Sunday 9 July 2023

அபிநயசரஸ்வதி சரோஜா தேவி

 பேசும் முறையில் ஏற்ற இறக்கம் காட்டி தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொள்வது அனைத்து கலைஞர்களின்வாடிக்கை. அதுபோல கொஞ்சி கொஞ்சி பேசுவதை பாணியாக கொண்டவர் சரோஜாதேவி.




கர்நாடகாவை சேர்ந்த இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த சில வருடம் வரை நடித்துக்கொண்டும் உள்ளார்.
அதுமட்டுமல்ல நடிக்க ஆரம்பித்த வருடம் தொடங்கி இருபத்தி ஒன்பது வருடம் (1954 – 1983) நாயகியாகவே நடித்துள்ளார். (முதல் இருபடம் நீங்கலாக) மொத்தம் 161 படங்கள் அந்த வரிசையில் வரும்.
இவருடைய திரைப்பயணத்தை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று பிரித்து கொள்ளலாம். காரணம் அதுவரை காதல்படங்களில் அதிகம் நடித்த அவர் பின் குடும்ப பாங்கான அதே சமயம் நாயகியாய் நடிக்க துவங்கினார்.
ஜெயலலிதா வரும் வரை இவர்தான் எம்ஜிஆருக்கு இணை இருவரும் மொத்தம் 26 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதே போல சிவாஜியுடன் பதினைந்து படங்கள் செய்துள்ளார்.
தென்னக்கத்து சூப்பர் ஸ்டார்கள் எம்ஜி ஆர் , சிவாஜி, என் டி ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் ஆகியோருடனும், இந்தியில் திலீப் குமார் , ராஜ் குமார், சுனில் தத் ,ஷம்மி கபூர் ஆகியோருடனும் நடித்துள்ளார்
இரண்டாம் நிலையில் ஜெமினி கணேசன், கல்யாண் குமார் ,முத்துராமன், ரவிச்சந்திரன் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்
இவரது சிறந்த படங்கள் என,நாடோடி மன்னன், கல்யாண பரிசு, பாகப்பிரிவினை, திருடாதே , பாலும் பழமும், வாழ்க்கை வாழ்வதற்கே ஆலயமணி , பெரிய இடத்து பெண், புதிய பறவை, பணக்கார குடும்பம் , எங்க வீட்டு பிள்ளை ,அன்பேவா ஆகியவற்றை குறிப்பிடலாம்
தமிழ்நாட்டில் இவரை கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடினார்கள். அதேபோல சதுர்பாஷா தாரே ( நான்கு மொழிகளின் நட்சத்திரம் ) என்று அழைக்கப்பட்டார்
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதை எதையும் வீணாக்காமல் தொழில் துறையில் முதலீடு செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
இவரது குடும்பம் இவருக்கு மிக்க உறுதுணையாக இருந்திருக்கிறது இவரது தந்தை நாட்டியம் பயிற்றுவித்து திரை உலகில் இடம் பிடிக்கும் வரை இவரை ஆதரித்து இருக்கிறார். தனது தாய் சொன்ன ஆடை கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இருக்கிறார்.
பெற்றோர் சொன்னவரைதான்( ஸ்ரீ ஹரி, பாரத் எலெக்ட்ரானிக் பொறியாளார் ) மணம் முடித்து இறுதிவரை அவருடனே தொடர்ந்தது.
மேலும் திருமணத்திற்கு பின்னும் அவரை ஊக்கபடுத்தி இருக்கிறார். மனமொத்த ஜோடிகளாகவே இருந்திருகின்றனர். இதுபோல பிற நடிகைகளுக்கு அமைவது அபூர்வம்.
இவரது புகழ் மற்றும் உண்டு . இவர்படத்தில் அணியும் நகைகள், புடவைகள், ஜாக்கெட் எல்லாம் இவர் நடித்த படத்தின் பெயரோடு சந்தையில் மிக பிரபலமாக விற்றதுண்டு.
இன்றளவில் தொழில் துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்
இவர் தனது கணவர் மற்றும் தாயின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி அதில் ஏரளமான உதவிகள் செய்து வருகிறார்.
பத்மஸ்ரீ ,பதம பூசன், உட்பட பல விருதுகள் பெற்ற இவர் இருமுறை தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவராக பணியாற்றி இருக்கிறார் .
திருப்தி தேவஸ்தான ஆலோசனை குழுவில் இடம் பெற்று இருக்கிறார்.
இதுபோன்று ஒரே சமயத்தில் திரையிலும் பொது வாழ்விலும், சர்ச்சைகளில் சிக்காமல் நல்ல பெயர் எடுப்பவர்கள் அபூர்வம் அது இவருக்கு வாய்த்திருக்கிறது
தொடரட்டும்.
பல்லாண்டு வாழட்டும்

ஜெயச்சந்திரன்




மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும்
🌹 ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும்
🌹‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்ற பாடலையும் கேட்டுப்பாருங்கள். அப்படியே கமலின் குரலுக்கு இணையானதொரு குரலாகவும் ஸ்டைலாகவும் பாடியிருப்பார்
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார்.
புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில்
🌹‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.
🌹 ‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார்.
அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின்
🌹 ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்,
🌹 ‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த
‘ஒருதலை ராகம்’ படத்திலேயே,
🌹‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம்.
அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
கமலும் சுஜாதாவும் நடித்த ‘கடல்மீன்கள்’ படத்தில், இளையராஜா ஜெயச்சந்திரனுக்காக ஒருபாடலைக் கொடுத்தார். கிட்டத்தட்ட, ஜெயச்சந்திரனுக்காகவே ஸ்பெஷலாக டியூன் போட்டிருப்பாரோ என்றே தோன்றும்
🌹 ‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’ என்ற பாடல், நம்மையே தாலாட்டிவிடும். அதில் ‘சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது’ என்ற வரிகளை ஜெயச்சந்திரனின் குரலில் கேட்கும்போதே, சொர்க்கம் வந்து நம் வீட்டுவாசலின் கதவு தட்டும். அப்படியொரு ஏகாந்த சுகமான குரல் அது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில்
🌹 ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று
‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
🌹‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல்.
🌹 ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல்.
🌹 ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார்.
’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
🌹’மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்’ என்றால் நாமே மயங்கித்தான் போனோம். இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில்,
🌹‘சொல்லாமலே யார் பார்த்தது’ என்ற பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

சொர்ணலதா

 1991 ல் வெளிவந்த ‘சின்னத்தம்பி’ திரைப்படத்தில்




🌹 “நீ எங்கே ….என் அன்பே…” என்ற பாடலில் சொர்ணலதா அவர்கள் குரலில் இருக்கும் தேடல் காற்றில் கலந்து நம் மனதை முகம்தெரியாத ஒரு காதலை நிச்சயம் தேட வைத்துவிடும். ....வள்ளி
2000 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே ‘ திரைப்படத்தில் ”

🌹எவனோ ஒருவன் வாசிக்கிறான் …..” பாடல் நம் மனம் வாழ்க்கையில் தொலைத்த யாரையோ தேடவைத்து விடுகிறது. இசைக்கருவிகளில் புல்லாங்குழலுக்கு என்று ஒரு இனிமை உண்டு. அதையும் மிஞ்சிவிடக் கூடிய இனிமை சொர்ணலதா அவர்களின் குரலிற்கு உண்டு என்பது இசைப் பிரியர்களுக்கு தெரிந்த உண்மை.
விருப்பமான சொர்ணலதாவின் பாடல்களை

🌹நட்புகள் தொடரலாம்...
பொதுவாக இசை என்பது செவி வழி நமக்குள் செல்லக்கூடிய ஒன்று. ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் மட்டும் ஒரு கூர்மையான அம்பு போல நேரடியாக நம் இதயத்திற்குள் செல்லக்கூடிய வல்லமை பெற்றது.
ஜானகி அம்மா, S.P.B போன்றவர்களின் குரலை நம்மால் எந்தப் பாடலிலும் எளிதாய் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் சொர்ணலதா அவர்கள் குரல் ஒவ்வொரு பாடல்களிலும் தனித்துவமாய் அமைந்து இருக்கும்.

🌹 ஏக்கப்பாடல், காதல் பாடல், ரொமான்ஸ் பாடல், கிராமியப் பாடல், துள்ளல் பாடல்கள் என்று எந்தமாதிரியான பாடல்களிலும் சொர்ணலதா அவர்களின் குரல் தனித்து ஒலிக்கும். மேலும் இசையமைப்பாளர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் நிச்சயம் ஹிட் கொடுத்து விடக் கூடிய மந்திரக் குரல் அது......
80 மற்றும் 90 களில் பெண்களுக்கு தாங்கள் நினைப்பதை எல்லாம் சொல்ல இப்போது போல.

🌹facebook , twitter , whatsapp என்று எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்வின் அத்தனை ரகசியமும் அவர்கள் மனதைத் தாண்டி அதிக பட்சம் அவர்கள் டைரிகளுக்குள்தான் ரகசியமாய் மறைந்து இருக்கும்.
பல பெண்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களின் வரிகளை தங்கள் டைரியில் எழுதி வைத்து இருப்பர்.
இன்றும் அந்த வரிகளை வாசிக்கும் போது உங்கள் மனதில் சொர்ணலதாவின் குரலும் சேர்ந்தே ஒலிக்கும். சொர்ணலதா அவர்களின் குரல் பலருடைய உணர்வுகளின் உச்சம் என்றே சொல்லலாம்.

🌹அந்த அரபிக் கடலோரம்……
🌹திருமண மலர்கள் தருவாயா….. போன்ற பாடல்கள் சொர்ணலதா குரலில் இன்றும் கேட்கையில் கல்லூரியின் இனிப்பான நினைவுகள் மனதிற்குள் தேனைப் போல ஊறுகிறது.....

இன்றும் ‘வள்ளி’ படத்தில் வரும்.

🌹“என்னுள்ளே… என்னுள்ளே…” பாடலை பலர் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் போதும், சூப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சிகளில் வளரும் இளம் பாடகர்கள் அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதைப் பார்க்கும் போதும்...

சத்ரியன் திரைப்படத்தில்
🌹மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
பலருடைய பேருந்துப் பயணங்களின் தனிமையில் ஒரு தாயாய், காதலியாய், சினேகிதியாய் சொர்ணலதா தன் குரல்களால் நம்மோடு பயணித்து இருக்கிறார்.
இன்றும் சில பாடல்களில் சொர்ணலதா குரலைக் கேட்கும் போது படத்தின் காட்சி அமைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதை விட அவரது குரலிற்குள் நாம் பொதித்து வைத்த அந்த நினைவுகள்தான் நமக்குள் மெல்ல அசைவாடும்.

இதுவே சொர்ணலதாவை
“அவருக்கு முன்பும், அவருக்குப் பின்னும் யாரும் அவர் போல இல்லை”
என்ற தனித்துவ அடையாளத்துடன் அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா தேவதையாக அவரை வாழவைத்துக் கொண்டு இருக்கிறது.
சொர்ணலதா அவர்கள் குரலில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை எடுத்து அதில் மென்சோகம் என்று வகைப்படுத்தி அப்பாடல்களை வரிசையாகக் கேட்டால் உங்கள் மனம் அந்தக் குரலுக்கு அடிமையாகி அந்த சோகத்தை சுமக்க ஆயத்தமாகிவிடும்.

தொடர்ந்து அவரது துள்ளல் பாடல்கள் தொகுப்பைக் கேட்டால் அவர் குரலுடன் நம் மனதும் ஆட்டம் போடத் தொடங்கிவிடும்.
அவரது காதல் குரல் நமக்கொரு காதல் இல்லையே என்று ஏங்க வைத்து விடும். இப்படி நான் மட்டும் அல்ல, இந்தியா முழுக்க ஏன், உலகளவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு.
இந்திய மொழிகள் பலவற்றிலும் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்
🌹சொர்ணலதா உயிரை உலகில் இருந்து எடுத்துச் சென்ற எமனால் ஒருநாளும் சொர்ணலதாவின் குரலை நம்மைவிட்டு, இந்த உலகை விட்டு எடுத்துச் செல்லவே முடியாது எனத் தோன்றும்.....வள்ளி

🌹சொர்ணலதா அவர்கள் என்றும் என்றென்றும் நம்மோடு சதாகாலங்களிலும் தம்முடைய குரலால் உயிரோடே இருக்கிறார், இருப்பார்.