Sunday 24 June 2018

எந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்!

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.


கவிஞரை நினைவு கூர்ந்து ஐரோப்பிய கண்ணதாசன் ரசிகர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு பிளாஷ் பேக் பதிவு:
தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர். இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை.
தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்சர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன். அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.


"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம். தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும். இது தான் கண்ணதாசனின் சிறப்பு.
''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத் தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.



No comments:

Post a Comment