Sunday, 1 April 2012

ஐரோப்பா செல்லும் முகமூடி டீம்



சூப்பர் ஹீரோ கதையான முகமூடியின் கிளைமாக்ஸை காரைக்காலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் படத்தின் பாடல் காட்சிக்கு தமிழ் சினிமா மரபு மாறாமல் வெளிநாடு செல்கிறார்கள். அனேகமாக ஐரோப்பா.

யு டிவி தயா‌ரிக்கும் இந்த சூப்பர் ஹீரோ சினிமாவின் டாக்கி போர்ஷன் முடிவுக்கு வந்துள்ளதாகவும், கிளைமாக்ஸும் பாடல் காட்சியும் மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும் எனவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட், கதையுடன் ஒப்பிட்டால் இது அதிவேகம்.

பொதுவாக பாடல் காட்சியில் அக்கறை காட்டாதவர் மிஷ்கின். ஹீரோ, ஹீரோயின், இரண்டு சைக்கிள், ஒரு டஜன் கலர் பலூன்கள், அரை டஜன் குழந்தைகளுடன் பாடல் காட்சியை முடித்துக் கொள்கிறவர். குத்துப் பாடல் என்றால் மஞ்சள் சேலை கட்டிய டான்சர், பத்து பீர் பாட்டில்கள், டாஸ்மாக் பே‌க்ரவுண்ட்... பாடல் முடிந்தது.

பெ‌ரிய பட்ஜெட் படம் என்பதால் முதல் முறையாக வெளிநாடு செல்கிறார். வழக்கம் போல தெருமுனையில் ஹீரோவையும், ஹீரோயினையும் ஆடவிட மாட்டார் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment