Monday, 9 April 2012

சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!இயக்குநர் ஹரி, நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை இயக்குநர் ஹரி படத்தில் விஜய் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பின்னர் விஜய்யை, ஹரி சந்தித்ததாகவும் அப்போது ஒரு லைன் ஸ்க்ரிப்ட் ஒன்றை விஜய்யிடம் சொல்லி உடனே ஓகே வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ‘துப்பாக்கி’யில் விஜய்யும், ‘சிங்கம் 2′ல் ஹரியும் பிஸியாக இருப்பதால், முறையே தங்களது புராஜெக்டுகளை முடித்துக் கொண்டு புதிய படத்திற்காக இருவரும் இணைவார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையான் - புயல் வேக ரஹ்மான்ரஹ்மானிடம் டியூன் வாங்குவது புயலுக்கு நடுவில் பூ பறிக்கிறதுக்கு சமம். திண்டாடிவிடுவார்கள். இந்திப் படவுலகின் ஜம்பவான்கள் டியூன் கிடைக்க ரஹ்மான் ஸ்டுடியோவில் தவம் இருப்பதுண்டு. ஆனால் இருவருக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறார் இசைப்புயல். ஒருவர் மணிரத்னம். இன்னொருவர் ர‌ஜினி.

கோச்சடையானின் முதல் ஷெட்யூல் லண்டனில் முடிந்திருக்கிறது. இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் விரைவில் தொடங்க உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என ர‌ஜினியே உத்தரவாதமளித்திருக்கிறார். ரஹ்மான் இசையமைக்கும் ஒரு படம் இத்தனை வேகத்தில் தயாராவதஅதிசயம்.

ர‌ஜினியின் படம் என்பதால் முதல் ஷெட்யூல் முடிவதற்குள் மொத்தம் உள்ள ஐந்து பாடல்களில் நான்குப் பாடல்களை கம்போஸ் செய்து சிலவற்றின் ஒலிப்பதிவையும் முடித்திருக்கிறார் ரஹ்மான்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ர‌ஜினியுடன் சரத்குமார், ஜாக்கிஷெராப், நாசர், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, 8 April 2012

அடுத்து, பாண்டவர்களின் நாயகி திரவுபதியாகிறார் நயனதாரா!ராமனின் மனைவி சீதையாக நடித்து கலக்கிய நயனதாரா அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயனதாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே இந்த எதிர்ப்புக்கு காரணம்.

இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்டிஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயனதாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத்தான் செம வரவேற்பு.

இதனால் புளகாங்கிதமடைந்து போன பாலகிருஷ்ணாவை மறுபடியும் நயனதாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயனதாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா.

தற்போது நயனதாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயனதாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயனதாரா தலையை ஆட்டியவுடன், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு என்ன கேரக்டர் என்று தெரியவில்லை. ஒரு வேளை திரவுபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ணராக நடிப்பாரா அல்லது தர்மன் வேடத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

'பெப்சி' விவகாரத்தில் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார் பாரதிராஜா-அமீர் புகார்பெப்சி தொழிலாளர்கள் விவகாரத்தில் எனது போக்கு பிடிக்காத காரணத்தால், தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து என்னை நீக்கி என்னை பயமுறுத்தப் பார்க்கிறார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா தலையிடுவார், நமக்கு சாதகமாக செயல்படுவார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் நினைத்தது. இருப்பினும் ஜெயலலிதா இதைக் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நலத்துறை வசம் இப்பிரச்சினையை அது ஒப்படைத்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை தரப்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனால் தொழிலாளர் நலத்துறையினர் தங்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்துவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போது பெப்சிக்குப் போட்டியாக தயாரிப்பாளர்கள் ஒரு சங்கத்தை ஆரம்பித்து படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கும், அமீருக்கும் இடையிலான மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்த இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாது, அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதையும் மீறி தனது அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தின் நாயகனாக அமீரை புக் செய்தார் பாரதிராஜா.அப்போதே பலருக்கும் சந்தேகம், இது ஒத்துவருமா, நடக்குமா என்று.

இப்போது பெப்சி விவகாரத்தை வைத்து இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். பெப்சிக்கு படு தீவிர ஆதரவு கொடுத்து வரும் அமீரை வைத்து படம் எடுப்பதா என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பில் பாரதிராஜாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கேள்வி. பாரதிராஜாவுக்குமே கூட அமீர் பெப்சிக்கு தீவிர ஆதரவு தெரிவிப்பதில் எரிச்சல்தான் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அன்னக்கொடி படத்திலிருந்து அமீ்ரை தூக்கி விட்டார் பாரதிராஜா.

இதுகுறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் நான் தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறேன். இது பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்று கருதி என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.

நான் தொழிலாளர் பக்கம் நின்றது தவறு என்றால் தொடர்ந்து அந்த தவறைச் செய்வேன். தனது படத்திலிருந்து தூக்கி என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா. ஆனால் நான் அவருக்கு பயப்படமாட்டேன். தொடர்ந்து தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்.

பெப்சி விவகாரத்தில் தற்போது தமிழக அரசு தலையிட்டுள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அப்போது சுமூக முடிவு காணப்படும் என்றார்.

பிரியாமணியின் கவர்ச்சி மலையாளத்தில் பிசு பிசுப்பு: அண்மைய படம் படுதோல்வி!பிரியாமணியின் ஆரம்ப கால தமிழ் படங்கள் பெரிதாய் போகவில்லை. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்தவர். ”பருத்தி வீரன்” படத்தில் முத்தழகு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையானார்.
அதன் பின்னர் அவரது போதாத காலம், தமிழில் அடுத்து வந்த படங்கள் தோல்வியை தழுவியதால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் தலைகாட்ட தொடங்கியவர், அங்கு படு கவர்ச்சியாக, முகம் சுழிக்க வைக்கும் பாத்திரங்களில் துணிந்து நடித்து வந்தார்.
அவரது அத்து மீறிய கவர்ச்சி மலையாள ரசிகர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாலோ என்னவோ அவரது அண்மைய மலையாள படமான ”பிரஞ்சியத்தன்” படுதோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரியாமணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மம்முட்டி நடிக்கும் ”தப்பன்னா” படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிரியாமணி, அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இச் செய்தியை பிரியாமணி மறுத்துள்ளார். யாரும் ”தப்பன்னா” படத்தில் நடிக்க தன்னை அணுகவில்லை என தெரிவித்துள்ளார்.

Saturday, 7 April 2012

சினிமா தாண்டி நானும் சல்மானும் அவ்வளவு நெருக்கம்... - சொல்கிறார் அசின்சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின்.

சல்மான் - அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன.

அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின்.

இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் கச்சிதமாக வரக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் தந்துள்ளார்.

அசின் கூறுகையில், "நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு.

அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது," என்றார்.

நெருக்கம், நல்ல புரிதல், ஜோடிப் பொருத்தம்... எல்லாமே நட்புதானா? என்னமோ போங்க..!

Friday, 6 April 2012

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்!ஹாரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேங்கை படம் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு 16 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை ஆகி இருக்கும் படம் 3தான். இத்தனைக்கும் சென்னையின் விநியோக உரிமையை தனது சம்பளமாக தனது மாமனாரிடம் வாங்கிக் கொண்டாராம்.

ஆனால் 37 கோடி ரூபாயை 3 வசூல் செய்யுமா என்றால் 15 கோடி ரூபாயை எம்.ஜி அடிப்படையில் வாங்கியிருக்கும் விநியோககஸ்தர்களுக்கு திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள்.

இத்தனைக்கும் 20 கோடியை மல்லுக்கட்டி இழுக்கவே இன்னும் பத்து நாட்களாவது தியேட்டரில் படம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இதற்கிடையில் 3 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து ஓய்ந்து விட்ட சூழ்நிலையில்,
படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை நீக்கி வீட்டுக் கொடுங்கள், உலக திரைப்பட விழாக்களில் சிறந்த ஆசிய இயக்குனருக்கான விருதுகள் கூட கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஐஸ்வர்யா தனுசுக்கு போன் போட்டு உற்சாகப் படுத்துகிறார்களாம் பெஸ்டிவல் புரோக்கர்கள்.

இந்த செய்திகளுக்கு நடுவே தற்போது சூடு பிடித்திருக்கும் முக்கியச் செய்தி, கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ் இருவரும் இணைய இருக்கிறார்கள் என்பதுதான்! இது ஆடுகளம் படத்தை பார்த்து விட்டு கௌதம் விடுத்த அழைப்பாம்.

இருவருமே ரகசியம் காத்த அந்த கூட்டணியின் ரகசியம் தற்போது கசிந்து விட்டது. இந்தப் படத்துக்கு அனிரூத் இசை என்பதை தற்போது முடிவு செய்திருகிறார்களாம் கௌதமும் தனுஷும்.

தனுஷ் ஹிந்தியில் ராஞ்சான, பிறகு பரத்பாலா இயக்கத்தில் ரஹ்மான் இசையில் நடிக்கும் படம் ஆகியவற்றை முடித்து விட்டு கௌதம் படத்துக்கு வருகிறாராம். கலக்குங்க மக்கா!

விபச்சாரி வேடத்தில் துணிந்து நடித்த அனுஷ்கா, டார்ட்டி பிக்‌ஷரில் நடிக்க மறுப்பது ஏன்?இந்தி படமான ”டார்ட்டி பிக்‌ஷர்” தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
தென் இந்திய புகழ்பெற்ற நடிகையான அனுஷ்காவை தயாரிப்பாளர் குழு அணுகியபோது, அப் படத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துள்ளார்.

தற்பொழுது அனுஷ்கா செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ”இரண்டாம் உலகம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா கார்த்தி க்கு ஜோடியாக அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலும், விக்ரமுக்கு ஜோடியாக தாண்டவம் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் தேசிய விருது பெற்ற திரைப்படம் டார்ட்டி பிக்‌ஷர், வானம் படத்தில் கவர்ச்சியாக விபச்சாரி வேடத்தில் நடித்து புகழ் பெற்ற அனுஷ்கா, இப் படத்தை நிராகரித்தமைக்கான காரணம் சரிவர தெரியவரவில்லை!

கொலவெறி பாடல் தடை செய்யப்படுமா? கொலவெறிக்கு வந்த கொலவெறி நிலைமை!உலக பிரசித்தி பெற்றுள்ள, 3 திரைப்பட பாடலான ”வொய் திஸ் கொலவெறி” பாடலுக்கு எதிராக அப் பாடலை தடை செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ் ”கொலவெறி” பாடல் இளைஞர்களின் மனதை தீயவழிப்படுத்துவதாக கூறியே மேற்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தபால் உதவியாளராக பணிபுரியும், எம். மாடஸ்வாமி என்பவராலேயே ”கொலைவெறி” பாடலுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப் பாடல் வரிகள் வன்முறையை தூண்டுவதாகவும், இது இளைஞர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதாரமாக அமெரிக்காவின் லோவா ஸ்டேட் பல்கலைகழகம், வன்முறை பாடல்கள் தொடர்பில் வெளியிட்ட ஆராட்சி முடிவையும் சமர்ப்பித்துள்ளார் மனுதாரர்.