Saturday, 31 March 2012

‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா?இயக்குனர் எம் ராஜேஷ், நகைச்சுவையான படங்களை தேர்வு செய்து இயக்குபவர். ”சிவா மனசுல சக்தி”, ”பாஸ் என்கிற பஸ்கரன்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தற்பொழுது உதயநிதி ஸ்ராலின் ஐ வைத்து ”ஒரு கல் ஒரு கண்ணாடி” திரைப்படத்தை இயக்குகிறர்.

இவரது அடுத்த திரைப்படம் ”ஆல் இன் அல் அழகு ராஜா”. இதில் முன்னனி நாயகனாக கார்த்தி நடிக்கிறார்.

இதற்கிடையில், ”பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தை பார்த்த அஜித், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படத்துக்கான கதையை தான் நடிப்பதற்காக தயார் செய்யுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டாராம். அதற்காக தயார் செய்யப்பட்ட கதை தான் ‘ஆல் இன் அல் அழகு ராஜா”. அஜித் பில்லா II இல் பிசியாக இருப்பதால் அக் கதைக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் என இயக்குனர் எம் ராஜேஷ் தனக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக செய்தி கசிந்துள்ளது.

பில்லா II முடிந்ததும், இன்னோர் கதையுடன் தல யை எம் ராஜேஷ் அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றானில் வில்லனாக சூர்யா!தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கான தமிழ் மசாலா சினிமா ஃபார்முலாவில் குறைந்தது அரைடஜன் வில்லன்களை
வைத்து கதை பின்னுவதை வழக்கமாக்கி விட்டார்கள். கோச்சடையன் 3டி அனிமேஷன் படமும் இதற்கு விதிவிலக்கு கிடையாதாம். இந்தப் படத்தில் ரஜினிக்கு மொத்தம் ஆறு வில்லன்கள்.

அதேபோல விஜய் நடித்து வரும் துப்பாக்கியில் பிரதான வில்லனை அடையும் முன்பு, மூன்று கொடூரமான தாதா வில்லன்களை, மிக புத்திசாலித்தனமாக திட்டம் தீட்டி போட்டு தள்ளும் விஜய் இறுதியில் போட்டுத்தள்ளும் வில்லனை சோட்டா சகில் போல சித்தரித்திருக்கிறாராம் ஏ.ஆர் முருகதாஸ்.

இது ஒருபுறம் இருக்க தற்போது கோடம்பாக்கத்தின் மிகப்பரிய எதிர்பார்பாக இருந்து வரும் ‘ மாற்றான்’ படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வில்லை என்று மறுத்திருக்கும் இயகுனர் கே.வி.ஆனந்த அந்தப் படத்தில் சூர்யாவும் ஒரு வில்லன் என்பதை மட்டும் மறைத்து விட்டார் என்கிறார்கள் சூர்யா வட்டாத்தில்!

மாற்றானில் கௌதம் வாசுதேவ் மேனன் அறிமுகப்படுத்திய மூன்றுபேர் வில்லனாக நடிக்கிறார்கள். ஒருவர் நடுநிசிநாய்கள் படத்தில் அறிமுகமான வீரா, மற்றொருவர் பச்சைக்கிளி முத்துச்சரம் மிலிந் சோமன், முன்றாமவர் காக்க காக்க டேனியல் பாலாஜி! இவர்களோடு நான்காவதாக சூர்யாவும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது திரைக்கதையின்படி இந்தப் படத்தில் சூர்யா ஏற்றிருப்பது வில்லன் கதாபாத்திரம்தானாம்!

Friday, 30 March 2012

பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா!தெலுங்கு படம் ஒன்றில் பாலியல் தொழிலாளியாக நடிக்க இருக்கிறார் ஸ்ரேயா. சிவாஜி, அழகிய தமிழ் மகன் போன்ற வெற்றிப்படங்கலில் நடித்திருக்கும் ஸ்ரேயா, இத் திரைப்படத்தின் கதை பிடித்திருந்ததால் இத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைஉலகின் பிரபல இயக்குனர் ஷன்டு, குறித்த பாலியல் தொழிலாளி பாத்திரத்துக்கு ஸ்ரேயா தான் பொருத்தமானவர் என்று ஸ்ரேயாவை அணுகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத் திரைப்படம், ஸ்ரேயாவின் திறமைக்கு சவாலாக அமையும் என இயக்குனர் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் பாலியல் தொழிலாளி, பாடகர், எழுட்தாளர் என்பவர்களுக்கிடையில் உள்ள உறவை மையமாக வைத்து படமாக்கப்படுகிறது.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தை தமிழ் நடிகைகள் புறக்கணித்து வந்த நிலையில், ‘வானம்” திரைப்படம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 29 March 2012

பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொமான்ஸ் காட்சி!
பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி.

முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.

ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார் நயன். தமிழ் - தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்திலும் இவர்தான் நாயகி.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் மெகா படத்திலும் நயன்தான் நாயகி.

11 மாத இடைவெளிக்குப் பிறகு பரபரப்பாக தனது அடுத்த ரவுண்டைத் தொடங்கியிருக்கும் நயன்தாராவிடம் அதுகுறித்துக் கேட்டால், "நடிப்பை நான் ரசித்து அனுபவிக்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு மறக்க முடியாததாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

Wednesday, 28 March 2012

விஜய்யுடன் சேரும் விஜய்!ஆக்ஷன், அதிரடி கலந்த மசாலா படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார் விஜய்.நடுவில் ‘காவலன்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களின் வரவேற்பை தொடர்ந்து  நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன் என்று நிரூபித்தார்.
‘காவலன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் படங்களை பார்த்தால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை விட தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜய்யின் ஆக்ஷன், ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகிய இரண்டையும் கலந்து விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது ‘துப்பாக்கி’.
அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ யோஹன் ‘ படத்தில் விஜய்யை ஸ்டைலிஷான ஆக்ஷன் கதையின் நாயகனாக ஆக்கி இருக்கிறார் கெளதம்.

இயக்குனர் விஜய்யுடன் விஜய் சேரும் படமும் ஆக்ஷன் கதை தான்.

Tuesday, 27 March 2012

காலம் போன காலத்தில் செக்ஸி உடையா?- ஸ்ரீதேவிக்கு கண்டனம்முன்னாள் நடிகையாகிவிட்ட ஸ்ரீதேவி, இப்போது தன் மகளை நடிகையாக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

மூத்த மகள் ஜானவியை விதவிதமாக அழகுபடுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் ஸ்ரீதேவி, மகளை விட செக்ஸியான உடைகளில் விழாக்களில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் கூட மும்பையில் நடந்த கவர்ச்சி பேஷன் ஷோவில், இளம் பெண்கள் அணியும் சிறிய உடைகளை அணிந்து நடைபோட்டார் ஸ்ரீதேவி. இது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

ஸ்ரீதேவியின் இந்த உடையும் நடையும் மகளிர் அமைப்புகளைக் கடுப்பேற்றியுள்ளன.

"நடிகையாக இருந்தவரை அவரது உடை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இப்போது அவர் இரு பெண்களின் தாய். இத்தனை வயதுக்குப் பிறகு, செக்ஸியாக உடை அணிந்து பொது இடங்களில் ஆட்டம் போடுவது அருவருப்பான விஷயம். ஸ்ரீதேவிக்கு இது ஏன் புரியவில்லை," என்று மும்பை மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Monday, 26 March 2012

சிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி!கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்! ஆனால் நயன்தாரா தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழிகளில் தயாராக இருக்கிறது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘வடசென்னை’. ஆனால் இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு, வெற்றிமாறன் புதிதாக தொடங்கியிருக்கும் ‘க்ராஸ் ரூட் புரடெக்ஷன்’ என்ற தனது சொந்த பட நிறுவனத்தின் மூலம் சித்தார்த்- புதுமுகம் அர்ஜிதா ஜோடியை வைத்து ‘தேசிய நெடுஞ்சாலை 45′ என்ற படத்தை துரை.தயாநிதியுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது உதவியாளர் மணிகண்டனுக்கு கொடுத்திருக்கும் வெற்றிமாறன், இன்னொரு பக்கம் ‘வடசென்னை’ படத்துக்கு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பதுதான் நம்பகமான வெற்றிமாறன் வட்டாரம் நமக்குத்தரும் தகவல். சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார்.

தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில்  தன்னம்பிக்கையொடு தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தும் நயன்தாரா, சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் சம்பளம் இரண்டு மடங்காக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாராம். அதாவது நயன் தமிழ், தெலுங்கு இரண்டுக்குமாக 1.50 கோடி கேட்கிறாராம். இந்த சம்பள விவகாரத்தை தற்போது டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பதாக தகவல் தருகிறார்கள். இந்த ஜோடி மீண்டும் சேர்ந்தால் படத்துக்கு வேறு விளம்பரமே தேவையில்லை என்பதால், இந்த சம்பளத்தை நயனுக்கு கொடுத்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் கொள்ளத்தேவையில்லை.

சந்தடிச்சாக்கில் தனது ‘லவ் ஆந்தத்தில் தலைகாட்ட முடியுமா என்று கேட்க.. அதற்கெல்லாம் நேரமில்லை’ என்று கறாராக சொல்லி விட்டாராம் நயன்! என்னங்க நடக்குது… கலி முத்திப்போச்சானு அப்ப அப்ப கிள்ளி பார்த்துக்க வேண்டியதுதான்!

Sunday, 25 March 2012

பாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் ககானிவித்யாபாலன் நடித்த Kahaani பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் எதிர்பாராத சர்ப்ரைஸ். இந்த க்ரைம் த்‌ரில்லர் படம் இரண்டாவது வார இறுதியில் 43.05 கோடிகளை வசூலித்துள்ளது.

கதையையும், ஸ்கி‌ரிப்டையும் நம்பினால் பெ‌ரிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை என்பது சமீபத்திய தமிழ் உதாரணம் மௌனகுரு. இந்தியில் ககானி. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருக்கும் இந்தப் படம் அவ‌ரின் இமேஜை அதிக‌ரித்திருக்கிறது. இவ‌ரின் டர்ட்டி பிக்சர்ஸ், ககானி இரண்டும் சூப்பர்ஹிட். அதுவும் அடுத்தடுத்து. இரண்டுமே ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட்.

க‌‌ரீனா, கத்‌ரினாவை மறந்து விதயாபாலன் என்று முணுமுணுக்கிறது ரசிகப் பட்டாளம். முக்கியமாக அமீர்கானை இப்படத்தின் வெற்றி பாதித்திருக்கிறது. இவ‌ரின் அடுத்தப் படம் தல்லாஸும் இதேபோலொரு க்ரைம் த்‌ரில்லர். அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த தனது படத்தை நவம்பருக்கு அமீர் தள்ளி வைத்துள்ளார்.

அமீரையே பயப்பட வைத்த வித்யாபாலன் இந்தியில் அறிமுகமாவதற்கு முன் நடிக்கத் தெ‌ரியவில்லை என்று ஒருமுறையும், ரொம்ப சுமார் அழகி என இன்னொருமுறையும் தமிழ்‌த் திரையுலகால் நிராக‌ரிக்கப்பட்டவர்.

நமிதாக்கள் கோலோச்சும் ஊ‌ரில் நடிக்கத் தெ‌ரிந்தவருக்கு என்ன வேலை.

Saturday, 24 March 2012

படத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க... - மனமிரங்கிய ஸ்ரேயாமியாவ் மியாவ் பூனை, குறுக்க நடந்த பூனை என்று விவேகாவை விட்டே மறுபடியும் பாட்டெழுதுகிற அளவுக்கு ஒரு டப்பிங் படத்திற்கு சகுனத்தடை ஏற்படுத்தினார் ஸ்ரேயா. வாங்கிய சம்பளத்திற்கு நடித்தோமா, நடையை கட்டினோமா என்றில்லாமல் தான் நடித்த படத்தை டப்பிங் செய்து வேறு லாங்குவேஜில் வெளியிடக்கூடாது என்று சட்டம் பேசுவதெல்லாம் சரியா? ஆனால் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரேயா.

இவர் மலையாளத்தில் நடித்த ராஜா போக்கிரி ராஜா படம் தமிழிலும் அதே பெயரில் டப் ஆகி வெளிவரப் போகிறது. இதையறிந்த ஸ்ரேயா, இப்படத்தை வாங்கி வெளியிடும் மலேசியா பாண்டியன் என்வரை எதிர்த்து கோர்ட் வரைக்கும் போவேன் என்று மிரட்டியதோடு பிலிம் சேம்பரிலும் புகார் கொடுத்து விட்டார். (ஒரிஜனல் தயாரிப்பாளர் தாமஸ்) அதோடு விட்டாரா? நடிகர் சங்கத்திலும் ஒரு புகாரை தட்டிவிட்டார். அதன்பின் படத்தை வெளியிடுகிற வேலையை விட்டுவிட்டு பஞ்சாயத்துக்கு அலைவதே பெரிய வேலையாக இருந்தது மலேசியாக்காரருக்கு.

இந்த நிலையில்தான் சாமியேறிய ஆத்தா சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறது. சாட்சிக்காரர்கள் காலில் விழுவதைவிட ஸ்ரேயாவிடமே பேசிவிடலாம் என்று நினைத்தாராம் மலேசியா பாண்டியன். அதுதான் வொர்க்கவுட் ஆனது இறுதியில். பாண்டியனின் உருக்கமான பேச்சுக்கு செவிமடுத்த ஸ்ரேயா, நோ அப்ஜெக்ஷன் சொல்லிவிட்டார் இப்போது.

இவர் மீது கொடுத்திருந்த புகாரையும் வாபஸ் வாங்கிவிட்டார். என்னோட அடுத்த படத்தில் ஸ்ரேயாதான் ஹீரோயின் என்று சொக்காயெல்லாம் ஈரமாகிற அளவுக்கு நெக்குருகி பேசுகிறார் மலேசியா பாண்டியன்.

பாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல! – ப்ரியாமணிபொதுவாக தென்னிந்திய நடிகைகளின் முதல் விருப்பம் தமிழில் அறிமுக வேண்டும், அடுத்து தெலுங்குக்குப் போக வேண்டும், பின்னர் பாலிவுட்டில் செட்டிலாக வேண்டும். வாய்ப்புகள் இல்லாமல் போனால் மலையாளம், கன்னடத்தில் கலைச்சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.தேசிய விருது பெற்ற ப்ரியா மணியும் அந்த ரகம்தான். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். எங்கு போனாலும், அதற்குத் தகுந்த மாதிரி தன்னைத் தயார் செய்து கொண்டு போவதே அவர் விருப்பமாம்.

பாலிவுட்டில் ஏற்கெனவே இரு படங்களில் நடித்த அனுபவம் ப்ரியாமணிக்கு உண்டு. அந்த அனுபவம் தந்த பாடமோ என்னமோ… புதிதாக வந்த இந்திப் பட வாய்ப்பு ஒன்றை மறுத்துவிட்டாராம். தேஷ்துரோஹி 2 படத்தில் மோனிகா பேடி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்களாம். ஆனால் வேண்டாம் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் ப்ரியா மணி.

இதுகுறித்துக் கேட்டபோது, ” பாலிவுட்டில் நுழைவதற்கு இப்போது நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்,” என்றார்.

Thursday, 22 March 2012

ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.

வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.

Wednesday, 21 March 2012

ஆர்யாவின் 'ரகசிய' வீட்டில் நயன்தாரா!நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா.

பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார்.

ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்?

இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாராம் ஆர்யா.

விருப்பத்தை நயனிடம் சொன்னதும், அதுக்கென்ன வந்துட்டா போச்சி என அடுத்த நாளே வீட்டுக்கு வந்துவிட்டாராம் 'சேச்சி'!

இன்னும் சில நெருங்கிய நண்பர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாராம் ஆர்யா. அனைவர் முன்னிலையிலும் நயன் குத்துவிளக்கேற்ற, குடித்தனத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா.

நயன், குத்துவிளக்கு, குடித்தனம் என்ற வார்த்தைகளை நீங்களாக முடிச்சுப் போட்டு புது அர்த்தம் கற்பித்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!!

Tuesday, 20 March 2012

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் நயன்தாரா!கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.
ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.

தமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல்தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஹீரோயின¢ ஆனார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது. அவர் கால்ஷீட் ஒதுக்கி தர இருந்தார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு படம் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்ததால் ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு புதுமுகங்களை அழைத்து தேர்வும் நடந்தது. ஆனால் பொருத்தமான ஹீரோயின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் இருந்து தூது வரவே இயக்குனர் அவரிடம் பேசினார். ஏற்கனவே ‘பிசினஸ்மேன்Õ என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்திருந்ததால் இதிலும் அவர் ஜோடி சேர மகேஷ் பாபு சம்மதித்தார். உடனடியாக கால்ஷீட் வழங்கினார் காஜல். இதையடுத்து ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமன்னா வாய்ப்பை காஜல் பறித்திருப்பதால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!போக்கிரி திரைப்படத்தில் விஜய் பொலீசாக இருந்த போதும், அவர் சீருடையுடன் நடிக்கவில்லை. பொதுவாக விஜய் திரைப்படங்களில் சீருடை அணிவதை தவிர்த்து வருபவர் அதாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் துப்பாக்கியில் சீருடையுடன் நடிக்கிறார் இளைய தளபதி. இப் படத்தில் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படியென்றால்: ஒரு சீனில் காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சியிலும் கூட இராணுவ சீருடையுடன்தான் நடித்திருக்கிறாராம் விஜய்.

Monday, 19 March 2012

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனைஅடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.

Sunday, 18 March 2012

ஜீரோ சைஸ் அசின்
நம்பினால் நம்புங்க. நம்ம ஊரு அசின்தான் இது. ஊசிமரக்காட்டில் பாசி விற்க போனவர் மாதிரி இதென்ன 'துக்கடா' கோலம் என்று மாரிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அவரது ரசிகர்களுக்கு... இதுதான் இப்போது ஃபேஷன் சாமிகளா! இதுக்கு பேரு ஜீரோ சைஸ்சாம். (ஒரு பூச்செண்டு பீரோவை இப்படி ஜீரோவாக்கி பார்ப்பதில் அப்படி என்னங்கடா சுகத்தை கண்டீங்க?)

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்த அசினை யாரோ வயிற்றுப் பசிக்கு ஓசி சோறு தின்ன வந்த பெண்ணாக இருக்கும் என்கிற ரேஞ்சிலேயே கிராஸ் பண்ணியதாம் மொத்த கூட்டமும். யாரோ ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அசினுடோய்.... என்று குரல் கொடுத்த பின்புதான் ஆட்டோகிராப், போட்டோக்கள் என்று அமர்க்களப்பட்டதாம் அந்த இடம்.

ரொம்ப கஷ்டப்பட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். அதுக்குள்ளே ஊசி மூலம் கொழுப்பை குறைச்சிட்டேன்னு எழுதிராதீங்க. அவ்வளவும் வொர்க் அவுட் பண்ணி இளைச்சது தெரியுமா என்று அந்த இடத்திலேயே கண்ணுக்கு தெரியாத தன் குருவி முட்டை சைஸ் முண்டாவை தட்டிக் காட்டினாராம் அசின்.
என்னத்தை செய்ய? சிலருக்கு எலும்புக்கறிதானே பிடிக்குது!

ஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன்...!காதலர்களாக வலம் வந்து பின்னர் பிரிந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன் ஜோடி இப்போது, ஹன்சிகா துணையோடு மீண்டும் திரையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓ மை ப்ரண்ட். வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் இப்போது தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது ஸ்ருதி மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கும் தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இப்படி மூவருக்குமே நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். படத்தில் சித்தார்த்தும், ஹன்சிகாவும் தான் காதலர்கள், ஸ்ருதிஹாசன் சித்தார்த்தின் நண்பராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி
கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.

படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்.