Monday, 26 November 2018

சமாதானம் : மீண்டும் துவங்குகிறது புலிகேசி.?

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து, 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதாவது, 'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்தை சிம்பு தேவன் இயக்கத்தில் முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கரே தயாரிக்க முன் வந்தார்.



முதல் பாகத்தில் நடித்த வடிவேலுவையே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இப்படத்தின் படப்பிடிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்கங்களும் அமைக்கபப்ட்டன. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே வடிவேலு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் வடிவேலு.

இதனை தொடர்ந்து வடிவேலு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வடிவேலு மீது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தக்க நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது என்றும், இப்படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்றும் தகவல் வெளியானது.

லைகா நிறுவனம் மூலம் சமாதானம் நடந்து வருவதாகவும், இதனால் ஷங்கர், சிம்புதேவன், வடிவேலு கூட்டணியில் 'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது!

No comments:

Post a Comment