Thursday 12 November 2015

தூங்காவனம் படத்தில் குறையே இல்லையா?



வேதாளம் படம் பற்றியும், தூங்காவனம் படம் பற்றியும் வெளியாகியுள்ள விமர்சனங்களைப் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இரண்டு படங்களையும் பலரும் இருவேறு விதமாக விமர்சித்துள்ளார்கள் என்ற பேச்சுதான் அதிகம் எழுந்துள்ளது. வேதாளம் படம் பற்றி சொல்ல வேண்டாம், அது பக்கா மசாலாப் படம். அந்த மாதிரிப் படங்களில் என்ன குறை இருந்தாலும் ரசிகர்கள் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள். அப்படிப்பட்ட படங்களில் லாஜிக் மீறல்களைப் பற்றியும் பெரிதாகப் பேச மாட்டார்கள். அப்படியே அந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும் அஜித் ரசிகர்கள் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் படம் இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாக நகர்ந்து ரசிக்க வைக்கிறதா என்று மட்டுமே பார்ப்பார்கள்.

ஆனால், தூங்காவனம் படத்தை அப்படிப் பார்க்க மாட்டார்கள். அது கமல்ஹாசனின் படம். தமிழ் சினிமாவில் எந்த குறையும் அதிகமில்லாத படங்களைக் கொடுப்பவர், சினிமாவின் காதலர் எனப் பெயரை எடுத்தவர். படத்திற்கு ராஜேஷ் எம் செல்வாதான் இயக்குனர் என்றாலும் எப்படியும் கமல்ஹாசன் தலையீடு என்பது காட்சிக்குக் காட்சி இருந்திருக்கும். பலரும் தூங்காவனம் படத்தை கிளாஸ் படம் என்கிறார்கள். ஆனால், அந்த கிளாஸ் படத்திலும் குறிப்பிட வேண்டிய பல குறைகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் சாதாரண ரசிகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

கதை நடக்கும் அந்த ஹோட்டல் கிளப்பில் என்னதான் சண்டை, துப்பாக்கிச் சூடு நடந்தாலும் நடனமாடிக் கொண்டிருப்பவர்களும், விளையாடிக் கொண்டிருப்பவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். மூன்று முக்கியமான போலீஸ் அதிகாரிகள் ஹோட்டலுக்கு நுழைந்தது அங்குள்ள செக்யூரிட்டிகளுக்குத் தெரிந்தும் அவர்கள் ஓனரான பிரகாஷ்ராஜிடம் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் ரூமுக்கு வெளியே தவிர வேறு எங்குமே சிசி டிவி காமிரா இல்லவே இல்லை. கிஷோர் போதைப் பொருளைக் கைப்பற்றியும் ஹோட்டலுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். தன்னைத் துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க முன் பின் தெரியாத மதுஷாலினிக்கு பல முறை கமல்ஹாசன் முத்தம் கொடுத்து முகத்தை மறைத்துத் தப்பிப்பதெல்லாம் ரொம்ப டூ மச் என்கிறார்கள்.

காசு கொடுத்து வாங்கிதானே கமல்ஹாசன் காப்பி அடித்துள்ளார், அதை கொஞ்சம் சரி செய்து காப்பி அடித்திருக்கலாமே என்கிறார்கள் ரசிகர்கள்.

2 comments:

  1. தங்கள் பகிர்வுக்கு நன்றி

    thanku
    sara


    ReplyDelete
  2. காசு கொடுத்து வாங்கிதானே கமல்ஹாசன் காப்பி அடித்துள்ளார், அதை கொஞ்சம் சரி செய்து காப்பி அடித்திருக்கலாமே என்கிறார்கள் ரசிகர்கள். hahaha...
    Joshva

    ReplyDelete