Sunday, 18 March 2012

ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...!



காதலர்களாக வலம் வந்து பின்னர் பிரிந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன் ஜோடி இப்போது, ஹன்சிகா துணையோடு மீண்டும் திரையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓ மை ப்ரண்ட். வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் இப்போது தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது ஸ்ருதி மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கும் தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இப்படி மூவருக்குமே நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். படத்தில் சித்தார்த்தும், ஹன்சிகாவும் தான் காதலர்கள், ஸ்ருதிஹாசன் சித்தார்த்தின் நண்பராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment