Thursday, 19 October 2017

பிரசாந்துக்கு ஜோடியான சஞ்சிதா ஷெட்டி

ஒருகாலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எல்லாம் பார்த்து பயப்படும் அளவுக்கு ஹிட் படங்கள் கொடுத்தவர். ஆனால், அவருக்கு தற்போது மார்க்கெட் சுத்தமாக இல்லை. இருந்தாலும், ஹீரோவாக நடித்தே தீருவேன் என்று சொல்லி சொந்தக் காசை செலவழித்து வருகிறார்.



தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச் செல்வன், இந்தப் படத்தை இயக்குகிறார். பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். பிரபு, ஆனந்தராஜ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ என்ற படத்தின் ரீமேக் இது.

No comments:

Post a Comment