Friday, 30 March 2012

பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா!



தெலுங்கு படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக நடிக்க இருக்கிறார் ஸ்ரேயா. சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற வெற்றிப்படங்கலில் நடித்திருக்கும் ஸ்ரேயா, இத் திரைப்படத்தின் கதை பிடித்திருந்ததால் இத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைஉலகின் பிரபல இயக்குனர் ஷன்டு, குறித்த பாலியல் தொழிலாளி பாத்திரத்துக்கு ஸ்ரேயா தான் பொருத்தமானவர் என்று ஸ்ரேயாவை அணுகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் திரைப்படம், ஸ்ரேயாவின் திறமைக்கு சவாலாக அமையும் என இயக்குனர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் பாலியல் தொழிலாளி, பாடகர், எழுட்தாளர் என்பவர்களுக்கிடையில் உள்ள உறவை மையமாக வைத்து படமாக்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தை தமிழ் நடிகைகள் புறக்கணித்து வந்த நிலையில், ‘வானம்” திரைப்படம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment