Thursday 12 November 2015

அமெரிக்காவிலும் தூங்காவனத்தை விரட்டும் வேதாளம்

தமிழ்நாடு முழுவதிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வேதாளம் படம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலாக சுமார் 20 கோடி ரூபாய் வரையில் வசூலித்திருக்கலாம் எனச் சொல்லப்படும் வேதாளம் படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் முதல் நாளைப் போலவே சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். தமிழ்நாடு வசூலைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் எந்திரன், கத்தி ஆகிய படங்களின் வசூல் சாதனையை வேதாளம் முறியடித்து விட்டது மட்டும் உண்மை என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதனிடையே, அமெரிக்கா என்றாலே அது கமல்ஹாசனின் கோட்டை என பட வெளியீட்டிற்கு முன்னர் சொன்னார்கள். ஆனால், அமெரிக்காவிலும் தூங்காவனம் படத்தை பின்னுக்குத் தள்ளி வேதாளம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமே இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“அமிஞ்சிக்கரையோ அமெரிக்காவோ தல தான் ஓபனிங்குக்கெல்லாம் ராஜா. அமெரிக்காவில் தூங்காவனம் படத்தின் வசூல் 87 திரையரங்குகளில் 76,115 டாலர்கள். வேதாளம் படத்தின் வசூல் 65 திரையரங்குகளில் 92,392 டாலர்கள்” என அறிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் வேதாளம் படத்தின் வசூலை தூங்காவனம் படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள். அஜித், விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கமல்ஹாசன் தன்னுடைய பட வெளியீட்டை தவிர்ப்பதே சிறந்தது என்று வினியோகஸ்தர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

No comments:

Post a Comment