மெல்லிசை மன்னர் ’மூன்று முடிச்சு’ படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். இரண்டு பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் கமலுக்குப் பாடினார். இன்றைக்கும்
‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்’ என்ற பாடலையும்
கொஞ்சம்கொஞ்சமாக ஜெயச்சந்திரன் குரலுக்கென தனிக்கூட்டம் உருவானது. ‘’ஜெயச்சந்திரனோட குரல்ல பாதி ஜேசுதாஸ் இருக்கார்; பாதி எஸ்பி.பி. இருக்கார்.
புதுமாதிரியா இருக்குப்பா அவரோட வாய்ஸ்’’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இளையராஜா வந்தார். எழுபதுகளின் மத்தியில் வந்த இளையராஜா, எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில்
‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.
‘சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடலை வழங்கினார். தொடர்ந்து, இளையராஜா தன் இசையில் எஸ்பி.பி-க்கு இந்தப் பாடல்தான், ஜேசுதாஸ் அண்ணாவுக்கு இந்தப் பாடல்தான், மலேசியா வாசுதேவனுக்கு இந்தப் பாடல்தான், எஸ்.என்.சுரேந்தருக்கு, தீபன் சக்கரவர்த்திக்கு, கிருஷ்ணசந்தருக்கு என்றெல்லாம் பாடல்களை வகைவகையாகக் கொடுத்தார்.
அந்தப் பட்டியலில் ஜெயச்சந்திரன், தனியிடம் பிடித்தார்.
பாரதிராஜாவின்
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்,
‘மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ’ என்ற பாடலில் ஸ்வர சஞ்சாரமெல்லாம் செய்து ஆலாபனைகளில் அசத்தி, ‘நீரோடை போலவே’ என்கிற வரிகளில், நம் கண்முன்னே நீரோடையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஜெயச்சந்திரன்.
டி.ராஜேந்தருக்கு எஸ்பி.பி-யின் குரல் மீது அதீத காதலே உண்டு. ஆனாலும் மற்ற குரல்களையும் அவர் ரசிக்காமல் இருந்ததில்லை. முதன்முதலாக இசையமைத்த
‘ஒருதலை ராகம்’ படத்திலேயே,
‘கடவுள் வாழும் கோயிலிலே கற்பூரதீபம்’ என்ற பாடலைக் கொடுத்தார். அவரின் குரலாலும் அந்தக் குரல் மூலம் நம்மைத் தொட்ட டி.ஆரின் வரிகளாலும் நாமே அழுது கரைந்தோம். ‘இரயில் பயணங்களில்’ படத்தில், ’வசந்தகாலங்கள் இசைந்து பாடுங்கள்’ என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம், அந்த ‘பெல்பாட்ட’ காலத்துக்குள் சென்று பயணிக்கத் தொடங்கிவிடுவோம்.
அப்படியொரு மாயாஜாலக் குரல் ஜெயச்சந்திரனுடையது!
கமலும் சுஜாதாவும் நடித்த ‘கடல்மீன்கள்’ படத்தில், இளையராஜா ஜெயச்சந்திரனுக்காக ஒருபாடலைக் கொடுத்தார். கிட்டத்தட்ட, ஜெயச்சந்திரனுக்காகவே ஸ்பெஷலாக டியூன் போட்டிருப்பாரோ என்றே தோன்றும்
‘தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்’ என்ற பாடல், நம்மையே தாலாட்டிவிடும். அதில் ‘சொர்க்கத்திலே இது முடிவானது சொர்க்கம் என்றே இது முடிவானது’ என்ற வரிகளை ஜெயச்சந்திரனின் குரலில் கேட்கும்போதே, சொர்க்கம் வந்து நம் வீட்டுவாசலின் கதவு தட்டும். அப்படியொரு ஏகாந்த சுகமான குரல் அது!
பாக்யராஜ் பாலக்காட்டு மாதவனாக நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில்
‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாடலைக் கேட்டால், நமக்கே காதல் பூ குலுங்கிக் குலுங்கிப் பூக்கும். ‘’எங்கிட்ட அஞ்சு டியூன் இருக்கு. அதை தனித்தனியா தரமாட்டேன். மொத்தமா ஒரே படத்துக்குத்தான் தருவேன்’’ என்று இளையராஜா, நீண்டநாட்களாக அந்த ஐந்து டியூன்களை அடைகாத்து வைத்திருக்க, ஆர்.சுந்தர்ராஜன், அந்த டியூன்களைத் தட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று
‘வைதேகி காத்திருந்தாள்’ உருவாக்கினார். ‘’இந்தா அஞ்சு டியூன், வைச்சிக்கோ’’ என்று இளையராஜா கொடுத்தார்.
‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ என்கிற பாடல், காதலர்களின் ஏக்கப் பாடல்.
‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா’ என்பது காதலின் துக்கப்பாடல்.
‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்கிற பாடல், காதலின் குதூகலம் உணர்த்திய பாடல். இந்த மூன்று பாடல்களும் முக்கனிச்சுவை. இந்த முக்கனிகளையும் ஜெயச்சந்திரனுக்கு... அவரின் பலாச்சுளைக் குரலுக்குமாக வழங்கினார்.
’ஆலிலையோ தொட ஆளில்லையோ’ எனும் வரிகளில் ஜீவனைக் குழைத்து தன் குரலில் தோய்த்துக் கொடுத்தார் ஜெயச்சந்திரன்.
’மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்’ என்றால் நாமே மயங்கித்தான் போனோம். இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில்,
‘சொல்லாமலே யார் பார்த்தது’ என்ற பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
No comments:
Post a Comment