Sunday 2 August 2015

தமிழ் சினிமாவின் ரியல் நண்பர்கள்- ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நாயகர்களுக்கு இடையே ஒரு வகை போட்டி இருக்கும், இவை இவருக்கு ஒரு கூட்டம், அவருக்கு ஒரு கூட்டம் என பெரிய குழுக்களாக இருக்கும்.
தியேட்டர் சண்டை, போஸ்டர் சண்டை, பேனர் சண்டை என தற்போது வலைத்தள சண்டை வரை வளர்ந்துள்ளது இந்த கலாச்சாரம். ஆனால், உண்மையாகவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள், ஒரு சிலரின் தவறான தூண்டுதலால் ரசிகர்களுக்கு இடையே சண்டை வருகின்றது.
எம்.ஜி.ஆர்-சிவாஜி


பாகவதர் மட்டும் தமிழ் சினிமாவை ஆண்டு வந்த நிலையில், எம்.ஜி.ஆர்-சிவாஜி என இரண்டு நட்சத்திரங்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தனர். முதன் முறையாக இரண்டு நடிகர்கள் மோதல் இங்கு தான் தொடங்கியது. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் நல்ல நட்புடன் தான் கடைசி வரை இருந்தனர். இதன் காரணமாகவே ரசிகர்கள் சண்டை தீவிரமடையவில்லை.
ரஜினி-கமல்


ரசிகர்களின் மோதல் அதிகமானது இந்த கால கட்டத்தில் தான், இருவரும் சேர்ந்து பல படங்கள் நடித்தாலும், இவர்கள் பிரிந்து நடிக்க தொடங்கியவுடன் ரசிகர்களும் பிரிய ஆரம்பித்து விட்டனர். ஆனால், பல மேடைகளில் ரஜினி, கமலையும், கமல் ரஜினியையும் புகழ்ந்து பேச ரசிகர்களுக்குள்ளான சண்டை குறைந்தது. மேலும், கமல் ஒரு விழாவில் ரஜினி-கமல் போல் சிறந்த நண்பர்கள் வேறு யாரும் இல்லை என கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
விஜய்-அஜித்


நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, உச்சக்கட்ட போர் என்றால் அது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். அஜித்த்து, விஜய்யும் தான் தற்போது தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத நடிகர்கள், ஏனெனில் அத்தனை பெரிய ரசிகர்கள் வட்டத்தை அவர்கள் வைத்துள்ளனர். மற்ற நடிகர்களை திட்டுபவர் என் ரசிகர்களாக இருக்க தகுதியில்லை என அஜித் கூறினார், மற்ற நடிகர்களையும் நீங்கள் மதிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
ஆனால், இவர்கள் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படியில்லை என்பது தான் வருத்தம். அவர்கள் நட்புடன் இருந்தாலும், ஒரு சிலரின் தவறான செயல்களால் பெரிய போர் வெடித்து விடுகிறது. இனியாவது இவர்கள் தங்கள் நடிகர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
சிம்பு-தனுஷ்


அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கான போட்டி நடிகர்கள் இவர்கள், ஆனால், பிரச்சனையை ஆரம்பத்திலேயே தங்கள் நட்பால் கிள்ளி எறிந்து விட்டனர். எனவே இவர்கள் நட்பை புரிந்த ரசிகர்கள் யாரும் சண்டையிட்டு கொள்வதில்லை. இருவரின் வாக்கியமும் எப்போதும் ஒன்று தான் Spread Love.

இதுபோல் அனைத்து நடிகர்களுமே நட்புடன் இருக்க, நாம் மட்டும் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்....நண்பர்கள் அனைவருக்கும் #HappyFriendshipDay