Saturday, 31 March 2012

‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா?



இயக்குனர் எம் ராஜேஷ், நகைச்சுவையான படங்களை தேர்வு செய்து இயக்குபவர். ”சிவா மனசுல சக்தி”, ”பாஸ் என்கிற பஸ்கரன்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்பொழுது உதயநிதி ஸ்ராலின் ஐ வைத்து ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை இயக்குகிறர்.

இவரது அடுத்த திரைப்படம் ”ஆல் இன் அல் அழகு ராஜா”. இதில் முன்னனி நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.

இதற்கிடையில், ”பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தை பார்த்த அஜித், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படத்துக்கான கதையை தான் நடிப்பதற்காக தயார் செய்யுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டாராம். அதற்காக தயார் செய்யப்பட்ட கதை தான் ‘ஆல் இன் அல் அழகு ராஜா”. அஜித் பில்லா II இல் பிசியாக இருப்பதால் அக் கதைக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் என இயக்குனர் எம் ராஜேஷ் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக செய்தி கசிந்துள்ளது.

பில்லா II முடிந்ததும், இன்னோர் கதையுடன் தல யை எம் ராஜேஷ் அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment