Friday, 25 December 2015

மறக்க முடியுமா - முதல்வன் உருவான கதை

அறுபது வயது முதியவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அறுபது வருட அனுபவம் உள்ளவரிடம் பேசுகிறோம் என பொருள். வாழ்ந்து கிடைக்கிற அனுபவங்களைவிட, இப்படியான அனுபவசாலிகளிடம் பேசி, அவர்களின் அனுவங்களை பெறுவது என்பது ஒரு கலை. ஒருவரது அறுபது வருட அனுபவத்தை அரைமணி நேர பேச்சில் அள்ளிக் கொள்ளலாம்.


 
 
திரையுலகில் இப்படியான அனுபவங்கள் பெருமளவில் கை கொடுக்கும். திரைப்படம் சார்ந்த சில பழைய நினைவுகள் இன்று புதிதாக வரும் இளைஞர்களுக்கு தெரியாதவை, ஆனால், அவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவை.
 
இயக்குனர்கள் இன்று கதைக்காக முட்டி மோதுகிறார்கள். கதைக்கா எங்கும் ஓட வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவைப்படுவதெல்லாம், அதனை அடையாளம் கண்டு கொள்கிற திறமை மட்டுமே. ஷங்கரின் முதல்வன் படம் இதற்குச் சிறந்த உதாரணம்.
 
ஷங்கர் படங்களில் இந்தியனும், முதல்வன் திரைப்படமும் தான் அதிக ரசிகர்களால் விரும்பப்படுபவை. இரண்டுமே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து உருவானவை. அதில் முதல்வன் படத்தின் கதை கிடைத்தது ஒரு சுவாரஸியமான சம்பவம்.
 
ஜீன்ஸ் படம் சுமாராக போன பிறகு ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய நிலை ஷங்கருக்கு. அவர் விரும்பும் சமூக சீர்கேட்டை சரி செய்யும் ஹீரோ கதை யாரிடமும் இல்லை. கதையைப் பிடிங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சுஜாதா சொல்லிவிட்டார். எப்படி புரண்டுப் பார்த்தும் கதை அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எதுவும் நகரவில்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வருகிறது. அமெரிக்காவின் ஒரு நகரத்தின் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது அந்த செய்தியில் உள்ளது. ஒருநாள் மேயராகிறவர், ஒரு பில்டிங்கையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னத்தான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு பிளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


 
 
உடனே சுஜாதாவுக்கு போன் பறக்கிறது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஒத்துக் கொண்டால், தேர்தலில் நிற்காமலேயே ஒருவரை ஒருநாள் முதல்வராக்கலாம் என்கிறார் சுஜாதா. சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது. சுஜாதா சொல்லி முடித்ததும் கதை தயார் என்கிறார் ஷங்கர்.
 
ஒருவனை ஏன் அனைத்து எம்எல்ஏ க்களும் சேர்ந்து முதல்வராக்க வேண்டும்? அப்படி முதல்வராகும் அவன் ஒருநாளில் என்னென்ன செய்ய முடியும்? 
 
அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் முதல்வன் என்ற மாபெரும் வெற்றிப்படம்.
 
பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இதேபோல் ஒரு செய்தித்தாளிலிருந்து எடுத்துக் கொண்டதே.
 
நீதி - செய்தித்தாளின் சின்னச் செய்திகளிலிருந்தும் ஒரு திரைப்படத்துக்கான கதை கிடைக்கும்.

புத்திர பாசத்தில் மீண்டும் புதைகுழியை நோக்கி ஏ.எம்.ரத்னம்...?

ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த ரத்னம் கடனாளியாகி கார், பங்களாவை தொலைத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு மாதச் சம்பளத்துக்கு போகிற நிலைமைக்கு ஆளானார்.

 

 
நிலைமை தெரியாமல் அகலக்கால் வைத்தது ஒரு காரணம் என்றால், அப்பாவின் பணத்தில் பிள்ளை ஜோ‌தி கிருஷ்ணா படம் எடுக்கிறேன் என்று கோடிகளை தண்ணீராய் இறைத்தது இன்னொரு காரணம். இதில் புத்திர பாசத்தில் ரத்னம் இழந்த கரன்சிகள்தான் கணிசம்.
 
ரத்னம் மீண்டும் கரையேறுகிறவரை காத்திருந்த ஜோ‌தி கிருஷ்ணா மீண்டும் படம் எடுக்கிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த கரன்சி விளையாட்டுக்கு பைனான்சியர்... வேறு யார் ரத்னம்தான்.
 
தெலுங்கில் கோபிசந்தை வைத்து ஜோ‌தி கிருஷ்ணா ஒரு படம் இயக்கப் போகிறார். சினிமாவின் ஆனா ஆவன்னா தெரியாமலே பல படங்கள் இயக்கி காசை கரியாக்கியவர் இப்போது மட்டும் கரன்சியை கொட்டி கோடிகளா அள்ளப் போகிறார்? கடைசியில் கிடைக்கப் போவது வெறும் கரிதான் என்று இப்போதே முணுமுணுக்கிறது கோடம்பாக்கம்.
 
புத்திர பாசத்தில் இன்னொருமுறை தவறிழைத்தால் கைகொடுக்க அஜித் இருக்கிறார் என்ற தைரியமா ரத்னத்துக்கு?

Saturday, 5 December 2015

நடிகைகளுடனான பந்தம் எதுவரை? மகேஷ் பாபு அதிரடி விளக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு பெண் ரசிகைகள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் கூட அதிகம். அவர், பெரிய ஹீரோ தான் என்றாலும் நாட்டில் நடக்கும், பிரச்னைகள், அல்லது சினிமா உலகில் நடக்கும் சர்ச்சைகள் என எதற்கும் எந்தக் கருத்தும் அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட மாட்டார். இந்நிலையில் கணவன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என கருத்து கூறியது பெண்கள் மத்தியில் இன்னும் மகேஷ் பாபுவுக்கான ரசிகர்களை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறவேண்டும்.

அவர் கூறுகையில் “ ஒரு கணவன் என்பவன் முதலில் அவன் மனைவிக்கு பொறுப்பாளனாக இருக்க வேண்டும்.  தன் மனைவிக்குப் பொறுப்பாகச் செயல்படாத மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் அவன் முட்டாள் தான்.  நான் சென்னையில் படிக்கும் போது நான் பெரிய ஸ்டாரின் மகன் என்று யாருக்கும் தெரியாது.  என் நண்பர்கள், ஆசிரியர்களுக்குக் கூட நான் இன்னார் மகன் எனத் தெரியாது. ஆனால் என் அப்பா எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு பொறுப்பாக நடந்துகொண்டார். என் அப்பாவிடம் படித்த பாடமே இந்த குடும்ப ஈடுபாடு.

பெரிய நடிகரானால் கண்டிப்பாக கிசுகிசுக்கள் வருவது சாதாரணம். ஆனால் நாமும் சில நேரங்களில் அதற்கு பொறுப்பாகிறோம். என்னைப் பொறுத்தவரை எனக்கும் என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்குமான பந்தம் ஷூட்டிங்குடன் முடிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நடிகைகள் போன் கால்களைக் கூட நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் என்னைக் குறித்து கிசுகிசுக்கள் வருவதை என்னாலும் சரி முக்கியமாக என் மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஒரு மனைவியாக இந்தக் கிசுகிசுக்களை ஏற்றுக்கொள்ளும் தேவையும் அவருக்கு இல்லை எனக் கூறியுள்ளார் மகேஷ் பாபு.

இதனால் பல நடிகர்கள் மகேஷ் பாபு குறித்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Monday, 30 November 2015

’கில்லி’ விஜய் சிலருக்கு ஏன் ‘கிலி’ கொடுக்கிறார் தெரியுமா?

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியாகி டிசம்பர் 4-ந் தேதியோடு 23 வருடங்களாகிறது. இப்போதைய டிரெண்டுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்... விஜய்! ஆக, இந்த வாரம் முழுக்க ‘விஜய்-23’ கொண்டாட்டம். 


CM8n_DSMUs_AAUot_S.jpg


விஜய் தனது இரண்டாவது படத்தில் நடித்த போது “இந்தப் பையனை எல்லாம் யார்யா நடிக்கக் கூட்டிட்டு வந்தது?” என ஒரு நடன இயக்குநர் பலர் முன்னிலையிலும் கோபத்தில் திட்டினாராம். இன்று விஜய்க்கும் நடனத்திற்கும் இருக்கும்கெமிஸ்ட்ரி பற்றி நாம் எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுதான் விஜய். அவரது கடின உழைப்பிற்கு இது ஒருசோறு பதம். கடந்த 23 வருடங்களில் ஒவ்வொரு படத்திலும் தன் உழைப்பின் அடர்த்தியை, அனுபவத்தை அடுத்தடுத்ததளத்துக்குக் கொண்டு செல்பவர் விஜய். அவருடைய 23 வருடப் பயணத்தில் சில மைல்கற்களைப் பார்ப்போமா…!?


அறிமுக நாயகன்

விஜயின் 58 படங்களை 5 வகையாகப் பிரிக்கலாம். முதலாவது தனக்கென ஒரு பாதை இல்லாது வெறும் நடிப்பு ஆசையை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்த ஆரம்பக்காலப் படங்கள்.அவற்றை இப்போது அவரே விரும்பமாட்டார்.அதை விட்டுவிடலாம்.
 

சாப்ட் அன்ட் சிம்பிள் ஹீரோ


அவரது 9வது படம் பூவே உனக்காக இரண்டாம் வகை.குடும்பச் செண்டிமெண்டுகள் நிறைந்த காதல் கதைகளில் நடித்தார். பூவே உனக்காக, லவ்டுடே, காதலுக்கு மரியாதை,துள்ளாத மனமும் துள்ளும் என அந்த வகையில் அவர் அடித்த அடி இன்றும் முறியடிக்கப்படாத சதங்கள்.

 ரோம்-காம் ஹீரோ


அதன் பின் விஜய்க்கு இறங்குமுகம். போட்டியின்றித் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த விஜய்க்கு என்றென்றும் காதல்,மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு எனத் தொடர் தோல்விகள். அவ்வளவுதாம்ப்பா விஜய் என்றார்கள்.இது நடந்த போதுதான் சேது, வாலி, அமர்க்களம் என விஜய்க்குப் போட்டியாளர்கள் உருவாகி கொண்டிருந்தார்கள். தனதுபாதையைச் சற்றே மாற்ற வேண்டுமென முடிவு செய்த விஜய் அடுத்து நடித்தது குஷி மூன்றாம் வகை. உடைகள், நடனம்,பாடி லேங்ஜுவேஜ் எனச் சகலமும் மாற்றிக் கொண்டு வந்தார். அபாரமான ஒப்பனிங். அலைபாயுதே, கண்டுகொண்டேன்கண்டுகொண்டேன் என ’ஏ’ செண்டர் படங்கள் வெளியான சமயத்தில்தான் குஷியும் வந்தது. சத்யமில் இதன் பரபரப்பானஓப்பனிங் கண்ட அந்தத் திரையரங்க உரிமையாளர் சொன்ன வார்த்தை “இவன் நிஜமாவே அடுத்த ரஜினிதாம்ப்பா”. குஷியில் மீண்டும் வெற்றிக்கொடி ஏற்றியவர் தொடர்ந்து ப்ரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி ரோமான்டிக் காமெடி மற்றும் காதல் படங்களில் பட்டையைக் கிளப்பினார்.

 திருமலை போட்ட அதிரடிப்பாதை 


tirumalai.jpg


மீண்டும் ஒரு குழப்ப நிலை. யூத், பகவதி போன்ற சில படங்கள் வணிக ரீதியாகத் தப்பித்தாலும் ஷாஜஹான், தமிழன்,வசீகரா, புதிய கீதை எனத் தோல்விகள். வசீகராவில் அவரது நகைச்சுவை கலந்த நடிப்புப் பின்னர்ப் பாராட்டப்பட்டாலும் படம் வெளிவந்த போது அது தோல்வியே. அஜித், விக்ரம் என்ற இரு போட்டிகள் அதற்குள் விஸ்வரூபமெடுத்து நிற்க,கூடவே நந்தா, மெளனம் பேசியது எனப் பவுண்டரி அடித்த சூர்யா காக்க காக்க எனச் சிக்சர் நொறுக்கி மஸ்து காட்டினார்.


2003 தீபாவளிதான் நிஜமான பரீட்சையாக இருந்தது. வில்லன் என்ற வெற்றியை தொடர்ந்து அஜித் போலீஸாக நடித்த ஆஞ்சநேயா,. தூள்,சாமி என்று கமர்ஷியல் காக்டெயில் அடித்த விக்ரம் மீண்டும் பாலாவோடு பிதாமகன். உடன் சூர்யா.இவர்கள் ஒரு பக்கம். தொடர்தோல்விகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட விஜய், புதுமுக இயக்குநரான ரமணாவை மட்டுமே நம்பி ’திருமலை’ எனக் களமிறங்கினார் விஜய்.  கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அடுத்தச் சூப்பர்ஸ்டார் போட்டிக்கு நாமினேட்ஆகியிருந்த நான்கு பேரும் மோதின நாள் அன்று.


ஆனால் விஜயின் மாஸ் என்றால், என்னவென்று தமிழ் சினிமா உணர்ந்த தருணம் அது. ஏன்… விஜய்யும் கூட! ’பிதாமகன்’ க்ளாஸிக் அந்தஸ்துடன் தேசிய விருது பெற்றாலும், பல படங்களுக்குப்பிறகு விஜய்யின் ‘திருமலை’ திரைஅரங்குகளில் நின்று விளையாடியது. தொடர் தோல்விகளால் துவண்ட ரசிகர்களுக்குத்தனது புது அவதாரத்தின் மூலம் க்ளுக்கோஸ் பாய்ச்சினார் விஜய். திருமலையில் வசனம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதில்புகழ் பெற்ற ஒரு வசனம்
 

:hooray:  “இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”  :hooray:8_Iqep_SF.jpgகதைக்கான நாயகன்


விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்திருந்தது. திருமலை,நான்காம் வகை. அதன்வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். திருமலை, கில்லி,திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என டாப்கியரில்போய்க் கொண்டிருந்தார் விஜய். ’இங்கே ஒரு பள்ளம் இருக்கணுமே’ என்பது போலச் சில சங்கடங்கள். குருவி, வில்லு என மெகா தோல்விகள். ’வேட்டைக்காரன்’ சற்றே ஆறுதளிக்க, ’சுறா’ வந்து சூறையாடியது. மீண்டும் ஒரு மந்தம். மீண்டும் பாதையை மாற்ற வேண்டிய நேரம்.


அதன் பிறகுதான் கதைக்கும், நடிப்புக்கும் சரிசம முக்கியத்துவமுள்ள, ஹீரோவிற்கான படங்களை தவிர்த்து கதைக்கான ஹீரோவாக தன்னை மாற்றிக்கொண்டார். ஸ்டார் இயக்குனர்களுடன் கைகோர்த்தார். காவலன், நண்பன், துப்பாக்கி, கத்தி என மீண்டும் வெற்றிஊர்வலத்தை நட த்தி வருகிறார். இந்தப் படங்கள் ஐந்தாம் வகை!இதுவரை விஜய் நடித்த எல்லா ஜானர்களிலும் அவரைப் போல ஹிட் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. அதே சமயம், ‘தான்என்ன செய்தாலும் தன்னை ரசிப்பார்கள்’ என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் அவருக்கு எப்போதும் கிடையாது. தான் ஒரு“சாக்லேட் பாய்” இல்லை என்பது விஜய்க்கு தெரியும்.


தனது நிறை குறைகளை நன்றாக அறிந்தவர் என்பதால்தான்காலத்திற்கேற்ற, தனக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். சில கணக்குகள் தவறினாலும், விஜயின் கிராஃப்அவர் முடிவு சரி என்பதையே காட்டுகிறது. பிறந்த குழந்தை முதல் தாத்தாக்கள் வரை ரசிகர்கள்கொண்ட விஜய்க்கு,இவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதில் சில தவறுகள் நேரலாம். ஆனால்அவர்களைத் திருப்திப்படுத்த என்றுமே விஜய் தவறியதில்லை.


தன் தவறுகளை சரியான நேரத்தில் உணர்ந்து திருத்திக்கொள்வதால்தான்  எப்போதும் வெற்றி என்கிற விஷயத்தில் விஜய் நிஜமாகவே “கில்லி”!

Sunday, 29 November 2015

தனுஷின் கார் விலை 2.48 கோடி, வரி 2.85 கோடி

கடந்த சில வருடங்களாக நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் கோடிகளில்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.கோடிகளில் என்றால்... ஒரு கோடி, இரண்டு கோடி என்று நினைத்துவிட வேண்டாம்.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் இரண்டு இலக்கத்திலான கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால், சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சிலர் சகட்டுமேனிக்கு செலவு செய்வதும் கண்கூடாகத் தெரிகிறது.

பல கோடி மதிப்பில் சொகுசு கார்களை வாங்குவதும் இப்படியான மனோபாவத்தில்தான்.

கோடிக்கணக்கான விலை கொண்ட ஜாகுவார், அவ்டி, ஹாமர், ரோல்ஸ்ராய் போன்ற சொகுசு கார்கள் கோலிவுட்டில் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.

இவற்றில் அதிக மதிப்பு கொண்ட கார் ரோல்ஸ்ராய்தான்.

இந்தக்காரை ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் வைத்துள்ளனர்.

அண்மையில் தனுஷும் ரோல்ஸ்ராய் கார் வாங்கினார்.

இந்தக்காரின் மதிப்பு விலை 2 கோடியே 48 லட்சம். இந்தக்காரை இந்தியாவுக்குள் கொண்டு வர 2 கோடியே 85 லட்சம் வரி செலுத்தி உள்ளார் தனுஷ்.

ஆக.. தனுஷ் வைத்துள்ள ரோல்ஸ்ராய் காரின் மதிப்பு 5 கோடியே 33 லட்சம்.

உலக அளவில் முதல் இடத்தை பிடித்த அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. மேலும் அஜித் இதுவரை நடித்த படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இன்று வெளிவந்த சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இதுவரை வெளிவந்த படக்களில் அதிக வசூலை பெற்று குவித்த படம் வேதாளம்.சென்னையில் 2-வது வார பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கமலின் தூங்காவனம் படத்தையும், ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் படத்தையும், வசூலில் முந்தி உள்ளது அஜித்தின் வேதாளம்.
வேதாளம் படம் 2-வது வார முடிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 237 காட்சிகள் ஓடி 1.03 கோடி வசூல் செய்து வசூலில் முதல் இடத்தில் உள்ளது. முதல் வார இறுதியில் 3.23 கோடி வசூல் செய்து இருந்தது. சென்னையில் மொத்தம் 13 நாட்களில் 5.15 கோடி வசூல் செய்து உள்ளது வேதாளம்.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது. அது 150 காட்சிகள் ஓடி 39.23 லட்சம் வசூல் செய்து உள்ளது.
கமலின் தூங்காவனம் 3-வது இடத்தில் உள்ளது மொத்தம் 147 காட்சிகள் ஓடி 32.52 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வார இறுதியில் மொத்தம் 1.69 கோடி செய்து உள்ளது.

சல்மான் கானின் “பிரேம் ரதன் தா பயோ” 4-வது இடத்தில் உள்ளது 54 காட்சிகள் ஓடி 14.73 லட்சம் வசூல் செய்து உள்ளது. இந்த படம் முதல் வாரத்தில் 42.93 லட்சம் வசூலித்து உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை இப்படம் 79.98 லடசம் வசூல் செய்து உள்ளது.
புதிய படமான ஒரு நாள் இரவில் 5-வது இடத்தில் உள்ளது. இப்படம் 69 காட்சிகள் ஓடி 9.62 லட்சம் வசூல் செய்து உள்ளது.

இரண்டாவது வார முடிவில் அஜித்தின் வேதாளம் மொத்தம் 117 கோடி அளவிற்கு வசூல் செய்து சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலக்சனில் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

Tuesday, 17 November 2015

என்னை அறிந்தால்-2க்கு தயாரான கெளதம்மேனன்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்குவதில் தற்போது இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த  வகையில், இதற்கு முன்பு தான் தமிழில் இயக்கிய படங்களை மற்ற மொழிகளுக்கு ரீமேக் மட்டுமே செய்து வந்த கெளதம்மேனன், சூப்பர் ஹிட்டான படங்களைகூட இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், அஜித்தை வைத்து தான் 
இயக்கிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் நிலையில் இருக்கிறாராம்.

yennai-arindhaal-shooting-spot-stills-2-

என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோதே, இந்த படம் ஹிட்டானால் இரண்டாம் பாகத்திற்கான கதையை ரெடி 
பண்ணிவிடுவேன் என்று அஜீத்திடம் கூறியிருந்தாராம் கெளதம்மேனன். அஜீத்தும் அதற்கு ஓகே சொல்லி விட்டாராம். அதனால், 
என்னை அறிந்தால் வெளியாகி வெற்றி பெற்றதும், அடுத்த பாகத்திற்கான கதையை ரெடி பண்ணி வைத்துள்ள கெளதம்மேனன், 
அடுத்து அஜீத் எப்போது கால்சீட் கொடுத்தாலும அந்த படத்தை இயக்க தயாராக உள்ளாராம்.மேலும், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை காப்பாற்ற வருபவராக நடித்த அஜீத், கணவரை இழந்து விட்டு ஒரு 
குழந்தையுடன் இருக்கும் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள தயாராவார். அப்போது திரிஷா கொல்லப்படுவார். அதன்பிறகு 
அந்த குழந்தைக்கு தான் அப்பாவாகி விடுவார். ஆனால், இரண்டாவது பாகத்தில் அவரது மகளான அந்த பெண்ணுக்கு ஒரு பெரிய
பிரச்சினை வருமாம். அதிலிருந்து அவரை அஜீத் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதையாம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் 
தெரிவித்துள்ள கெளதம்மேனன், என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்சினையையும் கலந்து கதை 
பண்ணியுள்ளாராம்.

Sunday, 15 November 2015

அடை மழையில் சரிந்தது வசூல்: தியேட்டர் அதிபர்கள் கவலை

தீபாவளியையொட்டி கடந்த 10ந் தேதி கமல் நடித்து, தயாரித்த தூங்காவனம் படமும், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படமும் வெளிவந்தது. படம் வெளியான நாள் முதல் தமிழ்நாட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், கமல், அஜீத் ரசிகர்கள் கொடுத்த ஓப்பனிங்கால் வேதாளம் வசூலை தெறிக்கவிட்டது. தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாள் வசூலே 10 கோடியை தாண்டியது என்கிறார்கள். தூங்கவானம் படம் ஆவரேஜான, நிதானமான வசூலை கொடுத்துக் கொண்டிருந்தது.

தீபாவளி செவ்வாய்கிழமை, அடுத்து வந்த புதன், வியாழனும் நல்ல கலெக்ஷன்தான். அடுத்து வரும் சனி, ஞாயிறு கலெக்ஷனை தயாரிப்பாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை கமல், மற்றும் அஜீத்தின் ரசிகர்கள் படங்களை பார்த்துவிட்டார்கள். அவர்கள் அடாத மழை பெய்தாலும், விடாது வெயில் அடித்தாலும் பார்த்து விடுவார்கள்.

பொதுமக்கள் இனிமேல்தான் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் அவர்களை வரவிடாமல் மழை கொட்டுகிறது. வானிலை ஆராய்ச்சி மைய தகவல்படி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அடை மழை பெய்யும் என்று தெரிகிறது. இதனால் வருகிற சனி, ஞாயிறு கலெக்ஷன் பாதிக்கப்படுமோ என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 எந்திரன் - 2 படத்திற்காக ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட் :clapping:

NTLRG_151113150639000000.jpg

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று கிராமத்துப்பக்கம் சொல்வார்கள். அதைப்போல், தோல்விப்படத்தில் நடித்தாலும் ரஜினி ரஜினி தான். அவரது மார்க்கெட், மவுசு, அவருடைய படத்தின் பிசினஸ் எதையும் மற்ற ஹீரோக்களால் எட்டவே முடியாது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்தாலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார் ரஜினி. அங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதை முடித்த பிறகே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் ரஜினி. இது ஒரு புறமிருக்க, ரஜினி அடுத்து நடிக்க உள்ள எந்திரன் 2 படத்திற்கான மேக்-அப் டெஸ்ட் நடத்திக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

ரஜினி கபாலி படப்பிடிப்பில் இருக்க, இங்கே யாருக்கு மேக்கப் டெஸ்ட் நடத்துகிறார் ஷங்கர்? ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க சில நபர்களை வரவைத்து அவர்களுக்குத்தான் மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார் ஷங்கர். இந்த மேக்கப் டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்தான் எந்திரன் -2 படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பல காட்சிகளுக்கு ரஜினியின் டூப்பாக நடிக்க இருக்கிறார். கபாலி படப்பிடிப்பு முடிந்ததும் எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


24 ஆம் தேதி 24 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் :clapping: 

NTLRG_151113151238000000.jpg

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள பசங்க-2 இம்மாதம் 27- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலா பால், பிந்துமாதவி மற்றும் பல சிறுவர்கள் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் மற்றொரு படமான 24 படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான 24 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது படு வேகமாக நடந்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள சூர்யா இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் பெயரும் 24 என்பதால் 24 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு 25 கோடி சம்பளம்.? :clapping: 

NTLRG_151113151014000000.jpg

ரஜினி முருகன் படம் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் அதை மறந்துவிட்டு தற்போது தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் 24AM ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை நானும் ரௌடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் இப்படத்தை தயாரிக்கப்போகிறார்.

இவரது தயாரிப்பில் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூல் செய்து பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கிடைத்த லாபத்தை அப்படியே தன் அடுத்தப் படத்துக்கான முதலீட்டாக்கிவிட்டார் ஏ.எம்.ரத்னம். அதாவது, தனது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார் ஏ.எம்.ரத்னம்.

சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டு பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் அப்ரோச் செய்திருந்தனர். அவர்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டு ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுக்க என்ன காரணம்? ஏ.எம்.ரத்னம் தருவதாக சொன்ன பெரிய சம்பளம்தான் காரணம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். சிங்கிள் பேமெண்ட்டாக 25 கோடி தருவதாக சொன்னதால்தான் ஏ.எம்.ரத்னத்துக்கு உடனடியாய் சிவகார்த்திகேயன் டேட் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.

Thursday, 12 November 2015

ஹாட்ரிக் வெற்றியில் இயக்குனர் சிவா

சமீபகாலத்தில் எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயக்குனர் சிவாவுக்குக் கிடைத்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு அஜித் படங்களை இயக்கி இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகவும் கொடுத்துவிட்டார். சிவா இயக்கிய முதல் படமான சிறுத்தையும் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஆக, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துவிட்டார் இயக்குனர் சிவா.

2002ம் ஆண்டு பிரபுதேவா, பிரபு நடித்து வெளிவந்த சார்லி சாப்ளின் படம் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். 2008ல் வெளிவந்த சௌர்யம் என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2011ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சிறுத்தை மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகானார். 2014 பொங்கலுக்கு வெளிவந்த வீரம் படத்தில் அஜித்தை இயக்கியவர் மீண்டும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் படத்திலும் அஜித்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முந்தைய படங்களைக் காட்டிலும் வேதாளம் படம் தமிழ்த் திரையுலகில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

முன்னணி மாஸ் கமர்ஷியல் இயக்குனர்களின் பட்டியலில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார் சிவா.

ரசிகர்களை சந்திப்பாரா அஜித் ?

தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளம் படம் வெளிவந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை விட வேதாளம் கொண்டாட்டத்தைத்தான் அதிகம் கொண்டாடினார்கள். தமிழ்நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர்களின் சொந்த செலவிலேயே திரையரங்குகளை அலங்கரிப்பது, பேனர்கள் வைப்பது என பல விஷயங்களைச் செய்து தியேட்டர்களை திருவிழாக் கோலம் ஆக்கினார்கள்.

கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தது. பொதுவாக ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிப்பதை அவர்களது சொந்த செலவில் செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நடிகர்தான் ரசிகர் மன்றத்திற்கு பணம் கொடுத்து அனைத்தையும் செய்ய வைப்பார். ஆனால், அஜித் ரசிகர்கள் அவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இப்படிச் செய்வது ஆச்சரியமான ஒன்று. அதிலும் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது.

ரசிகர்களின் அளவு கடந்த அன்புக்கும், பாசத்திற்கும் அஜித் என்ன செய்யப் போகிறார். அவர்களது ரசிகர்களே அதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அஜித்தை ஒரு முறையாவது நேரில் பார்த்து அவரை வாழ்த்த வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதைக் கூட அஜித் செய்வதில்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எப்படியும் அஜித் காதுக்குப் போய்விடும். ரஜினிகாந்துக்குப் பிறகு ஒரு நடிகர் மீது ரசிகர்கள் எந்த பிரதிபலனும் பார்க்காமல் அன்பு செலுத்துவது அஜித்துக்கு மட்டுமே என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்யப் போகிறார். குறைந்தபட்சம் அடிக்கடியாவது அவர்களைச் சந்திப்பாரா ?...

தூங்காவனம் படத்தில் குறையே இல்லையா?வேதாளம் படம் பற்றியும், தூங்காவனம் படம் பற்றியும் வெளியாகியுள்ள விமர்சனங்களைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இரண்டு படங்களையும் பலரும் இருவேறு விதமாக விமர்சித்துள்ளார்கள் என்ற பேச்சுதான் அதிகம் எழுந்துள்ளது. வேதாளம் படம் பற்றி சொல்ல வேண்டாம், அது பக்கா மசாலாப் படம். அந்த மாதிரிப் படங்களில் என்ன குறை இருந்தாலும் ரசிகர்கள் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள். அப்படிப்பட்ட படங்களில் லாஜிக் மீறல்களைப் பற்றியும் பெரிதாகப் பேச மாட்டார்கள். அப்படியே அந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும் அஜித் ரசிகர்கள் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் படம் இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாக நகர்ந்து ரசிக்க வைக்கிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள்.

ஆனால், தூங்காவனம் படத்தை அப்படிப் பார்க்க மாட்டார்கள். அது கமல்ஹாசனின் படம். தமிழ் சினிமாவில் எந்த குறையும் அதிகமில்லாத படங்களைக் கொடுப்பவர், சினிமாவின் காதலர் எனப் பெயரை எடுத்தவர். படத்திற்கு ராஜேஷ் எம் செல்வாதான் இயக்குனர் என்றாலும் எப்படியும் கமல்ஹாசன் தலையீடு என்பது காட்சிக்குக் காட்சி இருந்திருக்கும். பலரும் தூங்காவனம் படத்தை கிளாஸ் படம் என்கிறார்கள். ஆனால், அந்த கிளாஸ் படத்திலும் குறிப்பிட வேண்டிய பல குறைகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் சாதாரண ரசிகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

கதை நடக்கும் அந்த ஹோட்டல் கிளப்பில் என்னதான் சண்டை, துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நடனமாடிக் கொண்டிருப்பவர்களும், விளையாடிக் கொண்டிருப்பவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். மூன்று முக்கியமான போலீஸ் அதிகாரிகள் ஹோட்டலுக்கு நுழைந்தது அங்குள்ள செக்யூரிட்டிகளுக்குத் தெரிந்தும் அவர்கள் ஓனரான பிரகாஷ்ராஜிடம் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் ரூமுக்கு வெளியே தவிர வேறு எங்குமே சிசி டிவி காமிரா இல்லவே இல்லை. கிஷோர் போதைப் பொருளைக் கைப்பற்றியும் ஹோட்டலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். தன்னைத் துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க முன் பின் தெரியாத மதுஷாலினிக்கு பல முறை கமல்ஹாசன் முத்தம் கொடுத்து முகத்தை மறைத்துத் தப்பிப்பதெல்லாம் ரொம்ப டூ மச் என்கிறார்கள்.

காசு கொடுத்து வாங்கிதானே கமல்ஹாசன் காப்பி அடித்துள்ளார், அதை கொஞ்சம் சரி செய்து காப்பி அடித்திருக்கலாமே என்கிறார்கள் ரசிகர்கள்.

அமெரிக்காவிலும் தூங்காவனத்தை விரட்டும் வேதாளம்

தமிழ்நாடு முழுவதிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வேதாளம் படம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலாக சுமார் 20 கோடி ரூபாய் வரையில் வசூலித்திருக்கலாம் எனச் சொல்லப்படும் வேதாளம் படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் முதல் நாளைப் போலவே சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு வசூலைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எந்திரன், கத்தி ஆகிய படங்களின் வசூல் சாதனையை வேதாளம் முறியடித்து விட்டது மட்டும் உண்மை என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, அமெரிக்கா என்றாலே அது கமல்ஹாசனின் கோட்டை என பட வெளியீட்டிற்கு முன்னர் சொன்னார்கள். ஆனால், அமெரிக்காவிலும் தூங்காவனம் படத்தை பின்னுக்குத் தள்ளி வேதாளம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமே இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“அமிஞ்சிக்கரையோ அமெரிக்காவோ தல தான் ஓபனிங்குக்கெல்லாம் ராஜா. அமெரிக்காவில் தூங்காவனம் படத்தின் வசூல் 87 திரையரங்குகளில் 76,115 டாலர்கள். வேதாளம் படத்தின் வசூல் 65 திரையரங்குகளில் 92,392 டாலர்கள்” என அறிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் வேதாளம் படத்தின் வசூலை தூங்காவனம் படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள். அஜித், விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கமல்ஹாசன் தன்னுடைய பட வெளியீட்டை தவிர்ப்பதே சிறந்தது என்று வினியோகஸ்தர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

Sunday, 1 November 2015

பெரிய பிரச்சனையில் மாட்டவிருக்கும் அஜித்- எப்படி சமாளிப்பார்?அஜித் தேவையில்லாத எந்த பிரச்சனைகளில் தலையிட மாட்டார். அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சியின் பார்வை தற்போது அஜித் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் விஜய்யிடம் அரசியல் குறித்து பேச, அதை அவர் மறுக்க புலி படத்திற்கு நடந்ததை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அந்த கட்சியினர் தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் வட்டத்தை அறிந்து அவரை அரசியலில் ஈடுபட வைக்க முயற்சி செய்கிறார்களாம். ஆனால், அஜித் முன்பே அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்நிலையில் அவர் சம்மதிக்கவில்லை என்றால், விஜய்க்கு பிரச்சனை வந்தது போல் அஜித்திற்கு வர வாய்ப்பு உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Saturday, 17 October 2015

தமிழ் சினிமா கதாநாயகர்கள் சிறுவர்களிடையே புகைத்தலை தூண்டுகிறார்களா?

தென்னிந்தியாவிலிருந்து வரும் திரைப்படங்கள் மூலம் இலங்கையில் தமிழ் சிறார்கள் மத்தியில் புகைத்தல் பழக்கம் தூண்டப்படுவதாக அடிக் என்ற மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தன்னார்வ தொண்டுநிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
 
 
தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும் காட்சிகளால் தூண்டப்பட்டு பல சிறார்கள் முதலில் புகைக்கத் துவங்கியதாக கூறியிருந்ததை மேற்கோள்காட்டியே அந்த நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தது.
 
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் தங்களின் போதைப் பழக்கத்தை சிகரெட்டிலிருந்தே ஆரம்பிப்பதாகவும் அடிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
பெரும்பாலானவர்கள் தங்களின் சிகரெட் பழக்கத்தை அவர்களின் பதின்ம பருவத்திலேயே துவங்குவதாக அடிக் நிறுவனத்தின் பணிகளில் பங்கெடுத்திருந்த உளவியல் மருத்துவர் எம். கணேஷன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
உதாரண புருஷர்களை பின்பற்றுகின்ற வழக்கம் சிறார்கள் மத்தியில் இருப்பதால், சினிமா கதாநாயகர்கள் சிகரெட் புகைக்கும்போது அவர்களை பின்பற்ற நினைக்கும் சிறார்களும் புகைத்தலுக்கு தூண்டப்படுகிறார்கள் என்றும் மருத்துவர் கணேஷன் தெரிவித்தார்.
 
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சிகரெட்டுக்கு விளம்பரம் செய்யமுடியாத நிலை இருப்பதால் சிகரெட் நிறுவனங்கள் புகைத்தல் காட்சிகளை ஊக்குவிப்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் கணேஷன் குற்றம்சாட்டினார்.
 
நேரடி விளம்பரம் இல்லாமல் பொருளை காட்சிப்படுத்துவதன் மூலம் மறைமுக விளம்பரம் செய்யும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே, ஆசியாவில் புகைத்தல் பழக்கம் குறைந்து வரும் ஒரே நாடு இலங்கை தான் என்று கூறிய மருத்துவர் கணேஷன், ஆனால் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புகைத்தல் பழக்கம் அதிகரித்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஆதரவு கேட்கப் போய் சேதாரமானவர்கள்

பாம்புக்கு தலையும், தவளைக்கு வாலும் ஒரே நேரத்தில் டிஸ்பிளே செய்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் பிடித்து நிற்க முடியும்.

அதுவும் டாப்பில் இருப்பவர்களின் நிலைமை, கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் தொபுக்கடீர்தான். 
 
உச்சத்தின் ஆதரவு கிடைத்தால் மிச்சத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம் என நடிகர்களின் இரு அணிகளும் கணக்குப் போட்டு அவரை சந்தித்தன. போட்டிபோட்டு உச்சத்துக்கு சொந்தமான மண்டபத்தில் கூட்டத்தையும் நடத்தினர்.
 
இலவசமாக இடம் கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, லட்சங்களில் வந்த பில் கரண்டை கையில் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அட, டிஸ்கவுண்ட்கூட தரலையாம் உச்சம்.
 
மாங்காய்னு நினைச்சு தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதைதான்.

Monday, 12 October 2015

தெலுங்கு திரையுலகத்தை அதிரவைத்த அனிருத்!

தனுஷ் நடிப்பில் 3  படத்தின் ஓய் திஸ் கொலவெறிடி பாடலின் மூலம் உலகளவில் முதல் படத்திலேயே ஹிட் கொடுத்து தமிழில் முன்னனி இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதை தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் அனிருத். தெலுங்கில் தேவிஸ்ரீபிரசாத், தமன் இருவரின் பாடல்களே ஹிட் அடிக்கும் நிலையில் இவர்கலுக்கு போட்டியாக கலத்தில் குதிக்கிரார் அனிருத்.ஒவொவ்வொரு முரயும் தேவிஸ்ரீ பிரசாத்துடன் கை கோர்க்கும் இயக்குநர் த்ரிவிக்ரம் இந்த முறை அனிருத்தை அவர் படத்திற்கு ஓகே செய்திருக்கிறார். நிதின், சமந்தா நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு 1.5 கோடி சம்பளம் அனிருத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் இதுவரை இசையமைத்த தமன் 60 முதல் 80 லட்சம் வரையிலும், தேவி ஸ்ரீபிரசாத் 1கோடி வரையிலுமே சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முலம் தெலுங்குப் பட உலகில் அனிருத் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என்று தெலுங்கு வட்டாரம் கிசுகிசுக்கிறது.

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் பாராட்டப்பட்டார்.

வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.

திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.

மாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்
நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான “மாலையிட்ட மங்கை” என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.

மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் “கொஞ்சும் குமரி”. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.

அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முதல் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.

அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்

ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.

அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.

அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்

மனோரமா.நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய பாடல்களும் இன்றளவும் நினைவில் நிற்கின்றன. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..” என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.

ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு அதிகம். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.

பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இந்திய தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக தமிழ்த் திரையுலகில் நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

Sunday, 4 October 2015

விமர்சனங்களையும் மீறி வசூலைக்குவிக்கும் புலி

தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சரித்திர காலத் திரைப்படமாக வெளிவந்துள்ள படம் ‘புலி’. படம் வெளிவந்த நாள் முதல் இப்படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தது.இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த மூன்று நாட்களாக படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் தெரிவிக்கிறார்கள்.

சினிமா பார்க்க வருபவர்களிள் குறைந்த சதவிகிதத்தினரே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். தியேட்டர்களுக்கு அதிகமாக வந்து படம் பார்ப்பவர்கள் சாதாரண ரசிகர்களே என பிரபல வினியோகஸ்தர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முந்தைய விஜய் படங்கள் அளவிற்கு இந்தப்படம் ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் கடந்த மூன்று நாட்களில் சராசரியாக சுமார் 30 கோடி முதல் 35 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாடு தவிர கர்நாடகா, கேரளாவில் எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட கொஞ்சம் குறைவாக வசூலானாலும் மோசமான வசூல் இல்லை என்றே சொல்கிறார்கள்.

அமெரிக்காவிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

விமர்சனங்களையும் மீறி படம் வசூலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்ற பேச்சு தான் கோலிவுட்டில் அடிபட்டு வருகிறது. தெலுங்கில் ஒரு நாள் தள்ளி வெளியானதால் வசூல் குறைவாக உள்ளதாம். இருந்தாலும் ‘விஷுவல் ட்ரீட்’டாக இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்ற பாராட்டு எழுந்துள்ளது.

இருந்தாலும் படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இன்னும் பிரமாதமான ஒரு படத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் மீது தான் பலரின் விமர்சனம் உள்ளது. இன்றுடன் படம் எப்படியும் 50 கோடியைத் தொட வாய்ப்புள்ளதாகவே திரையுல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, 14 August 2015

என்னமோ தெரியலை ஒரு தெம்பு வருது

ஏன் ரஜினி படப் பெயரை உங்கள் படத்தின் பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று யாரிடம் கேட்டாலும், மேலே உள்ளது போல்தான் பதிலளிக்கிறார்கள். சுசீந்திரன் விஷாலை வைத்து இயக்கியிருக்கும் படம், பாயும் புலி. ஏன் இந்த பெயர்?
 
 
அந்த பெயரை வச்சாலே பாதி விளம்பரம் கிடைச்சிடுது என்றார் சுசீந்திரன். தவிர, படத்திலும் விஷால், முதலில் பதுங்கி பிறகு பாய்வாராம், புலி மாதிரி. அதனால் இந்த பெயர் ஆப்டாக இருக்கும் என்று தேர்வு செய்தோம் என்றார். 
 
பாபி சிம்ஹாவின் படத்தின் பெயர், வீரா. ஏன் வீரா? ஹீரோ ரொம்ப வீரமானவர். சண்டையெல்லாம் போடுவார் என்று எகனை மொகனையாக ஏதாவது சொல்வார்கள். அதனால் கேட்கவே இல்லை. இதேபோல் ஜானி, பாட்ஷா, அண்ணாமலை என்று ரஜினியின் படப்பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்க ஒரு கூட்டம் அலைகிறது. 
 
கதையை நம்பினால் எதுக்கு பெயருக்கு பின்னால் ஓடணும்?

சிம்புவின் ஆன்மீக கதை

நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் தேடி ஓடிய சிம்பு திடீரென்று ஒரு சுப்ரபாதத்தில் காவி உடுத்தி இமயமலைக்கு பயணமானது டோட்டல் தமிழ் நாட்டையும் அப்செட்டாக்கியது. அப்படியே சாமியராகி ரஜினீஸ் மாதிரி வருவாரோ என்று ஒருசிலருக்கு பயம். ஆனால், அப்படி எந்த பயங்கரவாதமும் செய்யவில்லை சிம்பு. போன வேகத்தில் திரும்பி வந்தார். கிளைமேட் ஒத்துக்கலை போல.
 
 
ரொம்ப தாமதமாக இப்போது, நான் ஏன் சாமியாரானேன் என பேட்டி தந்துள்ளார்.
 
சிம்பு சின்ன வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் அல்லவா. எதுக்கு இப்படி சின்ன வயசிலயிருந்தே உழைச்சுகிட்டும் ஓடிகிட்டும் ஒருக்கணும் என்று ஒருநாள் சிம்புக்கு தோணியிருக்கு. உடனே ஆன்மீகத்தில் குதித்து இமயமலையில் மேலெழுந்திருக்கிறார்.
 
சரி, அங்கயே அப்படியே செட்டிலாகலாம்னுதான் இருந்தேன். ஆனா, சிம்பு பயந்துட்டான்னு சொல்வாங்கயில்லையா, அதனாலதான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டேன் என்றிருக்கிறார்.
 
அடுத்தவன் என்ன சொல்வான்னு யோசிக்காம, நமக்கு நல்லதுன்னு தோணுறதை செய்யணுங்கிறதுதான் ஆன்மீகத்தோட பாலபாடம். லௌகீகத்தின் அத்தனை சுகங்களையும் அனுபவிச்சுகிட்டு ஆன்மீக கொட்டாவிவிடுறதில் நடிகர்களை அடிச்சுக்க முடியாது. 
 
நீங்க பேசுங்கண்ணா.

Sunday, 9 August 2015

பிரபல நடிகை அசின் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்!

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இதன் பின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார்.படம் ஹிட் ஆனாலும் அவருக்கு பெரிய பெயர் ஒன்றும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இவர் நடிப்பில் விரைவில் ஆல் இஸ் வெல் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

சமந்தாவுக்கு வந்த டிமாண்டை பாருங்கள்

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சமந்தாவுக்கு இருக்கும் டிமாண்ட் மிரள வைக்கிறது.மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்தபோது சமந்தா சாதாரணமாகத்தான் இருந்தார். அதற்குப் பிறகு வந்ததுதான் இந்த அசுர வளர்ச்சி.
 
விஜய், விக்ரம், சூர்யா, உதயநிதி அனைவருடனும் இப்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கில்.
 
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் அடுத்து ரொமான்டிக் படமொன்றை இயக்குகிறார். கதை முடிவானதும், அவர் கால்ஷீட் வாங்கியது சமந்தாவிடம். சரி, நாயகன்?
 
நாயகன் யார் என்பதை முடிவு செய்யும் முன்பே சமந்தாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார் த்ரிவிக்ரம். அதன் பிறகு, சமந்தாவுக்கு யார் சரிவருவார்கள் எனப் பார்த்து நித்தினை நாயகனாக்கியிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
த்ரிவிக்ரமின் முந்தைய இரு படங்களிலும் சமந்தாவே நாயகி என்பது முக்கியமான தகவல்.

Sunday, 2 August 2015

பாகுபலியை தூக்கி சாப்பிட தூபம்போடும் டைரக்டர்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயந்து போன நம்மூர் பிரமாண்ட டைரக்டர் உச்ச நட்சத்திரத்துடனான தனது அடுத்த படத்தை வெகு பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்து பெரிய குழுவோடு களமிறங்கியுள்ளார். ஆனால், இருவரையும் நம்புவதற்கு தயாரிப்பு தரப்புகள் தயாராக இல்லையாம். பாகுபலி திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விதத்தால் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர், ராஜமவுலிதான் என்று அனைத்து ஊடகங்களும் ரத்தின கம்பளம் விரித்துள்ளன. இது நம்மூரிலுள்ள பிரமாண்ட இயக்குநருக்கு கடும் கடுப்புகளை கிளப்பிவிட்டுள்ளது. ராஜமவுலியை அந்த பிரமாண்டம் வெளிப்படையாக வாழ்த்தி தனது பெரியமனுஷத் தனத்தை காண்பிப்பது போல காண்பித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் வெந்து கொண்டுள்ளது மனது. உச்ச நட்சத்திரத்தை வைத்து தனது முந்தைய படத்தின் 2வது பாகம் எடுக்க உள்ள அந்த பிரமாண்டம், 27 உதவி இயக்குநர்களையும், 10 நிர்வாக தயாரிப்பாளர்களையும் வைத்து டிஸ்கஷன் செய்துள்ளார். 

எப்படியாவது, பாகுபலியை முந்திவிட வேண்டும், தயாரிப்பாளருக்கு எத்தனை மொட்டை போட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ரொம்ப உக்கிரமாக டிஸ்கஷன் நடந்துள்ளது. இந்நிலையில்தான், டிஸ்கஷன் விஷயத்தை யாரோ வெளியே லீக் செய்துவிட்டனர். கடுப்பிலுள்ளாராம், பிரமாண்டம். பிரமாண்டம், தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தி எடுத்த முந்தைய பிரமாண்ட படத்துக்கு போட்ட முதலை எடுப்பதற்குள் தயாரிப்பாளருக்கு நுரை தள்ளிவிட்டது. இதில், பாகுபாலியை முந்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், 300 கோடி என்று பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கும் பிரமாண்டத்தை நம்பினால் தெருக்கோடிதான் கதியா என்று பல தயாரிப்பாளர்களும் புழுதி பறக்க ஓடிக் கொண்டுள்ளனர்.

பிரமாண்டம் ஹீரோவாக வைத்து படமெடுக்க உள்ள நடிகருக்கும் இப்போது போதாத காலம். மக்கள் ரசனை மாறிவிட்டதால் அந்த குதிரை மீதும் பந்தையம் கட்ட தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். பிரமாண்டத்தின் சமீபத்திய படங்களும் பல லாஜிக் ஓட்டைகளுடன், புளித்து போன காட்சிகளுடன் பல்லிளிக்கின்றன. இருந்தாலும் ராஜமவுலியா, நானா என்ற கேள்விமட்டும் பிரமாண்டத்தை தூங்கவிடாமல் செய்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவின் ரியல் நண்பர்கள்- ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நாயகர்களுக்கு இடையே ஒரு வகை போட்டி இருக்கும், இவை இவருக்கு ஒரு கூட்டம், அவருக்கு ஒரு கூட்டம் என பெரிய குழுக்களாக இருக்கும்.
தியேட்டர் சண்டை, போஸ்டர் சண்டை, பேனர் சண்டை என தற்போது வலைத்தள சண்டை வரை வளர்ந்துள்ளது இந்த கலாச்சாரம். ஆனால், உண்மையாகவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள், ஒரு சிலரின் தவறான தூண்டுதலால் ரசிகர்களுக்கு இடையே சண்டை வருகின்றது.
எம்.ஜி.ஆர்-சிவாஜி


பாகவதர் மட்டும் தமிழ் சினிமாவை ஆண்டு வந்த நிலையில், எம்.ஜி.ஆர்-சிவாஜி என இரண்டு நட்சத்திரங்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தனர். முதன் முறையாக இரண்டு நடிகர்கள் மோதல் இங்கு தான் தொடங்கியது. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் நல்ல நட்புடன் தான் கடைசி வரை இருந்தனர். இதன் காரணமாகவே ரசிகர்கள் சண்டை தீவிரமடையவில்லை.
ரஜினி-கமல்


ரசிகர்களின் மோதல் அதிகமானது இந்த கால கட்டத்தில் தான், இருவரும் சேர்ந்து பல படங்கள் நடித்தாலும், இவர்கள் பிரிந்து நடிக்க தொடங்கியவுடன் ரசிகர்களும் பிரிய ஆரம்பித்து விட்டனர். ஆனால், பல மேடைகளில் ரஜினி, கமலையும், கமல் ரஜினியையும் புகழ்ந்து பேச ரசிகர்களுக்குள்ளான சண்டை குறைந்தது. மேலும், கமல் ஒரு விழாவில் ரஜினி-கமல் போல் சிறந்த நண்பர்கள் வேறு யாரும் இல்லை என கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
விஜய்-அஜித்


நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, உச்சக்கட்ட போர் என்றால் அது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். அஜித்த்து, விஜய்யும் தான் தற்போது தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத நடிகர்கள், ஏனெனில் அத்தனை பெரிய ரசிகர்கள் வட்டத்தை அவர்கள் வைத்துள்ளனர். மற்ற நடிகர்களை திட்டுபவர் என் ரசிகர்களாக இருக்க தகுதியில்லை என அஜித் கூறினார், மற்ற நடிகர்களையும் நீங்கள் மதிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
ஆனால், இவர்கள் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படியில்லை என்பது தான் வருத்தம். அவர்கள் நட்புடன் இருந்தாலும், ஒரு சிலரின் தவறான செயல்களால் பெரிய போர் வெடித்து விடுகிறது. இனியாவது இவர்கள் தங்கள் நடிகர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
சிம்பு-தனுஷ்


அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கான போட்டி நடிகர்கள் இவர்கள், ஆனால், பிரச்சனையை ஆரம்பத்திலேயே தங்கள் நட்பால் கிள்ளி எறிந்து விட்டனர். எனவே இவர்கள் நட்பை புரிந்த ரசிகர்கள் யாரும் சண்டையிட்டு கொள்வதில்லை. இருவரின் வாக்கியமும் எப்போதும் ஒன்று தான் Spread Love.

இதுபோல் அனைத்து நடிகர்களுமே நட்புடன் இருக்க, நாம் மட்டும் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்....நண்பர்கள் அனைவருக்கும் #HappyFriendshipDay

Sunday, 12 July 2015

பாகுபலி சொல்லும் செய்திகள்!

பாகுபலி படத்தை பார்த்தபிறகு அப்படம் சினிமாவில் பலருக்கும் நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. நிறைய செய்திகளைச் சொல்லியுள்ளது. தான் சாதாரண ஆள் ஷங்கர் அளவுக்கு இல்லை என்று ராஜமௌலி கூறினாலும்,.பிரமாண்டம் என்றால் அது ஷங்கரால் மட்டுமே முடியும் என்கிற நம்பிக்கையை பாகுபலி தகர்த்துள்ளது என்றே கூறவேண்டும், பாகுபலியின் நிலவரம் பற்றி ஷங்கர் விசாரித்து வருகிறாராம், அவரது விசாரிப்பில் அவரது பதற்றம் புரிகிறதாம்.தென்னிந்திய மொழிகளில் 250 கோடி பட்ஜெட்டில் படம் என்கிற வரலாற்றைப் பாகுபலி சாத்தியமாக்கியுள்ளது.பாகுபலி ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்று ஒரு கருத்து பேசப்பட்டாலும் சிலரால் பரப்பப்பட்டாலும் உழைப்பில், உருவாக்கத்தில் தெலுங்கு உழைப்பு என்ன, தமிழ் உழைப்பு என்ன இயக்குநரின் கடின உழைப்பை மதிக்க வேண்டும் என்று பார்வையாளர்களை எண்ண வைத்துள்ளது.

பாகுபலி ஒரு இயக்குநரின் படமாகவே அறியப்படுகிறது,பேசப்படுகிறது, இதில் பணியாற்றியுள்ள நவீன தொழில் நுட்பக்கலைஞர்கள் பெரும்பாலும் நம்நாட்டின் உள்ளூர் கலைஞர்கள்தான்.

ராஜமௌலி நட்சத்திரங்களை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ரகமல்ல என்பது அவர் டைட்டில் கார்டு போடும்போதே தெரிகிறது.படம் ஆரம்பிக்கும் முன் தொழில் நுட்பக்கலைஞர்களின் பெயர்களைத்தான் முதலில் போடுகிறார், படம் முடிந்தபின்தான் நடிகர்களின் பெயர்களைப் போட்டுள்ளார். இதிலிருந்து ராஜமௌலி பின்னணியில் முகம் காட்டாது இயங்கும் உழைக்கும் கலைஞர்களை மதிப்பவர் என்பது புரிகிறது. இது நட்சத்திர நிழலில் குளிர்காயும் நம் இயக்குநர்களுக்கு வராத தெளிவு, துணிவு,

இதுவரை பிரமாண்டத்துக்கு என்றால் ஷங்கரையே அடையாளம் காட்டினார்கள், இனி அப்படிக்காட்ட முடியாது - ராஜமௌலி வந்துவிட்டார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அல்லவா? இதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

தமிழோடு விளையாடும் கமல்ஹாசன்...!

தங்கள் அபிமான ஹீரோக்கள் நடித்து ஒரு படம் வெளிவந்து விட்டால் போதும், அவருடைய ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த ஹீரோக்களைப் பற்றி புதிது புதிதாக பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுகிறார்கள். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்த ஹீரோக்கள் செய்த சில பல நல்ல விஷயங்களும் மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு தங்களது ஹீரோக்களின் திறமைகளை அவர்களது ரசிகர்கள் கூர்ந்து கவனித்துப் பார்த்து வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோருடைய தீவிர ரசிகர்களில் பலரை இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.கமல்ஹாசன் நடித்துள்ள 'பாபநாசம்' படம் வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே இப்படி ஒரு சாதனை விஷயத்தை கமல்ஹாசன் ரசிகர்கள் பரவவிட்டுள்ளார்கள். கமல்ஹசான் 'பாபநாசம்' படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடித்துள்ளார். அவர் பேசி நடிக்கும் அந்த நெல்லைத் தமிழ் அவருடைய உச்சரிப்பாலும் இனிமையாகவே உள்ளது. அந்த அளவிற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்று நெல்லைக்காரர்களே கண்டிப்பாகச் சொல்வார்கள்.

இதேப்போல் கமல்ஹாசன் இதற்கு முன் பலவிதமான தமிழ் பேசி நடித்துள்ள கதாபாத்திரங்களைப் பற்றி அவருடைய ரசிகர்கள் பெருமையாகப் பகிர்ந்து வருகிறார்கள். உன்னைப் போல் ஒருவன் - பொதுவான தமிழ், விருமாண்டி - மதுரைத் தமிழ், தெனாலி - இலங்கைத் தமிழ், தசாவதாரம் - களியக்காவிளைத் தமிழ், சதிலீலாவதி - கோவைத் தமிழ், மகராசன் - சென்னைத் தமிழ், மைக்கேல் மதன காமராஜன் - பாலக்காட்டுத் தமிழ், என அவர் பேசி நடித்துள்ள தமிழ் எத்தனையோ உண்டு. இவற்றில் தசாவதாரம் - பல்ராம் நாயுடு பேசும் தெலுங்குத் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாம். இதிலிருந்தே கமல்ஹாசன் ஒரு வழக்கமான நடிகர் அல்ல வித்தியாசமான நடிகர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். வேறு எந்த ஹீரோவாவது தமிழிலேயே இந்த அளவிற்கு விளையாடியிருக்கிறார்களா ?

ராஜமௌலிக்குப் பாராட்டு, தவிக்கும் பாலிவுட் இயக்குனர்கள்

'பாகுபலி' படம் கதை ரீதியாக ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உருவாக்கத்தில் இந்தியத் திரையுலகின் அனைத்து இயக்குனர்களிடத்திலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான ஒரு படத்தை ஹாலிவுட்டில் உருவாக்க வேண்டுமென்றால் 'பாகுபலி'படத்திற்கு ஆன செலவை விட பல மடங்கு அதிகமாகும். ஆனால் 200 கோடி ரூபாய்க்குள் ஒரு சாதனையை ராஜமௌலி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இது அவரைப் போன்ற திறமையான இயக்குனர்களைப் பாராட்ட வைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஏற்கெனவே ராஜமௌலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஹிந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குனரான சேகர் கபூர் ராஜமௌலியை மிக அதிகமாகப் பாராட்டி ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளார். சேகர் கபூர் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துக்கள் ராஜமௌலி, உங்கள் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் படம் பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன். தென்னிந்திய இயக்குனர்கள் வட இந்திய இயக்குனர்களை விட துணிவு மிக்கவர்கள். ராஜமௌலி போன்ற துணிவு மிக்க இயக்குனர்கள் மும்பையில் இல்லையே,” என்ற அவருடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது சில முன்னணி பாலிவுட் இயக்குனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் கரண் ஜோஹர் இந்தப் படத்தை ஹிந்தியில் வெளியிட்டு ஒரு தென்னிந்திய இயக்குனருக்கு ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவதை சிலர் விரும்பவில்லை என்றும் பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - 

கவுண்டமணிக்கு பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்காத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இடையில் சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த கவுண்டமணி, தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி ஆகி, ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற படம். இந்த படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கின்றார்.
கோலி சோடா' படத்திற்கு இசையமைத்த எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்த கணபதி பாலா இயக்கி வருகிறார்

சமீபத்தில் விஜய்-அட்லி படத்திற்காக ஒரு பாடலை பாடிய பிரபல இசையமைப்பாளர் தேவா, இந்த படத்தில் கவுண்டமணிக்காக ஒரு கானா பாடலை பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு கவுண்டமணி சூப்பராக நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இந்த வயதிலும் நடனம், சண்டைக்காட்சி என ஒரு ஹீரோவுக்குள்ள அனைத்து அம்சங்களுடன் ரீ எண்டிரி ஆகும் கவுண்டமணிக்கு இந்த படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Thursday, 2 July 2015

தனிமை எனக்கு இனிமை! - கோவை சரளா

பள்ளி மாணவியாக 9ம் வகுப்பு படிக்கும்போதே திரைப்படங்களில் பயணிக்க தொடங்கியவர், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தன் மண்ணுக்கேத்த பேச்சாலும், மனதைத் தொடும் நடிப்பாலும், 750 படங்களில் கோவை சரளா என்ற முத்திரையை படைத்து விட்டார். ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் கோவை சரளா, 'முந்தானை முடிச்சு, சதிலீலாவதி, கரகாட்டக்காரன்' என்ற இவரின் வெற்றி பட்டியல், 'கொம்பன், காஞ்சனா' என்று இன்றும் தொடர்கிறது. காமெடி குயினாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும், கோவை சரளாவிடம் பேசியதிலிருந்து...* வெற்றி உங்களை தேடி வருகிறதா.? இல்லை வெற்றி படத்தை தேடிபோய் நீங்க நடிக்கிறீர்களா.?

நான் 30 வருடமாக சினிமாவில் இருக்கேன். ஹிட் படங்களில் மட்டும் தான் நான் இருந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. நிறைய ஓடாத படங்களும் இருக்கும். நான் எதையும் உள் காரணம் வைத்து பார்ப்பது இல்லை. என் வேலையை செய்கிறேன். இப்போது எனக்கு நேரம் கொஞ்சம் நல்லா இருக்கு, அதனால் நிறைய வெற்றிகள் அமையுது.

இன்றைய சினிமா எப்படி இருக்கு?

நிறைய மாறியிருக்கு. ஒரு படம் வெற்றி அடைந்து விட்டது என்ற தகவல் வந்தால், அந்த படத்தில் நடிக்காவிட்டாலும், நமக்கே சந்தோஷமாக இருக்கு. இப்போது, கொம்பன், 50வது நாள் போஸ்டர் பாக்குறோம்; இதெல்லாம் சந்தோஷத்தை தருது. வெற்றிகரமான 2வது நாள் என்று போஸ்டர் அடிக்கும் நிலையில், இந்த மாதிரியான வெற்றி ஆச்சரியத்தை தருது.

பயந்து அல்லது வியந்து நடித்த படங்கள் எதுவும் இருக்கா?

அப்படி சொல்லணும்ன்னா சதிலீலாவதி படம் பற்றி சொல்லலாம். கமல் சாருடன் நடிக்கும் இந்த படம் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற பயம், படம் முடிக்கிற வரை இருந்தது. அந்த படம் ஓடவில்லை என்றால், கமல் சாரை திட்டுவாங்க; காமெடி நடிகையை ஜோடி சேர்த்ததால் தான் படம் தோல்வி அடைந்தது என, எல்லாரும் சொல்லிடுவாங்களோ என்ற பயம் இருந்தது. சதிலீலாவதி வெற்றின்னு கேள்விப்பட்ட பின் தான், எனக்கு உயிரே வந்ததுன்னு சொல்வேன்.

லாங்வேஜ், பாடி - லாங்வேஜ் எது உங்களுக்கு பிளஸ்?

எனக்கு இரண்டுமே பிளஸ்ன்னு நினைக்கிறேன். இது இரண்டும் இருந்தால் தான், நாம சினிமாவில் நிற்க முடியும்; திரையில் நான் வரும்போது, உங்களை அறியாமல் சிரிப்பு வரணும். ஒருத்தரை சிரிக்க வைக்கிறது, அவ்ளோ ஈசியான விஷயம் இல்லை.

நடிகைகளுக்குள் அவ்வளவாக நட்பு இல்லையே?

அது உண்மை தான்; யார்கிட்டேயும் இப்போது நட்பு இல்லை. கேரவன் கலாசாரம் ஆகிடுச்சி. படப்பிடிப்பின் போது, மரத்தடி, திண்ணை, தெரு, தரையில் உட்கார்ந்து ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கிற நிலை போயிடுச்சு. டெக்னாலஜி வளர வளர, எல்லாமே மாறிட்டு வருது. முதல்ல இருந்த சினிமா உலகம் இப்ப இல்லை; நடிகைகள் பலரும் மாறிட்டாங்க. பல ஆண்டுகளுக்கு அப்புறம் கிட்டத்தட்ட, 15, 20 ஆண்டுகள் கழித்து, இப்ப தான் நான் கல்பனாவை பார்க்கிறேன். நாங்க இப்போது, இட்லி படத்தில் நடிக்கிறோம். இப்படி எல்லாரும் ஒரு வகையில் பிசியா இருக்காங்க; ஹலோ சொல்லிக்க எல்லாம் நேரம் இல்லை.

உங்களுக்கு பின், காமெடியில் எந்த நடிகையும் பேர் எடுக்கவில்லையே ஏன்?

பெண்கள் காமெடியில் நீடிக்கிறது, ரொம்ப கஷ்டம்.உள்ளுக்குள் காமெடி உணர்வு இயல்பா இருக்க வேண்டும். ஆச்சி மனோரமா காலத்தில், அவங்களுக்காக எழுதிய எழுத்தாளர்கள் இருந்தாங்க. நான் வரும்போது, எந்த எழுத்தாளர்களும் இல்லை; பல குட்டிக்கரணம் போட்டு தான் வந்தேன். எனக்கே இந்த நிலைமை என்றால், எனக்கப்புறம் வரப்போறவங்க நிலைமை எப்படி இருக்கும்?

காமெடி நடிகர்களுக்கு உரிய அங்கீகாரமோ, தேசிய விருதோ கிடைப்பதில்லையே ஏன்?

இதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு. காமெடி நடிகர்களுக்கு ஏன் விருது கொடுக்க மறுக்கின்றனர் என்பது புரியவில்லை. நான் மட்டும் பேசினால் போதாது; பலரும் பேச வேண்டும்.

தெலுங்கில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைக்குதா?

தெலுங்கில் ஒரு படத்தில், 50 காமெடி நடிகர்கள் கூட நடிக்கலாம்; எந்த பிரச்னையும்

வர்றதில்லை. தமிழில், இரண்டு காமெடி நடிகர்கள் சேர்ந்து நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அங்குள்ள ஒற்றுமை, இங்கே இல்லை. நமக்கு போட்டியாக, அந்த நடிகர் வந்து விடுவாரோ, இந்த நடிகர் வந்து விடுவாரோ என்ற பயம் தான் இதற்கு காரணம். இந்த பயமே தேவை இல்லை; நமக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு, கண்டிப்பாக கிடைக்கும்.

சினிமா தவிர?

சினிமாவை தவிர, வேற எதுவும் எனக்கு தெரியாது; அப்படி வாய்ப்பும் வந்ததில்லை. எனக்கான வேலைகள் எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நான் எதுக்காகவும், எந்த காரணத்துக்காகவும் யாரையும் நம்பி வாழ முடியாது; வாழ மாட்டேன். ஒருத்தரை நம்பி வாழ ஆரம்பித்தால், எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் கூட, அய்யோ, அவங்க இல்லையே என்ற வருத்தம் வர ஆரம்பிச்சிடும். அதனால், எப்பவும், நான் நானாகவே இருப்பேன்.

தனிமை வாழ்க்கையில் ரொம்ப பழகிட்டீங்க போல?

தனிமை எனக்கு இனிமை தான். நிறைய பேர் தனிமையைவிரக்தி என்று சொல்லுவாங்க. ஆனால், அதை அனுபவித்து பார்க்கும்போது தான் தெரியும்; அதில்எவ்வளவு சுகம் உள்ளது என்று. எனக்கு, இந்த தனிமை ரொம்பவே பழகி போயிடுச்சு.
- See more at: http://cinema.dinamalar.com/cinema-news/32220/special-report/Single-is-very-happy-says-Kovai-Sarala.htm#sthash.yoEViXES.dpuf