆரப்பாட்ட துள்ளல் ஒலி மட்டுமல்ல மெல்லிசை அடங்கலாக எதுவித சத்தமுமின்றி அவரது பெயர் காட்டப்படும் போது கடைப்பிடித்த அதே மௌணத்தால் அவர் வெற்றி கொண்டார் என்றே கணிக்க வேண்டியுள்ளது.
ஒரு சிறந்த படைப்பென்றால் அது பழமரம் போல் கல் எறிகளை வாங்கும் என்பதற்கு அமைய அவரது படைப்புக்கள் ஒரு சாராரின் எதிர்ப்பை பெற்றதே ஒழிய அவரது கதைகளும் முடிவுகளும் தனி மனித உடல் உள்ளத் தேவைகளை நிராகரித்தாலும் மறுத்தாலும் சமூக விதிகளை மீறவிடாது சமூக மற்றும் பண்பாட்டு விழுமியங்களை நிலை நிறுத்த வேண்டும் என்ற அந்தணத்துவம் ஏற்புடையது என்றே கருத வேண்டியுள்ளது. கொடுக்க வல்ல விதி விலக்குகள் பிள்ளைகளையும் எதிர்காலச் சந்ததியையும் சமூகத்தையும் பாதிப்பதால் புனிதமாக கருதப்பட்டு பேண வேண்டிய திருமண மற்றும் தாலி உறவுகளை சீரளிக்காத அவரது சுமூகம் நோக்கிய முடிவு தனி ஒரு பாத்திரத்தை பாதிப்பதே விதி விலக்கென முடிவாவது அற்புதமானது.

நண்பரக்ளாக இருந்த போதும் காதல் என வரும்போது சிக்கல்படும் பல படஙகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மூன்று முடிச்சில் படகால் வீழந்து ஆற்றுநீரில் மூழ்கும் ஹமலை காக்காத ரஜனிகாந்த என்ற பாத்திரம் இரட்டைக் கொலைக்கு காரணமாகிவிடுகிறது என்பதே எனது புரிதலாகும். அந்தக் காட்சி கொலைக்காட்சியா இல்லையா என்பதை விட்டு விட்டு வெறும் ஸ்ரீதேவி- ஹமல் காதலை கொலை செய்வதாக கதையை அவர் நகர்த்துவது அற்புதம். இப்படி மற்றவர் காதலை நிஜவாழ்க்கையில் கொலை செய்யும் இக்கதை கூட ஒரு முக்கோணக் காதற்கதை தான். ஆனால் இது போன்ற ஒரு முக்கோணக் கதை எங்கும் காண முடியாத ஒன்று என்பதிலேயே பாலச்சந்தர் வாழ்கிறார். இதை விட இவரது காட்சிகள் யாவும் தமிழ்ச் சினிமாத்தனமற்று , ஆங்கிலப் படங்கள் அல்லது ஜெகஸ்பியரின் கதைகள் போல் யதார்த்தமாக இயல்பாக இருப்பது கவனி்ப்பிற்குரியது. அத்தோடு எதையும் இவர் கதைகளை சொல்லும் காட்சி உத்திகள் அபூர்வமானவை.

அதிசயித்து பிரமிக்க வைப்பவை அதே சமயம் யதார்த்தமும் உண்மைத் தன்மையும் உள்ளவை. ஆக திரைப்படத்தை இலக்கியஙகள் மற்றும் தத்துவங்கள் வேதாந்தங்கள் சித்தாந்தங்கள் போல் நுாலக புத்தக விறாக்கைகளில் துார உயரத்தே துாசி படர வைக்காது யதார்த்தமான வாழ்க்கை காட்சிகளாக்கிய உயரந்த படைப்பாளி திரு கே பாலச்சந்தர் திரை உலகில் அமரர் சிவாஜி போல் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை. ஆனால் பல படங்களை இயக்கிய இந்த வயதான இயக்குனர் சிகரம் தொடர்ந்து இயங்குமா என்பதே இனறைய நமது கேள்வியாகும். அவரது நலனிற்காக செய்தி இணையத்தளத்தோடு இணைந்து நாமும் பிராரத்திப்போமாக!

குகதாசன் கனடா 

Tuesday, 16 December 2014

கத்தியின் 12 நாள் சாதனையை 3 நாட்களில் முறியடித்த லிங்கா!

விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. ஆனால் தற்போது அந்த முறியடிக்கும் வகையில் ரஜினி நடித்த ‘லிங்கா’ மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது.


 
இதன்மூலம் உண்மையான சூப்பர்ஸ்டார் ரஜினிதான் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘லிங்கா’ முதல் நாளிலேயே ரூ.37 கோடி வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அதன் பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வசூலை சேர்த்து நேற்றே ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.

மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.55 கோடியும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து ரூ.26 கோடியும், வெளிநாடுகளில் ரு.21 கோடியும் வசூல் செய்துள்ளது.

Saturday, 13 December 2014

தலையங்கம்: "திரையில் அணைகட்டிய இரண்டாம்பென்னிகுக்' மிஸ்டர் ரஜினிகாந்த்...!

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள்... திருவிழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. இதே நாளில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வெளியாகி இருக்கிறது.. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார்கள் ரஜினி ரசிகர்கள்..

வழக்கம் போல விடிய விடிய முழித்திருந்து அத்தனைவித அபிஷேகங்கள் மூலமாக "தங்கள் தெய்வத்துக்கு" "வழிபாடு" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.. அனேகமாக "கண்ணா! இத... இதத்தான் எதிர்பார்த்தேன்" என்பதுதான் ரஜினியின் எதிர்க்குரலாகவும் இருக்கலாம்..

தலையங்கம்:
ரஜினிகாந்தின் திரை உலகப் பயணம் நீண்டது... இத்தனை ஆண்டுகாலம் உயர உயரப் பறந்து கொண்டே இருக்கிறார்.. இதனாலேயே அவரது சம்பளமும் பட வசூலும் "நூறுகள்" கோடிகளை தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.. அத்தனைவிதமான நடிப்புகளையும் வெளிப்படுத்துகிற அசாத்திய நடிகராக இருப்பதால் தொடர்ந்தும் "சூப்பர் ஸ்டாராக" ஜொலிக்கிறார்.

இப்படி தமிழ் மக்கள் கொண்டாடுகிற ஒரு தகத்தகாய "தலைவர்", "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்று ஒற்றை வரி வாக்குறுதியை மறக்காமல் "ஒவ்வொரு" திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.. அவருக்கும் வயது 64 ஆகிவிட்டது.. இன்னமும் அவர் கொண்டாடும் தமிழகத்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம் (தனிப்பட்ட உதவிகளைத் தவிர்த்து)

எம்.ஜி.ஆர். - ஆர்.எம்.வீரப்பன் மோதல் தொடங்கிய 1980களில் இருந்து ரஜினியின் "அரசியல் பிரவேச" எதிர்பார்ப்பு அத்தியாயம் தொடங்கியது.. பின்னர் 1990களில் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு பலமாக மையம் கொண்டது..1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் கூட அவரது "வாய்ஸ்" உதவியது.

இதனால் ரஜினியின் "அரசியல் பிரவேசம்" என்பதை விட "வாய்ஸ்" கொடுத்தாலே போதும் என்ற நிலை உருவாகி அரசியல் பெருந்தலைவர்கள் வாசல்படியில் காத்துக் கிடக்கத் தொடங்கினார்கள்.. அப்படி அவர் "வாய்ஸ்" கொடுத்தும் போணியாகாமல் போன காட்சிகளும் தமிழகத் தேர்தல் களத்தில் அரங்கேறின..

ஆனாலும் அசராத ரஜினிகாந்த் திடீரென நதிநீர் இணைப்புக்கு ரூ1 கோடி கொடுப்பதாக அறிவித்தார்.. அந்தத் திட்டத்தை முன்னெடுக்க துரும்பையும் கிள்ளிபோட்டதாக தெரியவில்லை..

2002ஆம் ஆண்டு தமிழகத்துக்கு காவிரி நீரைத் தராத கர்நாடகத்துக்கு எதற்கு தமிழகத்து நெய்வேலி மின்சாரம் என்று கொந்தளித்த திரையுலகம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ளாத ரஜினி மறுநாள் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்து "தமிழ்நாட்டு" பாசத்தைக் காட்டினார்...

இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமை சார்ந்த பிரச்சனைகளில் எப்போதுமே ஒதுங்கியே, மவுனமாக இருந்துவிடுவதுதான் ரஜினியின் இயல்பு. ஒருவேளை தங்களது உரிமைக்காக போராடும் தமிழ்நாட்டு மக்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி செய்ய நினைத்த "நல்லது" இதுதானா என்பதும் புரியவில்லை..

இந்த மண்ணின் மக்கள் வெறித்தனமான நேசித்து கொட்டும் காசில் உயரப் பறக்கும் ரஜினிகாந்த், வெறித்தனமாக இந்த மண்ணின் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் கலந்து கொண்டு உரிமைகளை மீட்டுத் தந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாதோ என்னவோ?

ஆனால் ரஜினியின் சகோதரரோ தமிழ்நாட்டு மண்ணில் நின்று கொண்டு காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டலாம்; அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என்றெல்லாம் பேசிவிட்டு செல்கிறார். பின்னர் திடீரென மன்னிப்பும் கோருகிறார்.. தமிழ்நாட்டு ரசிகர்களும் செய்வதறியாமல் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கிறார்கள்..

தற்போது லிங்கா படம் வெளியாகி இருக்கிறது.. தமிழ்நாட்டின் "ஹாட் டாபிக்" முல்லைப் பெரியாறு... அதன் சாயலில் ஒரு படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்தாகிவிட்டது.. ஓட்டியாக வேண்டும் என்பதற்காக மீண்டும் இசைவெளியீட்டு விழாவில் "அரசியல் எனக்குத் தெரியாதுன்னு இல்ல.. தயக்கமாக இருக்கு" என்று சொல்கிறார்..

இதோ ரசிகர்களும் ரஜினி எதிர்பார்த்தபடியே "தலைவா! வா! தலைமை ஏற்கவா!! "இரண்டாம் பென்னிகுக்கே" என்று மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி தியேட்டர்களில் தவம் கிடக்கிறார்கள்.. (இரண்டாம் பென்னிக்குக் என்று ஜெயலலிதாவையும் அதிமுகவினர் சமீபத்தில் வர்ணித்து சந்தோஷித்தனர் என்பது நினைவிருக்கலாம்)

இங்கிலாந்தில் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று பெரும் போராட்டத்தை நிஜவாழ்வில் எதிர்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு அணைகட்டியவர் "பெருமகனார்" பென்னிகுக்...

ஆனால் தமிழ்நாட்டு மக்களின் காசில் "திரைப்படத்தில் அணைகட்டி" தனக்கு ஊதியம் பெறுகிறவர் ரஜினிகாந்த் என்ற உண்மையை உணரக்கூட முடியாத "மயக்கத்தில்" இருப்பவர்கள் தானே ரசிகர்கள்.பாவம்!

நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அவர்களும் உணர்வதில்லை.. ஒருநாளும் ரஜினியும் திட்டவட்டமாக உணர்த்தப்போவதும் இல்லை..

அடுத்த திரைப்படத்துக்கு முன்பாகவும் ரஜினியின்- 'அரசியல் பரபரப்பு' பேச்சுக்கு எதிர்பார்த்து காத்திருப்போம்.. "ரசிகர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வேன்" என்ற "உத்தரவாத"த்துக்கு பொறுத்திருப்போம்.. அந்தப் படத்தையும் உலக திரைப்பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலை வாரித் தருவோம்- வரலாறு படைப்போம்!

நல்லது மிஸ்டர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள்.. நீங்க நடத்துங்க 'எஜமான்!'

Friday, 12 December 2014

லிங்கா - திரை விமர்சனம்

தண்ணீர் பிரச்சனை, இரண்டு ரஜினிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம், அனுஷ்கா, சோனாக்ஷி என்று ஒன்றுக்கு இரண்டு தேவதைகள், ரஹ்மானின் இசை, ரத்னவேலின் ஒளிப்பதிவு... விசிலடிச்சே வாய் வலிக்கணும்டா என்ற வேண்டுதலுடன்தான் ரசிகர் கூட்டம் தியேட்டருக்குள் பாய்ந்தது. அந்த ஆர்வத்துக்கு படம் அணை போட்டதா இல்லை கரை உடைத்ததா?
 
 
சோலையூரிலுள்ள அணைதான் படத்தின் மையம். கம்பீரமாக நிற்கும் அணையை, இடிகிற நிலையில் இருக்கு என்று பொய் சான்று தரச் சொல்கிறார் அவ்வூர் அரசியல்வாதி. அதிகாரி மறுக்க அவர் கொலை செய்யப்படுகிறார். 
 
அணையை முன்னிட்டு நடக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கும் மூடிக்கிடக்கும் கோயில்தான் காரணம், அதனை திறந்தால் அனைத்தும் சரியாகும் என்று கோயிலை திறக்கும் முயற்சியில் இறங்குகிறது ஊர். கோயிலை திறக்க வேண்டுமென்றால் அதனை கட்டிய லிங்கேஷ்வரனின் குடும்ப வாரிசு முன்னிலையில்தான் திறக்க வேண்டும். அதுதான் உடன்பாடு. 
 
யார் இந்த லிங்கேஷ்வரன்...?
 
பிளாஷ்பேக்கில் வருகிறார் வெளிநாட்டில் படித்து உள்ளூரில் கலெக்டராக பொறுப்பேற்கும் தாத்தா ரஜினி. அப்படியே பென்னி குயிக்கின் கதை. ரஜினிக்கேற்ப கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்திருக்கிறார்கள். சோலையூரில் அணையில்லாததால் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் மாறி மாறி பாதிக்கப்படுகிறார்கள் மக்கள். அங்கு அணைகட்ட முடிவு செய்கிறார் ரஜினி.

பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு அனுமதி மறுக்க, கலெக்டர் வேலையை தூக்கியெறிந்து சொந்தப் பணத்தில் மக்களின் துணையுடன் அணை கட்டுகிறார் ரஜினி. அரசாங்கத்தை எதிர்த்தால் என்னென்ன இடையூறு வருமோ அத்தனையும் வருகிறது ரஜினிக்கு. திறப்புவிழாவிலும் தொடர்கிறது பிரச்சனை. வீரத்தால் வீழ்த்த முடியாதவரை வஞ்சகத்தால் வீழ்த்தி ஊரைவிட்டே துரத்தப்படுகிறார். ஜனங்களுக்கு உண்மை தெரியவர, அவரை தெய்வமாக மதிக்கிறார்கள்.
 
 
  <i>Lingaa</i> Movie Review
 
அந்த லிங்கேஷ்வரனின் பேரன்தான் நிகழ்காலத்து ரஜினி. இவர் பெயரும் லிங்கேஷ்வரன்தான். சந்தானம், கருணாகரனுடன் ஜாலி திருடனாக இருக்கும் அவரை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வருகிறார்கள். பூனையின் கண் கருவாட்டின் மீதுதானே. வந்த இடத்திலும் கோயிலுக்குள் இருக்கும் மரகத லிங்கத்தை ஆட்டையப் போட முயல்கிறது ரஜினி அண்ட் கோ. தாத்தா லிங்கேஷ்வரனின் கதையை கேட்டு மனம் மாறும் ரஜினி எப்படி அரசியல்வாதியியை முறியடித்து அணையை மீட்கிறார் என்பது மீதிகதை.
படத்தின் சென்டர் சைடு அண்டர் என எல்லா அட்ராக்ஷனும் ரஜினி மட்டுமே. அவரும் அறிமுகப் பாடலில் அசத்தோ அசத்தென்று ஒரு ஆட்டம் போடுகிறார். அப்புறம்..? ரஜினியை குறை சொல்ல ஒன்றுமில்லை. என்னதான் ஆடத்தெரிந்தாலும் மேடை ஸ்ட்ராங்காக இருக்கணுமே. ரவிக்குமாரின் திரைக்கதையில் எண்ணித்தீராத ஓட்டைகள். தாத்தா லிங்கேஷ்வரனின் நீளமான பிளாஷ்பேக்கும் அணை பற்றியதுதான். பேரனின் நீண்ட கதையும் அதே அணைதான். ஒரே கதையை இரண்டு தடவைப் பார்ப்பது போல் கொஞ்சம் இழுவை.
 
ரஜினியின் முந்தையப் படங்கள் நினைவில் பிளாஷ் அடிப்பது இன்னொரு குறை. முத்துவில் சொத்தை இழக்கிறார் ரஜினி. சிவாஜியிலும் இழக்கிறார். படையப்பாவில் மணிவண்ணனிடம் சொத்தை இழக்கிறார். அருணாச்சலத்திலும் அப்படியே. அதையேதான் இதிலும். ஜாலி திருடனாக இருக்கும் ரஜினி தாத்தாவின் தியாகம் அறிந்து திருந்துவதும் கத்தி கதிரேசன் திருந்தும் சிச்சுவேஷனும் ஒன்று போலவே இருக்கிறது. 
 
லிங்கா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு கதைக்கு ஆப்டாக இருப்பதைவிட அழகாக இருக்க வேண்டும். ராண்டி அதனை அனாயாசமாக ஹேண்டில் செய்திருக்கிறார். படத்தை காப்பாற்றும் முக்கிய தூண் அவர்தான். இன்னொருவர் கலை இயக்குனர். ரஜினி படம்தானே நாம கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது ரஹ்மான். பின்னணி இசையில் நிறைய போதாமைகள்.
 
சண்டைக் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆறு மாதத்தில் அவசர அவசரமாக எடுத்ததால் கொஞ்சம் கார்ட்டூன் எபெக்ட். அழகுக்கும், டூயட்டுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள் அனுஷ்காவும், சோனாக்ஷியும்.
 
படத்தின் நீளம் அதிகம். ஒரே கதை இரண்டுமுறை ரிப்பீட் அடிப்பது போலிருப்பதால் ஆர்வத்தோடு உள்ளே நுழைகிற ரசிகன் அயர்ச்சியோடுதான் வெளியேறுகிறான். ரஜினிக்காக ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

Monday, 8 December 2014

மீண்டும் களத்தில் இறங்கிய அஞ்சலி!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி, சூரி நடிக்கும் படம் ‘மாப்பிள்ளை சிங்கம்’. முதல்கட்டப் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பில் அஞ்சலி  நடிக்க உள்ளார்.

 

சில நாட்களாக சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருந்த அஞ்சலி மீண்டும் ஜெயம் ரவியின் 'அப்பாடக்கரு’ படத்தில் ஒப்பந்தம் ஆனார்.
எனினும் முன்பு போல் அதிகம் படங்களை ஒத்துக்கொள்ளாமல் இருந்துவந்த அஞ்சலி மீண்டும் வரிசையாக படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.

தமிழில் ‘மாப்பிள்ளை சிங்கம்’, 'அப்பாடக்கரு’ என ஒப்பந்தமான அஞ்சலி, தெலுங்கில் இவர் நடித்து ஹிட்டான ‘கீதாஞ்சலி’ படத்தின் இயக்குநர் ராஜ்கிரண் அடுத்து தான் இயக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திலும் அஞ்சலியையே ஒப்பந்தம் செய்துள்ளார்.
கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் அஞ்சலி நடிக்கும் ’தீரா ராணா விக்ரமா’ என்ற படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சீல் நடந்துவருகிறது.

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

பாலிவுட்டுக்குபோய் ஜமாய்க்கிறார் என்று பிரபுதேவாவை பார்த்து கோலிவுட்டில் சிலரின் வயிறு கப கபத்தது. வான்டட், ரவுடி ரத்தோர், ஆர்.ராஜ்குமார் போன்ற படங்கள் அவருக்கு வசூல் ரீதியாக கைதூக்கிவிட்டது.அவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘ஆக்ஷன் ஜாக்சன்‘ படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. கதாபாத்திரத்துக்காக உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாறினார் அஜய். படத்தின் டைட்டிலுக்கு ஹாலிவுட் நிறுவனம் ஒன்றும் சர்ச்சை கிளப்பியது. எல்லாவற்றையும் கடந்து படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
மவுத் டாக் மந்தமாக இருப்பதுடன் விமர்சனங்களும் எதிராக வந்துக்கொண்டிருக்கின்றன. படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவில்லை என்று இணைய தளங்களில் தகவல் பரபரக்கிறது. எதிர்மறையாக படம் பற்றி கமென்ட்ஸ் வந்துக்கொண்டிருப்பதால் பிரபுதேவாவின் அடுத்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்துவந்த பிரபுதேவாவுக்கு இதன் மூலம் பாலிவுட் இயக்குனர்கள் சிலர் பிரேக் போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அடுத்து அக்ஷய்குமார் நடிக்கும் படத்தை அவர் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட குறைவாகத்தான் தர முடியும் என தயாரிப்பு நிறுவனம் வீம்பு செய்கிறதாம். இதனால் என்ன செய்வதென யோசனையில் மூழ்கிவிட்டாராம் பிரபுதேவா.

மகேஷ்பாபுவின் விஞ்ஞானி கனவு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் மகேஷ்பாபு சமீபத்தில் தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'தனது குடும்பத்தினர் பலர் அரசியலில் செல்வாக்காக இருந்தாலும் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்றும் தனது கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு - நம்ரதா தம்பதிகளுக்கு கெளதம், சித்தாரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகேஷ்பாபு, 'முதலில் அவர்கள் படிப்பை நன்றாக முடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கின்றதோ அந்த துறையில் ஈடுபட நான் அவர்களுக்கு ஊக்கமளிப்பேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மகள் சித்தாரா ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று மனம் திறந்து கூறியுள்ளார். சினிமாவில் பிரபலமாக உள்ளவர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவிலோ அல்லது அரசியலிலோ இறக்கிவிடும் தற்போதைய காலகட்டத்தில் மகேஷ்பாபுவின் கனவு அவரது திரைப்படங்களை போலவே வித்தியாசமாக உள்ளது.

நயன்தாராவை விட அனுஷ்கா பெஸ்ட் :யூனிட்டார் கமென்ட்

ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ படங்களில் நயனின் ரீ என்ட்ரி கணக்கு கனமாகவே தொடங்கியது. அடுத்து உதயநிதியுடன் கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவருடனே ‘நண்பேன்டா’வில் நடிக்கிறார்.சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு‘, சூர்யாவுடன் ‘மாஸ்’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ என வரிசைகட்டி வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக¢கிறார். டாப்பு டக்கராக போய்க்கொண்டிருக்கும் நயனின் சினிமா ராஜ்ஜியத்தை கண்டு கடுப்பான சில ஹீரோயின்கள் அஜீரண கோளாறில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டபுள் ஹீரோயின் கதையில் நடித்தால் அதில் தனது வேடம்தான் கனமாக இருக்க வேண்டும் என நயன் கண்டிஷன் போடுகிறாராம்.

உடன் நடிக்கும் இன்னொரு ஹீரோயினுக்கு எத்தனை காட்சி, எத்தனை பாடல், எந்தவிதமான காஸ்டியூம் என்றெல்லாம் கேட்கிறாராம். மற்றொரு ஹீரோயினுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருந்தாலும் தான் படத்தில் நடிக்க முடியாது என்கிறாராம். இதனாலேயே ‘மாஸ்’ படத்திலிருந்து எமி ஜாக்சன் தூக்கப்பட்டாராம். நயனுக்கு போட்டியாளராக இப்போது இருப்பவர் அனுஷ்காதான்.

ரஜினியுடன் ‘லிங்கா’, அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படங்களில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில்தான் அவர் நடிக்கிறார். ஆனால் தனக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என எந்த வீம்பும் செய்வதில்லையாம். ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவுக்கும் ‘லிங்கா’வில் சோனாக்ஷிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம்.

இருந்தாலும் மற்ற ஹீரோயின்களின் விஷயத்தில் தலையிடாமலும் டைரக்டர் சொல்படி கேட்பதிலும் நயனைவிட அனுஷ்காவே பெஸ்ட் என சினிமா யூனிட்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதோ கமலின் நினைவுப் பகிர்வு...

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன்.

அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை.

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

ரஜினியுடன் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது: நடிகை சோனாக்ஷி சின்ஹா பேட்டி

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.
ரஜினிகாந்துடன் நடித்தை பெருமையாக கருதுவதாக சோனாக்ஷி தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

நான் சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கல்லூரி முடித்த காலத்தில் நான் கவர்ச்சியாக இருக்க மாட்டேன். குண்டு பெண்ணாக இருந்தேன். 2008–ல் ‘லேக்மா’ (முக கிரீம்) விளம்பர படத்தில் குண்டு பெண்ணாகவே நடித்தேன்.

அதன் பிறகு நடிகர் சல்மான்கான் தனது ‘தபான்’ படத்தில் நடிக்க என்னை அழைத்தார். எத்தனையே முன்னணி ஹீரோக்கள் இருக்கும்போது குண்டு பெண்ணான என்னை ஏன் அழைத்தார் என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும் நான் ஒத்துக் கொண்டேன்.

முதல் ஷூட்டிங் நடந்தபோது என்ன இவ்வளவு குண்டு பெண்ணை கதாநாயகியாக போட்டு உள்ளார்களே என்று பலரும் கேலி பேசினர். முதலில் இதுபற்றி எதுவும் சொல்லாத சல்மான்கான் பின்னர் உனது எடையை 30 கிலோ குறைக்க வேண்டும் என்றார்.

படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டதால் எனது எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக வீட்டிலேயே ஜிம்முக்கு ஏற்பாடு செய்தேன். இரவு பகலாக உடற்பயிற்சி செய்தேன். உணவை குறைத்து அதில் கட்டுப்பாடு விதித்தேன். 40 நாளில் 30 கிலோ குறைத்தேன். அதைப் பார்த்து சல்மான்கானே என்னை பாராட்டினார்.

அந்த சினிமா ரிலீஸ் ஆன பின்பு என்னை கேலி பேசியவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள். எனது நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அதன் பிறகுதான் ஒருவருக்கு அழகைவிட தன்னம்பிக்கைதான் முக்கியம் என்று கருதினேன். எனது படம் தோற்றால்கூட தன்னம்பிக்கையால் நான் வெற்றி பெற்று விடுவேன்.

எனது தன்னம்பிக்கைதான் தென் இந்தியாவில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை படத்தில் நடித்தாலும் ரஜினியுடன் நடித்தது எனக்கு புதிய அனுபவம் மட்டும் அல்ல புதிதாக நடிப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் எனது அப்பா (சத்ருகன்சின்கா) மிகுந்த சந்தோஷம் அடைந்தார். ரஜினிகாந்தும் எனது அப்பாவும் சிறந்த நண்பர்கள். இருவரும் இந்தியில் அஸ்லி–நக்லி (அசலும், நகலும்) படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் ரிலீசான ஒரு வருடத்தில்தான் நான் பிறந்தேன்.

ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்றதும் எனது அப்பா அவரை புகழ்ந்து தள்ளினார். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான் என்று அடுக்கிக்கொண்டே போனார். உங்கள் நண்பர் ஆச்சே? எப்படி விட்டு கொடுப்பீர்கள்? என்று நான்கூட கேலியாக பேசினேன்.

ஆனால் அவருடன் நடித்தபோது தான் ரஜினி பற்றி அப்பா கூறியது எவ்வளவு உண்மையானது என்பது புரிந்து கொண்டேன். அவரிடம் ரசிகர்கள் அன்பு மட்டும் காட்டாமல் பைத்தியமாக இருப்பது ஏன்? என்பதை தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பின் போது ‘பேக்கப்’ என்றதும் அனைத்து ஹீரோக்களும் உடனடியாக சென்று விடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அவர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை பாராட்டியதும், நலன் விசாரித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை பற்றி அப்பா சொன்னது கொஞ்சம்தான் என தெரிந்தது.

ரஜினியுடன் நடிக்கும் போது முதலில் எனக்கு வெட்கமாக இருந்தது. ரஜினி தான் எனக்கு உற்சாகமூட்டினார். எனது நண்பர் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ வெட்கப்படுகிறாயே எனக் கூறி எனக்கு தைரியமூட்டினார்.

நடிக்கும்போது பெரியவர்கள், சிறியவர்கள் என்று பார்க்ககூடாது என்று அறிவுரை வழங்கினார். என்னை பாலிவுட் நடிகை என்கிறார்கள். ஆனால் லிங்கா படத்தில் நான் தென்இந்திய நடிகையாகவே மாறி இருப்பதை அனைவரும் உணருவார்கள்.

தென் இந்திய இயக்குனர்களான பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி படங்களில் நான் ஏற்கனவே நடித்து உள்ளேன். வடஇந்திய படங்கள் முடிய நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் தென் இந்திய படங்கள் விரைவாக முடித்து விடுவார்கள்.


ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு மொழி தெரியாததால் அதனை புரிந்து நடிப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படத்தை உனக்காகத்தான் மெதுவாக எடுக்கிறோம் என்றனர்.

எனது நடிப்பை ரஜினிகாந்த் அணு அணுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார். எனக்கு தெரியாததை சொல்லி கொடுத்தார். எனது உண்மையான ரசிகர்கள் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாதான். எனது நடிப்பின் நிறை, குறைகளை உடனே சுட்டிக்காட்டி விமர்சிப்பார்கள். அவர்களை நான் பீபி (அக்காள்) என்றே அழைப்பேன்.

லிங்கா படத்தில் 1940–ம் ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால் ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள். 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என்பதால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது.

அந்த வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு. கண்களாலே பேசி நடிக்க வேண்டும். எனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டினார். இதனை ஒரு சவாலாக செய்து முடித்தேன். படம் ரிலீஸ் ஆனதும் என்னை தென் இந்திய நடிகை என்றே பலர் கூறுவார்கள்.

இவ்வாறு சோனாக்ஷி கூறினார்.

Sunday, 7 December 2014

வெட்டிருவேன்

 

வாள் சண்டை கற்றுக்கொண்டார் அனுஷ்கா என்றதுதான் தாமதம் உடனே ஸ்ரேயா, தமன்னா என வரிசையாக வாளை கையில் பிடித்துக்கொண்டு பயிற்சியில் குதித்துவிட்டார்கள். விட்ட குறை தொட்ட குறையாக இருந்த ஹன்சிகாவும் இப்போது கையில் வாள் ஏந்திக்கொண்டு நிற்கிறார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் இளவரசியாக நடிக்கிறார். இதற்காக அவர் வாள் சண்டை பயிற்சிக்கு தயாராகிவிட்டார். 'யாரும் கிட்ட வந்துடாதீங்க கையில வாள் வெச்சிருக்கேன் வெட்டிருவேன்' என சொல்லாத குறையாக, ‘விஜய் 58 படத்துக்கு வாள் சண்டை பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறேன். சீக்கிரம் போருக்கு தயார் ஆகிவிடுவேன்' என டுவிட் செய்திருக்கிறார் ஹன்சு.

Friday, 5 December 2014

விக்ரம்,விஜய், ரஜினியை ஓரங்கட்டிய அஜித்!அஜித் மீண்டும் தன் எண்ட்ரியை கொடுத்து அசத்திவிட்டார். என்னை அறிந்தால் டீசர் வெளிவந்த நொடியில் தல ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் என ட்ரண்ட் செய்து அசத்தி விட்டனர்.
இந்த டீசர் 13 லட்சத்தை தாண்டி, 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் ஹிட்ஸை தொட்டது. லைக்ஸில் 40 ஆயிரத்தை தாண்டி ஐ, லிங்கா, கத்தி அனைத்தையும் பின்னுக்கு தள்ளியது.

Wednesday, 3 December 2014

விஜய் ரசிகர்களின் தலைவனாக இருப்பதற்கான ஐந்து காரணங்கள்

1. நடனத் திறமை!
ஆரம்ப காலத்தில் விஜய்யின் நடன அசைவுகள் சுமாராகவே இருக்கும். பலமுறை நடன அசைவுகளுக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார் விஜய். அது விஜய்க்கும் தெரியும். 
எதில் பலவீனமாக இருக்கிறோமோ அதில் சிறந்தவனாக வேண்டும் என்ற உந்துதலில் வீட்டில் கடுமையாக பயிற்சி எடுத்த பின்பே செட்டில் நடனக் காட்சிக்கு கேமரா முன் வந்து நிற்பார். 
 
இப்போது தமிழ் சினிமாவில் நடனத்தில் நம்பர் ஒன் ஹீரோ விஜய்தான். எவ்வளவுதான் நன்றாக ஆடினாலும் விஜய்யைப் போல ஆட முடியலை, அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று சூர்யாவே ஒருமுறை கூறியிருக்கிறார்.
 
2. கடின உழைப்பும் விடா முயற்சியும்!
நாளைய தீர்ப்பு படத்திற்கு முன்பு குடும்பத்துடன் அமர்ந்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி தந்தார் விஜய். அதில் ரஜினியைப் போல ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்று தெரிவித்திருப்பார். 
 
ஆனால் அந்த லட்சியம் அவ்வளவு எளிதில் அடையக் கூடியதாக இல்லை. தொடர்ச்சியாக அவரது தந்தை படங்கள் எடுத்த போதிலும் ஆக்சன் ஹீரோ இமேஜை பெற அவர் கடினமாக உழைக்க வேண்டி வந்தது. முக்கியமாக விடா முயற்சி. 
 
இன்றைய தேதியில் அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக தொய்வில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்று இவரைச் சொல்லலாம் (இன்னொருவர் கமல்). 
 
இன்று அடுத்த ரஜினி என விநியோகஸ்தர்களால் பாராட்டப்படும் நிலையிலும்  ஒரு படம் வெளிவரும் முன்பே இன்னொரு படத்தில் கமிட்டாகி நடிக்கும் விஜய்யின் கடின உழைப்பு அவரின் ரசிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.
 
3. கச்சிதமான உடம்பு!
உடம்பை எப்போதும் கத்தி மாதிரி வச்சுக்கணும்... கட்டுமஸ்தான உடம்பு குறித்த கேள்வி வந்த போது விஜய் சொன்ன வார்த்தைகள் இவை. கத்தியை எப்படி வேண்டுமானாலும் வீசலாம். அதுமாதிரி உடம்பு எந்த திசையிலும் வளையக்கூடியதாக எதற்கும் ஒத்துழைப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும். 
 
சிலருக்கு கரளை கரளையாக மசில் இருக்கும், ஆனால் அரையடி உயர மதிலை தாண்ட மூச்சு வாங்கும். துப்பாக்கி படத்தில் வரும் அறிமுகப் பாடலில் விஜய்யின் கச்சித உடம்பை பார்க்கலாம். அவரின் அதிரடி ஆக்சனுக்கும், நடனத்துக்கும் அவரின் உடலமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.
 
4. அறிமுக இயக்குனர்களின் தலைவாசல்!
முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் விஜய் மிகக்குறைவாகவே நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த கத்தி, துப்பாக்கி, நண்பனை கழித்தால் முன்னணி இயக்குனர்கள் எவரின் படத்திலும் விஜய் நடிக்கவில்லை என்றே சொல்லலாம் (மின்சார கண்ணா கே.எஸ்.ரவிக்குமார் விதிவிலக்கு). 
 
அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கிறார் விஜய். நண்பன், துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு கௌதம், லிங்குசாமி போன்றோர் விஜய்யின் கால்ஷீட்டுக்கு காத்திருந்தும் நேசன் என்ற பெயர் அறியாத இயக்குனருக்குதான் தனது புதிய படத்தை இயக்கும் பொறுப்பை தந்தார். 
 
நேற்று வந்த நடிகர்களே முன்னணி இயக்குனரின் படத்தில்தான் நடிப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்கையில் விஜய்யின் இந்த பண்பு உதவி இயக்குனர்களை கை தூக்கிவிடும் அரியபணியை செய்கிறது.
 
5. குழந்தைகளின் நடிகர்!
ரஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்சனா இல்லை காமெடியா... எது என்று தெரியாது. வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் மூன்று பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் - ஒரு சுவாரஸிமான பிளாஷ்பேக்

1992 -இல் விஜய் நடிக்க வந்த போது ஒரு புதுமுகத்துக்குரிய எதிர்பார்ப்பு மட்டுமே அவர் பேரில் இருந்தது. அதாவது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. படத்தில் நடிப்பதற்கு முன் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா ஆகியோருடன் அவர் அளித்த பேட்டியொன்று பிரபல வார இதழில் வெளியானது. அதில் தன்னுடைய இலக்கு கமர்ஷியல் சினிமா என்பதையும், முன்னோடி ரஜினி என்பதனையும் அவர் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
 
1992 -இல் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு வெளியானது. வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியை கொண்டதாக இருந்தது கதை. சுமாரான வரவேற்பையே படம் பெற்றது. ஆனாலும் ஒரு புதுமுகமாக விஜய்க்கு அப்படம் நியாயம் செய்தது. விஜய்யின் நடிப்பைவிட அவரது தோற்றத்தையே பத்திகைகள் அதிகம் கிண்டல் செய்தன. 
 
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை முதல் படத்தின் ரிசல்ட் அதிகமாக யோசிக்க வைத்தது. அறிமுகமான தனது மகனை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபலம் தேவை என்பதை உணர்ந்தவர், தனது சட்டம் தொடர்பான படங்களால் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற விஜயகாந்தை பயன்படுத்தி கொண்டார். அடுத்தப் படத்தில் விஜயகாந்த் விஜய்யின் அண்ணனாக நடித்தார். படம் செந்தூரப்பாண்டி. எஸ்.ஏ.சி.யின் கணக்கு பொய்க்கவில்லை. படம் 100 நாட்கள் ஓடியது.
 
1994 -இல் வெளிவந்தது ரசிகன். தனி ஹீரோவாக விஜய்க்கு ஓரளவு பெயர் வாங்கித் தந்த படம் இதுதான். ஆனால் அதன் முக்கிய பங்கு சங்கவிக்கே சேரும். அவரது கவர்ச்சிதான் படத்தை கரை சேர்த்தது. 
 
இந்தப் படம் என்றில்லை, விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய்யைவிட அவருடன் ஜோடி சேரும் நடிகைகளின் கவர்ச்சியையே எஸ்.ஏ.சி. அதிகம் நம்பினார். அனால்தான் அவரால் தொடர்ச்சியாக படங்கள் எடுக்க முடிந்ததுடன் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்கவும் முடிந்தது. 
 
1997 விஜய்க்கு முதல் திருப்புமுனை வருடம். இந்த வருடத்தில்தான் விஜய்யின் ஆல்டைம் ஹிட்டான லவ் டுடே வெளியானது. அதைவிட முக்கியமாக விஜய்க்கே ஒரு மரியாதை ஏற்படுத்தி தந்த காதலுக்கு மரியாதை வெளியானது. விஜய்யின் கரியரில் முதல் திருப்புமுனை படம், காதலுக்கு மரியாதை. இது மலையாளத்தில் வெளியான அனியத்தி புறாவு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு இன்னும் ரீமேக் படங்கள் மீதிருக்கும் நம்பிக்கைக்கு பிள்ளையார்சுழி போட்ட படமும் இதுதான்.
 
காதலுக்கு மரியாதைக்குப் பிறகு விஜய்யின் கரியர் கீழ்நோக்கி இறங்கவே இல்லை. ஒவ்வொரு வருடமும் ஒரு சூப்பர்ஹிட் படமாவது வெளியானது. 1998 -இல் நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் என இரு ஹிட் படங்கள். அதற்கு அடுத்த வருடம் குஷி, ப்ரியமானவளே. இதில் ப்ரியமானவளே இந்தி ரீமேக். 2001 -இல் ப்ரெண்ட்ஸ். பத்ரி. இரண்டுமே மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களின் ரீமேக். 
 
விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய வருடம் என்று 2002 -ஐ சொல்லலாம். இந்த வருடத்தில்தான் தமிழன், பகவதி படங்கள் வெளியானது. பகவதி கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அடுத்த வருடம் வெளியான திருமலை விஜய்யை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்மொழிந்தது. 
 
2004 -இல் வெளியான இன்னொரு தெலுங்கு ரீமேக்கான கில்லி விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது. அதன் பிறகு அந்த முகவரியிலிருந்து மாறுவதற்கு விஜய்யே விரும்பவில்லை. இடையில் பல தோல்விகளுக்குப் பிறகும் இன்றும் ஆக்ஷன் ஹீரோவாகவே விஜய் தொடர்கிறார். அதையே அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள். 
 
2007 -இல் வெளியான போக்கிரிக்குப் பிறகு நிஜமான இன்னொரு ஹிட் என்றால் 2012 -இல் வெளியான துப்பாக்கி. நடுவில் வெளியான அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம் படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இவையனைத்தும் விஜய்யின் மாஸ் இமேஜை உயர்த்திப்பிடித்த -  பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களுக்கு எதிர்திசையில் பயணிக்கும் - படங்கள். 
 
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற மென்மையான கதையம்சம் கொண்ட படங்களால் ஹீரோவான விஜய் மீண்டும் அதுபோன்ற படங்களில் இனி நடிப்பதற்கான சாத்தியம் இல்லை. இது நல்லதா இல்லை கெட்டதா என்பதை அவரும் அவரது ரசிகர்களும் தான் தீர்மானிக்க வேண்டும்.

Tuesday, 2 December 2014

வடிவேலு அய்யா,,,,,விரசா வாருமைய்யா

தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.

இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார்.

தன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும்.

ஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.

வடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.

“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.

கடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ?” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி மறைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.

இப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.

தீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.

“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”

தன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.

500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.

தன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.

“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.

வெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.

வடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.

வடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு.

அவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை.

ஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.

“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. .? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம்.

அவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது
என்றே தோன்றுகிறது.

-நன்றி : காலச்சுவடு.

நாய் சேகர், கைப்புள்ள, வட்டச்செயலாளர் வண்டுமுருகன், பிச்சுமணி போன்ற கதாபாத்திரங்களை, சினிமா உள்ளவரை யாரும் மறக்க இயலாது.

"தெனாலிராமன்" எதிர்பார்த்த அளவு ஒடாவிட்டாலும், அதே குழுவினரோடு வடிவேலு மீண்டும் இணையும் படமான "எலி" வெற்றி பெற வாழ்த்த்துவோம்.

 அவர் முழு நீள காமெடியனாக, புதிய இயக்குனர் குமரய்யா இயக்கத்தில், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

சந்தானத்தின் அலப்பறையையும், பரோட்டா சூரியின் மொக்கையையும் ரொம்ப நாளைக்கு நம்மால் தாங்கமுடியாது.

"வடிவேலு அய்யா,,,,,,விரசா வாருமைய்யா".

தமிழ்ப்பட ரீமேக்கை தவிர்க்கும் மகேஷ்பாபு

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் 
மிக முக்கியமானவை போக்கிரி, கில்லி. 
இவை இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. 
இந்த இரண்டு படங்களின் ஒரிஜினலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படங்கள். 
அதுமட்டுமல்ல, இரண்டுமே தெலுங்கில் சூப்பர்ஹிட்டான படங்கள். 
 மகேஷ்பாபுவின் படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டுவதுபோல், 
விஜய் நடிக்கும் தமிழ்ப்படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க மகேஷ்பாபு 
விரும்புவதில்லை. 
இதை மகேஷ்பாபுவே நேற்று நடைபெற்ற ஒரு விழாவில்
வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். 
குறிப்பாக, சமீபத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க
 மகேஷ்பாபுவுக்கு விருப்பமில்லையாம். 
சமீபத்தில் ஆந்திராவை கடுமையாக தாக்கிய ஹுட் ஹுட் புயலில்
 பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் தெலுங்குத் திரையுலகம்
 கலைநிகழ்ச்சியை நடத்தியது.
அதில் மகேஷ்பாபுவை சமந்தா பேட்டி எடுப்பதுபோல் ஒரு நிகழ்ச்சி.  
 
 
 
 அப்போது நீங்கள் சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த படம் எது? 
என்ற கேள்வியை மகேஷ்பாபுவிடம் கேட்டார் சமந்தா.
அதற்கு பதில் அளித்த மகேஷ்பாபு, விஜய் நடித்த கத்தி படத்தை நான் 
மிகவும் விரும்பிப் பார்த்தேன். விஜய் மிக அற்புதமாக நடித்திருந்தார். 
படமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. என்னை இப்படத்தின் ரீமேக்கில் 
நடிக்கச் சொல்லி சில அழைப்புகள் வந்தன. ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். 
ஏனென்றால் ஒரு மொழியில் ஹிட்டான படத்தை 
இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது அதே அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும்
 என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
கத்தி என்றால் விஜய்தான் ஞாபத்திற்கு வருவார். நான் எதை செய்தாலும்,
 அது கத்தியில் விஜய் செய்ததையே பிரதிபலிக்கும். 
இதுபோன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள எனக்கு 
விருப்பமில்லை! என்று பதில் அளித்தார் மகேஷ்பாபு.

காவியத் தலைவன் விமர்சனம்

சுதந்திரத்துக்கு முந்தைய தமிழ் நாடக உலகத்தையும், நடிகர்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக வெளிவந்திருக்கிறது, வசந்தபாலனின் காவியத் தலைவன். வரலாற்றில் வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, அவரது காதல் மனைவி சுந்தராம்பாள் ஆகியோரின் சாயலைக் கொண்டிருக்கின்றன படத்தில் வரும் கதாபாத்திரங்கள். 
 
kaaviyathalaivan, காவியத்தலைவன் விமர்சனம்
 
 
ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடித்தி வருகிறார் சிவதாஸ் சுவாமிகள் (நாசர்). அவரது சீடர்களில் ஒருவன் கோமதி நாயகம் பிள்ளை (பிருத்விராஜ்). இன்னொருவன் காளியப்ப பாகவதர் (சித்தார்த்). காளியப்பனுக்குக் கிடைக்கும் பாராட்டும், புகழும் கோமதி நாயகத்தை எப்படி வன்மம் கொள்ள வைக்கிறது என்பதுதான் படத்தின் அடிநாதம். கே.பி.சுந்தராம்பாளை நினைவுப்படுத்தும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வேதிகா.
 
ஒருவனின் புகழும் வளர்ச்சியும் இன்னொருவனை எவ்வளவு தூரம் வன்மம் கொள்ள வைக்கின்றன என்ற தளத்தில் இந்தக் கதை பயணித்திருந்தால் அதுவொரு சிறந்த அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் படம், காதல் உள்பட பல கிளைக் கதைகளில் பரவிச் செல்கிறது. வசந்தபாலனின் படங்களில் காணப்படும், பார்வையாளர்களைத் தீண்டாத உணர்ச்சி வெளிப்பாடுகள், இந்தப் படத்திலும் நீக்கமற நிறைந்துள்ளன. உதாரணமாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பைப் பார்த்துப் பார்வையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் படம் பார்க்கும் நமக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை. வசந்தபாலனின் திரைக்கதை தொடர்ந்து இந்த இடத்தில்தான் சறுக்குகிறது.
 
காளியப்ப பாகவதரின் அரண்மனைக் காதல், நம்ப முடியாத வகையைச் சேர்ந்தது. இது படத்துக்கு எந்தளவு நியாயம் செய்கிறது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். படத்தின் மற்றுமொரு குறை, சித்தார்த்தை முன்னிறுத்துவது. காளிப்பனைவிட கோமதி நாயகத்தின் நடிப்பே நம்மைக் கவர்கிறது. சூரபத்மனாகவும் கோமதி நாயகமே சிறப்பாக நடிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஆனால் சிவதாஸ் சுவாமிகள், காளியப்பனைத் தேர்வு செய்கிறார். அதுதான் கேமதி நாயகத்தின் மனத்தில் வன்மத்தை வளரச் செய்கிறது. சித்தார்த், பிருத்விராஜை விடத் தமிழில் தெரிந்த நடிகர் என்பதால் அவரை வசந்தபாலன் முன்னிறுத்தியிருக்கலாம். ஆனால் படத்தில் அது தவறான முடிவாகவே தெரிகிறது. வடிவாம்பாளாக கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார் வேதிகா.
 
ஒளிப்பதிவு ஓரளவு நம்மை அந்தக் காலக்கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் ரஹ்மானின் இசை பல நேரம் நம்மை நிகழ்காலத்துக்கு இழுத்து வருகிறது. அந்தக் கால இசையுடன் அவரால் பொருந்த முடியவில்லை என்றே தோன்றுகிறது. அந்தக் கால இசைதான் இல்லையே தவிர, படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பாகவே உள்ளன. இரண்டாவது பகுதியை நாம் நீந்திக் கடக்க உதவுவதும் அவரது இசையே.
 
படத்தின் நீளத்தைக் குறைத்து, காட்சிகளில் அழுத்தத்தை ஏற்றியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். வசந்தபாலனின் திரைக்கதைதான் அவரை மறுபடியும் மறுபடியும் குப்புறத் தள்ளுகிறது. அடுத்த படத்திலாவது அதனைச் சரிசெய்ய அவர் முன்வர வேண்டும்.
 
வெளிநாட்டுப் படங்களுக்கு சாயம் ஏற்றும் முயற்சியில் இருக்கும் தமிழ் சினிமாவில், நமது வேரைத் தேடிய வசந்தபாலனின் பயணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது, பல குறைகள் இருப்பினும்.