Sunday, 1 April 2012

விக்ரமை எனக்கு ரொம்போ பிடிக்கும்: எமி ஜாக்சன்



மதராசபட்டணம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து இந்தி , தெலுங்கு திரைப்படங்களில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

இந்தியில் கௌதம் மேனன் இயக்கத்தில் எக் தீவானா திரைப்படத்தில் நடித்துள்ள இவர், இயக்குனர் விஜய் இயக்கும் தாண்டவம் திரைப்படத்தில் விக்ரம் உடன் நடிக்கிறார்.

தாண்டவம் திரைப்படத்தில் நடிக்கும் அனுபவம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,
தாண்டவம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் கதையை சிறப்பாக வடிவமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், விக்ரம் ஐ தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் அண்மையில் நடித்த திரைப்படங்களில் அவரது திறமைகளை ரசித்ததாக தெரிவித்த அவர், தாண்டவம் திரைப்படத்தில் விக்ரம் தனக்கு மொழி தொடர்பில் நிறைய உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை சிறப்பாக கற்று, மொழி சார்ந்த திரைப்படங்களில் நடிக்க விருப்பப்படுவதாக மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment